Sunday 14 October 2018

ஊழல் ஒழிப்பு செய்தி /0030 குற்றவாளியை தேடி வந்தது குறித்து முகநூலில் பதிவிட்ட காவல் ஊழியர்!

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்நாடு திருப்பூர் மாநகர  காவல் துறையின் பார் போற்றும் சாதனை!!

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO / 030 /18.10.2018

குற்றம் நடந்து கொண்டிருப்பது  என்ன?

உண்மை சம்பவம்!!

வாழ்த்து மழையில் நனையும் காவலூழியர்!

முகநூலில்  குவியும்  பாராட்டுக்கள்!

நிற்க.........!!

அரசுத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வும் ஏமாற்று வித்தையும்!

அரசு பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதினை முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு வருவது வழக்கம்.

தலைமை ஆசிரியரும் மாணவ மாணவிகள் அனைவரிடமும் அன்றைய தினம் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் குளித்து, தலை வாரி, பவுடர் பூசி,  சுத்தமான ஆடை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்பார் .
அன்றைய தினம் ஒருநாள் மட்டும் பள்ளியை சுத்தமாக வைத்திருப்பார்கள்.

ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரியும் காப்பி பஜ்ஜி சாப்பிட்டு விட்டு ஆஹா ! ஓஹோ ! என தலைமை ஆசிரியரை பாராட்டி விட்டு சென்று விடுவார்.

தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து கூடுதலான கல்வி கட்டணம் வசூலித்து விட்டு  ஆய்வுக்கு வரும் கல்வி அதிகாரிகளிடம்  பள்ளி நிர்வாகிகள் எந்தவிதமான கல்விக்கட்டணமும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க வில்லை என பொய் சொல்ல சொல்வதுடன் எழுத்து மூலமாக கடிதமும் வாங்கி விடுவார்கள்.

விபரம் தெரிந்த பெற்றோர் கேட்டால் பணம் கொடுக்க வில்லை என சொன்னால் தான் அரசு எங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என நா கூசாமல் பொய் பேசுவார்கள்.

அதுபோல் நியாய விலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் விபரங்களை முன் கூட்டியே தினசரி  நாளிதழில் செய்தி கொடுப்பார்கள்.

அதன் படி அந்தந்த கடை ஊழியர்களும் பொருட்கள் இருப்பு மற்றும் வரவு செலவு கணக்குகள் பதிவேடுகளை தயார் நிலையில்  வைப்பதுடன் கடையையும் சுத்தமாக வைத்திருப்பார்கள்.
கள்ள சந்தையிலும் அன்றைய தினம் பொருட்களை விற்பனை செய்ய மாட்டார்கள்.

கூட்டு களவாணிகளே!!

இவ்வாறாக அரசு துறைகளில் அதிகாரிகள் ஆய்வு அல்லது ஆடிட்டிங் செய்ய வரும் விபரத்தினை முன் கூட்டியே தெரிவித்து விட்டு அவர்களை தயார் படுத்தி அரசையும் பொது மக்களையும் ஏமாற்றி கண்துடைப்புக்காக ஆய்வு செய்வது இன்றளவும் அனைத்து அரசுத்துறைகளிலும் தொடர்ந்து நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது.
இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகளே!

காவல் துறையிலும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதினையும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு தான் வருகின்றனர்.

இதற்கு பெயர் தான் ஆய்வா?

ISO தரச்சான்று பெற்ற அனைத்து  தொழிற்சாலைகளிலும் ஆய்வு அல்லது ஆடிட்டிங் செய்ய வருவதினை முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு தான் ஆய்வு செய்கின்றனர்.

அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் தரநிர்ணய கொள்கையின் படி தொழிற்சாலைகள் இயங்கும்.
ஆய்வுக்கு வரும் ஊழியர்களின் உதவியாளர்கள் தொழிலாளர்களிடம் தொழிற்சாலை உரிமையாளருக்கு ஆதரவாக பொய் பேச சொல்வார்.

தொழிலாளர்களும் உரிமையாளருக்கு ஆதரவாக பொய் சொல்வார்கள்.

திடீர் ஆய்வு என்ற செய்தியினை காண்பது மிகவும் அரிது.

அனைத்து அரசு துறைகளிலும் ஆய்வாளர் என்பவர்கள் இருப்பார்கள்.
ஆனால் இவர்களின் பெயர் தான் ஆய்வாளாரே ஒழிய எந்த விதமான ஆய்வினையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

இந்த அரசூழியர்கள்  கடமையினை ஓழுங்காக செய்தால் அனைத்து துறைகளும் லஞ்சம் ஊழல் இல்லாமல் சிறப்பாக செயல் படும்.

ஆனால் காவல் துறையில் மட்டும் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டு தலை மறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய இரகசியமாக
கண்காணித்து கைது செய்வார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி விமானத்தில் பறந்து சென்ற திருப்பூர்  மாநகர காவலூழியர்கள்!

விமானம் மூலம்  ஜார்கண்ட் மாநிலம் சென்று ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து முகநூலில் நேரலையில்  காணொலியில் பேசிய திருப்பூர்  அனுப்பர்பாளையம் காவலூழியர் முக்ரம் பட்டு Mukram batu!

Accused குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி ஜார்கண்ட்  மாநிலத்திற்கு விமானம் மூலம் வந்ததாகவும் ராஞ்சி விமான நிலையத்தில் அவருடன் அவரது தம்பியும் மற்றும் காவல் ஆய்வாளர் ஒருவரும் வந்திருப்பதாகவும் Accused ஐ தேடி கண்டு பிடித்து வெற்றியுடன் திரும்புவதாகவும் திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல்நிலைய காவலூழியர் Mukram batu என்பவர் முகநூலில் நேரடியாக காணொலியில் தகவல் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டபட்டவர் யார்?

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரா?

அல்லது தமிழகத்தில் இருந்து தப்பி சென்றவரா?

விமானத்தில் பறந்த செலவு யாருடையது.?

கிரிக்கெட் வீரர் டோணியை பார்த்தேன்.படம் பிடித்தேன்.

இந்த காவலூழியர்கள் அரசு செலவில் சுற்றுலா சென்றார்களா?

குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய சென்றார்களா?

குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி கண்டு பிடித்து கைது செய்து தமிழகம் கொண்டு வருவார்களா?
அல்லது

அங்கிருந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்
வேறு மாநிலம் தப்பி செல்வதற்காக தகவல் தெரிவித்திருப்பாரா!

என்ற ஐயப்பாடு எழுகிறது.

எப்படியோ Accused களை கைது செய்தால் கண்டிப்பாக முகநூலில் நேரலையில் கருத்து சொல்ல வருவார் .
நாமும் காத்திருப்போம்.

ஒரு வேளை Accused. அங்கிருந்து தப்பித்து விட்டால்  அதற்கு முழு பொறுப்பேற்று திருப்பூர் காலூழியர்கள் ஜார்காண்ட் மாநிலம் சென்ற விபரத்தினை பறை சாற்றி முகநூலில் நேரலையில் தகவல் தெரிவித்த காவலூழியர் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

இணைப்பு : காவலூழியரின் காணொலி காட்சியினை காண்க.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்.
உலாபேசி : 98655 90723

உண்மை சம்பவங்கள் தொடரும்.......!!

No comments:

Post a Comment