Saturday 20 October 2018

நல்லாறு பாதுகாப்பு குழு அவசர ஆலோசனைக் கூட்டம்!

பத்திரிக்கை செய்தி :

முக்கிய அறிவிப்பு.

"நல்லாறு பாதுகாப்புக்குழு " அவசர ஆலோசனை கூட்டம் இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 19 (1) அ மற்றும் ஆ இன் கீழ் " சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " சார்பில் நடை  பெற இருக்கிறது.

நாள் :21.10.2018

நேரம் : மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இடம் : நல்லாறு பாலம் 
HP பெட்ரோல் பங்க் எதிரில்
செட்டிபாளையம் சாலை
அங்கேரிபாளையம்
திருப்பூர் .

இயற்கை வளமான நல்லாற்றினை பாதுகாப்பது இந்திய  அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51 A.( அ) ,(எ),(ஐ),(ஒ)  இன் கீழ் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து  ஊத்துக்குளி நஞ்சராயன் குளம் வரை செல்லும் நல்லாறு கழிவுகளினாலும் கழிவு நீரினாலும் ஆக்கிரமிப்புகளினாலும் மாசடைந்து துர்நாற்றம் வீசி பொது சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நல்லாறு மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாத அவர்களின் அலட்சியத்தினால் கெட்ட ஆறாக மாற்றப்பட்டு பொது சுகாதாரக்கேட்டின் மூலம் பொதுமக்கள் மிகுந்த நோய் தொற்றிற்கும் சொல்லொணா துயரத்திற்கும்  உள்ளாகி வருகிறார்கள்.

நல்லாற்றினை பாதுகாக்கும் பொறுப்பு மிக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட சுகாதாரபணிகள் நலத்துறையும்  பொதுமக்களுக்கு தீங்கு செய்யும் நோக்கத்துடன் நல்லாற்றினை மாசடைய செய்து பொது சுகாதார சீர்கேட்டினை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நல்லாற்றை பாதுகாக்க தவறி விட்டது என்பது தான் நமது நேரடி கள ஆய்வில் கண்ட நிதர்சனமான உண்மை .

நாமும் கவனிக்காமல் இப்படியே விட்டு  விட்டால் நல்லாறு கழிவுகளினாலும் ஆக்கிரமிப்புகளினாலும் முற்றிலும்  காணாமல் போவது உறுதி.

இதனை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும் நமக்கு உள்ளது.

அவிநாசி முதல் நஞ்சராயன் குளம் வரையில் நல்லாறு பாதுகாப்புக்குழு பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம்.

நல்லாறு பாதுகாப்புக்குழுவில் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் இளைஞர்கள் ,பள்ளி, கல்லூரி மாணவர்கள்  அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு உங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்து நல்லாற்றினையும் நஞ்சராயன் குளத்தினையும் பாதுகாப்போம் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

இனி சொல் அல்ல! செயல்!!

தலைமை அலுவலகம் :
நல்லாறு பாதுகாப்புக்குழு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர்- 641 652
வாட்ஸ் ஆப் எண் :98655 90723
தொடர்புக்கு :
97910 50513


Sunday 14 October 2018

ஊழல் ஒழிப்பு செய்தி /0030 குற்றவாளியை தேடி வந்தது குறித்து முகநூலில் பதிவிட்ட காவல் ஊழியர்!

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்நாடு திருப்பூர் மாநகர  காவல் துறையின் பார் போற்றும் சாதனை!!

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO / 030 /18.10.2018

குற்றம் நடந்து கொண்டிருப்பது  என்ன?

உண்மை சம்பவம்!!

வாழ்த்து மழையில் நனையும் காவலூழியர்!

முகநூலில்  குவியும்  பாராட்டுக்கள்!

நிற்க.........!!

அரசுத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வும் ஏமாற்று வித்தையும்!

அரசு பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதினை முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு வருவது வழக்கம்.

தலைமை ஆசிரியரும் மாணவ மாணவிகள் அனைவரிடமும் அன்றைய தினம் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் குளித்து, தலை வாரி, பவுடர் பூசி,  சுத்தமான ஆடை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்பார் .
அன்றைய தினம் ஒருநாள் மட்டும் பள்ளியை சுத்தமாக வைத்திருப்பார்கள்.

ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரியும் காப்பி பஜ்ஜி சாப்பிட்டு விட்டு ஆஹா ! ஓஹோ ! என தலைமை ஆசிரியரை பாராட்டி விட்டு சென்று விடுவார்.

தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து கூடுதலான கல்வி கட்டணம் வசூலித்து விட்டு  ஆய்வுக்கு வரும் கல்வி அதிகாரிகளிடம்  பள்ளி நிர்வாகிகள் எந்தவிதமான கல்விக்கட்டணமும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க வில்லை என பொய் சொல்ல சொல்வதுடன் எழுத்து மூலமாக கடிதமும் வாங்கி விடுவார்கள்.

விபரம் தெரிந்த பெற்றோர் கேட்டால் பணம் கொடுக்க வில்லை என சொன்னால் தான் அரசு எங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என நா கூசாமல் பொய் பேசுவார்கள்.

அதுபோல் நியாய விலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் விபரங்களை முன் கூட்டியே தினசரி  நாளிதழில் செய்தி கொடுப்பார்கள்.

அதன் படி அந்தந்த கடை ஊழியர்களும் பொருட்கள் இருப்பு மற்றும் வரவு செலவு கணக்குகள் பதிவேடுகளை தயார் நிலையில்  வைப்பதுடன் கடையையும் சுத்தமாக வைத்திருப்பார்கள்.
கள்ள சந்தையிலும் அன்றைய தினம் பொருட்களை விற்பனை செய்ய மாட்டார்கள்.

கூட்டு களவாணிகளே!!

இவ்வாறாக அரசு துறைகளில் அதிகாரிகள் ஆய்வு அல்லது ஆடிட்டிங் செய்ய வரும் விபரத்தினை முன் கூட்டியே தெரிவித்து விட்டு அவர்களை தயார் படுத்தி அரசையும் பொது மக்களையும் ஏமாற்றி கண்துடைப்புக்காக ஆய்வு செய்வது இன்றளவும் அனைத்து அரசுத்துறைகளிலும் தொடர்ந்து நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது.
இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகளே!

காவல் துறையிலும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதினையும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு தான் வருகின்றனர்.

இதற்கு பெயர் தான் ஆய்வா?

ISO தரச்சான்று பெற்ற அனைத்து  தொழிற்சாலைகளிலும் ஆய்வு அல்லது ஆடிட்டிங் செய்ய வருவதினை முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு தான் ஆய்வு செய்கின்றனர்.

அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் தரநிர்ணய கொள்கையின் படி தொழிற்சாலைகள் இயங்கும்.
ஆய்வுக்கு வரும் ஊழியர்களின் உதவியாளர்கள் தொழிலாளர்களிடம் தொழிற்சாலை உரிமையாளருக்கு ஆதரவாக பொய் பேச சொல்வார்.

தொழிலாளர்களும் உரிமையாளருக்கு ஆதரவாக பொய் சொல்வார்கள்.

திடீர் ஆய்வு என்ற செய்தியினை காண்பது மிகவும் அரிது.

அனைத்து அரசு துறைகளிலும் ஆய்வாளர் என்பவர்கள் இருப்பார்கள்.
ஆனால் இவர்களின் பெயர் தான் ஆய்வாளாரே ஒழிய எந்த விதமான ஆய்வினையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

இந்த அரசூழியர்கள்  கடமையினை ஓழுங்காக செய்தால் அனைத்து துறைகளும் லஞ்சம் ஊழல் இல்லாமல் சிறப்பாக செயல் படும்.

ஆனால் காவல் துறையில் மட்டும் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டு தலை மறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய இரகசியமாக
கண்காணித்து கைது செய்வார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி விமானத்தில் பறந்து சென்ற திருப்பூர்  மாநகர காவலூழியர்கள்!

விமானம் மூலம்  ஜார்கண்ட் மாநிலம் சென்று ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து முகநூலில் நேரலையில்  காணொலியில் பேசிய திருப்பூர்  அனுப்பர்பாளையம் காவலூழியர் முக்ரம் பட்டு Mukram batu!

Accused குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி ஜார்கண்ட்  மாநிலத்திற்கு விமானம் மூலம் வந்ததாகவும் ராஞ்சி விமான நிலையத்தில் அவருடன் அவரது தம்பியும் மற்றும் காவல் ஆய்வாளர் ஒருவரும் வந்திருப்பதாகவும் Accused ஐ தேடி கண்டு பிடித்து வெற்றியுடன் திரும்புவதாகவும் திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல்நிலைய காவலூழியர் Mukram batu என்பவர் முகநூலில் நேரடியாக காணொலியில் தகவல் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டபட்டவர் யார்?

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரா?

அல்லது தமிழகத்தில் இருந்து தப்பி சென்றவரா?

விமானத்தில் பறந்த செலவு யாருடையது.?

கிரிக்கெட் வீரர் டோணியை பார்த்தேன்.படம் பிடித்தேன்.

இந்த காவலூழியர்கள் அரசு செலவில் சுற்றுலா சென்றார்களா?

குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய சென்றார்களா?

குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி கண்டு பிடித்து கைது செய்து தமிழகம் கொண்டு வருவார்களா?
அல்லது

அங்கிருந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்
வேறு மாநிலம் தப்பி செல்வதற்காக தகவல் தெரிவித்திருப்பாரா!

என்ற ஐயப்பாடு எழுகிறது.

எப்படியோ Accused களை கைது செய்தால் கண்டிப்பாக முகநூலில் நேரலையில் கருத்து சொல்ல வருவார் .
நாமும் காத்திருப்போம்.

ஒரு வேளை Accused. அங்கிருந்து தப்பித்து விட்டால்  அதற்கு முழு பொறுப்பேற்று திருப்பூர் காலூழியர்கள் ஜார்காண்ட் மாநிலம் சென்ற விபரத்தினை பறை சாற்றி முகநூலில் நேரலையில் தகவல் தெரிவித்த காவலூழியர் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

இணைப்பு : காவலூழியரின் காணொலி காட்சியினை காண்க.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்.
உலாபேசி : 98655 90723

உண்மை சம்பவங்கள் தொடரும்.......!!

Friday 12 October 2018

நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் முக்கிய அறிவிப்பு!!

நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் முக்கிய அறிவிப்பு!

பொது நீர்நிலையான நல்லாற்றினை மாசு படுத்தி வரும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  மற்றும் பொது மக்களுக்கு ஓர் அன்பான அவசர அவசிய  வேண்டுகோள்!

நல்லாறு மாசடைந்து பொது சுகாதாரக்கேடு  ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவினாசி வட்டத்தில் இருந்து ஊத்துக்குளி வட்டம் நஞ்சராயன் குளம் வரை செல்லும் ஆறு தான் நல்லாறு.

திருப்பூர் சாய ஆலை சலவை ஆலை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த கழிவு நீரால் நல்லாறு நாசமாய் போய் விட்டது.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொது கழிவு நீர்கால்வாய் கழிவு நீரினை ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் கொண்டு சென்று நல்லாற்றில் விட்டு தொடர்ந்து நல்லாற்றினை மாசு படுத்தி வருவதுடன்  பொது சுகாதார கேட்டினையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதனை கண்காணித்து தடுக்க வேண்டிய திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மாசடைந்த வாரியமாக காட்சி அளிக்கிறது.

பொது மக்களுக்கு பொது சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்தி வருபவர்கள் மீது மாவட்ட சுகாதாரப்பணிகள் துறையினர் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை.

நல்லாற்றினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள திருப்பூர் பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறையினர் எங்கு இருக்கிறார்கள்  என்ன ஆனார்கள் எனத்தெரிய வில்லை.

நீர்நிலைகளை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு வகிக்கும்  மாவட்ட செயல் துறை நடுவர்களாகிய இது வரை திருப்பூர் மாவட்டத்தை ஆட்சி செய்த மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் செயல் இழந்து விட்டது தான் நல்லாறு மாசடைந்து நாசமாய் போனதிற்கு முக்கிய காரணம் என்ற பகிரங்க குற்றச்சாட்டினை பதிவு செய்கிறோம்.

திருப்பூர் மாவட்ட மாநகர காவல் துறையினர் பொது நீர்நிலையை மாசடைய செய்பவர்களை கண்டறிந்து எந்த ஒரு வழக்கும் பதிவு செய்வதில்லை .

கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர், சார் ஆட்சியர்  போன்றவர்களும் நல்லாற்றினை பாது காக்க தவறி விட்டனர்.

