Friday 10 November 2017

திருப்பூர் நல்லாறு பாதுகாப்புக்குழு கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம்.

முக்கிய அறிவிப்பு.

அவசர அவசிய.அழைப்பிதழ்!

" நல்லாறு பாதுகாப்புக்குழு " முதல் கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம்.

திருப்பூர் வழியாக செல்லும் நல்லாறு மாசடைந்து கெட்ட ஆறாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதனால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் உள்ள அரசுத்துறை அதிகாரிகளின் அலச்சிய போக்கினாலும், அரசியலமைப்பு சாசன படி மக்களாகிய  நாமும் நமது கடமையை சிறப்புடன் ஆற்றாத காரணத்தினாலும் தான் நல்லாற்றினை மாசடைய செய்து நமக்கு நாமே சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்தி கொண்டுள்ளோம்.

நாம் பயன் படுத்த முடியாமல் போன நல்லாற்றினை எதிர் கால நம் சந்ததியினராவது பயன் படுத்திடவும், விவசாயம் செழித்திடவும் நாம் இப்போதே முழு முயற்சி எடுத்திட வேண்டிய சூழ் நிலையில் உள்ளோம்.

இதற்கு தீர்வு தான் என்ன? 

நல்லாறு உற்பத்தியாகி சென்றடையும் இடம் வரையில் உள்ள நீர் வழித்தடங்களில் காணப்படும் அனைத்து கழிவுகளையும்,  ஆக்கிரமிப்புகளையும் முற்றிலும் அகற்றி தூர்வாரப்பட வேண்டும்.

கழிவு நீர், சாய ஆலை கழிவுநீர் மாமிச கழிவுகள்,  குப்பை கூழங்கள் கொட்டப்படுவதினை முதலில் நாம் தடுத்தாக வேண்டும்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  சார்பாகவும் விரைவில் இதற்கான குழு அமைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதன் முதல் முயற்சியாக நல்லாறு பாதுகாப்பு குழு  கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

எனவே,
நண்பர்களே,
சமூக ஆர்வலர்களே,
சுற்று சூழல் ஆர்வலர்களே ,
இயற்கை ஆர்வலர்களே,
தன்னார்வலர்களே,
ஆன்றோர்களே,
சான்றோர்களே,
பெரியோர்களே,
தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களே,
சமூக அமைப்புகளை சார்ந்தவர்களே,
பொது மக்களே,
நீங்கள் அனைவரும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு உங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கி வழி நடத்திட  வாருங்கள் என இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 12.11.2017

நேரம் : காலை 10. 00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையில்

இடம் : தலைமை அலுவலகம்
            சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல்
            ஒழிப்பு அமைப்பு
            363, காந்தி ரோடு,
            பெரியார் காலனி
            திருப்பூர் -641 652

தொடர்புக்கு :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

ஆ. பழனிக்குமார்
ஒருங்கிணைப்பாளர்
உலாபேசி :97910 50513

குறிப்பு :  நல்லாறு பாதுகாப்புக்குழு
வாட்ஸ் ஆப் குரூப்பில்  இணைந்து       களப்பணி ஆற்ற ஆர்வம் உள்ள நண்பர்கள் "நல்லாறு " என டைப் செய்து உங்கள் பெயர், முகவரி, வாட்ஸ் ஆப் எண்ணுடன் 98655 90723 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment