Friday 12 October 2018

நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் முக்கிய அறிவிப்பு!!

நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் முக்கிய அறிவிப்பு!

பொது நீர்நிலையான நல்லாற்றினை மாசு படுத்தி வரும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  மற்றும் பொது மக்களுக்கு ஓர் அன்பான அவசர அவசிய  வேண்டுகோள்!

நல்லாறு மாசடைந்து பொது சுகாதாரக்கேடு  ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவினாசி வட்டத்தில் இருந்து ஊத்துக்குளி வட்டம் நஞ்சராயன் குளம் வரை செல்லும் ஆறு தான் நல்லாறு.

திருப்பூர் சாய ஆலை சலவை ஆலை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த கழிவு நீரால் நல்லாறு நாசமாய் போய் விட்டது.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொது கழிவு நீர்கால்வாய் கழிவு நீரினை ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் கொண்டு சென்று நல்லாற்றில் விட்டு தொடர்ந்து நல்லாற்றினை மாசு படுத்தி வருவதுடன்  பொது சுகாதார கேட்டினையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதனை கண்காணித்து தடுக்க வேண்டிய திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மாசடைந்த வாரியமாக காட்சி அளிக்கிறது.

பொது மக்களுக்கு பொது சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்தி வருபவர்கள் மீது மாவட்ட சுகாதாரப்பணிகள் துறையினர் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை.

நல்லாற்றினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள திருப்பூர் பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறையினர் எங்கு இருக்கிறார்கள்  என்ன ஆனார்கள் எனத்தெரிய வில்லை.

நீர்நிலைகளை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு வகிக்கும்  மாவட்ட செயல் துறை நடுவர்களாகிய இது வரை திருப்பூர் மாவட்டத்தை ஆட்சி செய்த மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் செயல் இழந்து விட்டது தான் நல்லாறு மாசடைந்து நாசமாய் போனதிற்கு முக்கிய காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டினை பதிவு செய்கிறோம்.

திருப்பூர் மாவட்ட மாநகர காவல் துறையினர் பொது நீர்நிலையை மாசடைய செய்பவர்களை கண்டறிந்து எந்த ஒரு வழக்கும் பதிவு செய்வதில்லை .

கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர், சார் ஆட்சியர்  போன்றவர்களும் நல்லாற்றினை பாது காக்க தவறி விட்டனர்.

நல்லாற்றிலும் அதன் இருகரைகளிலும்
ஆக்கிரமிப்புகள்  ,
எங்கு நோக்கினும் கட்டிட கழிவுகள் ,சாய ஆலை சலவை ஆலை  பிரிண்டிங் ஆலை கழிவுகள், பாத்திரப்பட்டறை  கழிவுகள் ,உடைந்த கண்ணாடிகள் ,மக்காத பாலித்தீன் பைகள் துணிகள் ,குப்பை கூழங்கள் கண்ணாடி பாட்டில்கள் வர்த்தகர்களின் மீன் கோழி போன்ற மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் பொது சுகாதாரக்கேடுகளும் ஏற்பட்டு  வருகிறது.

நீர்நிலைகளை பாதுகாப்பதினை தமது
கடமையாக கொண்டுள்ள அரசுத்துறை ஊழியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்  பொதுமக்களும்  முன் வர வில்லை.

அப்படியானால் நல்லாற்றினை பாதுகாப்பது யார்?

தானாக மாசடைந்த நல்லாறு புனிதமான நல்லாறாக மாறி விடுமா என்ன? 

இதற்கு தீர்வு தான் என்ன? 

இந்திய அரசியலமைப்பு சாசனம் நமக்கு வழங்கி உள்ள கடமை மற்றும் உரிமையாக கொண்டு சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பாக நல்லாறு பாதுகாப்புக்குழு  ஒன்றினை ஏற்படுத்தி உள்ளோம்.

நல்லாற்றினை பாதுகாப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நல்லாறு பாதுகாப்புக்குழு தயாராக உள்ளது.

ஆயுத பூஜை நெருங்கி வருகிறது.

ஆம்.
பின்னலாடை தொழில் சார்ந்த  தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகள் கடைகள் அலுவலகங்கள் வீடுகள்  ஒர்க்ஷாப்புகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்ட? கழிவுகள் அனைத்தும் நல்லாற்றில் கொட்ட வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்.

எச்சரிக்கை!!

சுட்ட விரோதமாக வாகனங்களில் கொண்டு வந்து கழிவுகளை  கொட்டி நல்லாற்றினை மாசு படுத்துபவர்களை நல்லாறு பாதுகாப்புக்குழுவினர் கண்டறிந்து வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 277 இன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி அருகில் உள்ள காவல்
நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்பதினை தெரிவித்து கொள்கிறோம்.

பாதுகாப்போம்! பாதுகாப்போம்!!
நல்லாறு Vs நஞ்சராயன் குளத்தினையும் பாதுகாப்போம்.
குறிப்பு:

நல்லாறு பாதுகாப்பு குழுவில் இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் 98655 90723 என்ற. வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்கள் பெயர் முகவரி தொடர்பு எண்கள் அனுப்ப வேண்டுகிறோம்.

மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்!

சிறந்த மாநகராட்சி விருது பெற்றுள்ள திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொது கழிவு நீர் கால்வாய் கழிவு நீரினை பாதாள சாக்கடையுடன் இணைத்து சர்க்கார் பெரிய பாளையத்தில் செயல் படும் பொதுசுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்தம் செய்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இனியாவது தாங்கள் கடமையினை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

LAACO வின்
நால்லாறு பாதுகாப்புக்குழு
363, காந்திரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

No comments:

Post a Comment