நல்லாற்றிலும் அதன் இருகரைகளிலும்
ஆக்கிரமிப்புகள்  ,
எங்கு நோக்கினும் கட்டிட கழிவுகள் ,சாய ஆலை சலவை ஆலை  பிரிண்டிங் ஆலை கழிவுகள், பாத்திரப்பட்டறை  கழிவுகள் ,உடைந்த கண்ணாடிகள் ,மக்காத பாலித்தீன் பைகள் துணிகள் ,குப்பை கூழங்கள் கண்ணாடி பாட்டில்கள் வர்த்தகர்களின் மீன் கோழி போன்ற மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் பொது சுகாதாரக்கேடுகளும் ஏற்பட்டு  வருகிறது.

நீர்நிலைகளை பாதுகாப்பதினை தமது
கடமையாக கொண்டுள்ள அரசுத்துறை ஊழியர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்  பொதுமக்களும்  முன் வர வில்லை.

அப்படியானால் நல்லாற்றினை பாதுகாப்பது யார்?

தானாக மாசடைந்த நல்லாறு புனிதமான நல்லாறாக மாறி விடுமா என்ன? 

இதற்கு தீர்வு தான் என்ன? 

இந்திய அரசியலமைப்பு சாசனம் நமக்கு வழங்கி உள்ள கடமை மற்றும் உரிமையாக கொண்டு சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பாக நல்லாறு பாதுகாப்புக்குழு  ஒன்றினை ஏற்படுத்தி உள்ளோம்.

நல்லாற்றினை பாதுகாப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நல்லாறு பாதுகாப்புக்குழு தயாராக உள்ளது.

ஆயுத பூஜை நெருங்கி வருகிறது.

ஆம்.
பின்னலாடை தொழில் சார்ந்த  தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகள் கடைகள் அலுவலகங்கள் வீடுகள்  ஒர்க்ஷாப்புகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்ட? கழிவுகள் அனைத்தும் நல்லாற்றில் கொட்ட வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்.

எச்சரிக்கை!!

சுட்ட விரோதமாக வாகனங்களில் கொண்டு வந்து கழிவுகளை  கொட்டி நல்லாற்றினை மாசு படுத்துபவர்களை நல்லாறு பாதுகாப்புக்குழுவினர் கண்டறிந்து வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 277 இன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி அருகில் உள்ள காவல்
நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்பதினை தெரிவித்து கொள்கிறோம்.

பாதுகாப்போம்! பாதுகாப்போம்!!
நல்லாறு Vs நஞ்சராயன் குளத்தினையும் பாதுகாப்போம்.
குறிப்பு:

நல்லாறு பாதுகாப்பு குழுவில் இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் 98655 90723 என்ற. வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்கள் பெயர் முகவரி தொடர்பு எண்கள் அனுப்ப வேண்டுகிறோம்.

மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்!

சிறந்த மாநகராட்சி விருது பெற்றுள்ள திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொது கழிவு நீர் கால்வாய் கழிவு நீரினை பாதாள சாக்கடையுடன் இணைத்து சர்க்கார் பெரிய பாளையத்தில் செயல் படும் பொதுசுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்தம் செய்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இனியாவது தாங்கள் கடமையினை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

LAACO வின்
நால்லாறு பாதுகாப்புக்குழு
363, காந்திரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

Wednesday 3 October 2018

விபத்து அவசர வேண்டுகோள்!

விபத்து அவசர வேண்டுகோள்!

திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மற்றும்
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையர் மற்றும்
திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர்  அவர்களின் கவனத்திற்கு!

தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட அவிநாசிசாலை அனுப்பர்பாளையம் புதூர் சிக்னல் அருகில் புதிதாக கட்டப்பட்ட தரை பாலம் உயரமாக கட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே இருந்த கழிவு நீர்கால்வாய் கல்வெட்டு சாலை மட்டத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

பிரதானசாலை நடுவில் இரண்டு டிவைடர் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது

03.10.2018 இரவு பத்து மணி அளவில் சாலையில் கல்வெட்டு இருப்பது தெரியாமல் கார் ஓட்டி வந்த ஒருவர் கழிவு நீர்கால்வாய் கல்வெட்டிற்குள் சிக்கி கொண்டார்.உயிர்பலி இல்லாமல்
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

எனவே உயிர்பலி ஏற்படும் முன் கழிவுநீர் கால்வாய் கல்வெட்டினை பாதுகாப்பாக அமைக்க வேண்டுகிறோம்.

4.வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் வழியாக அவிநாசி சாலையை கடந்து திருப்பூர் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

உடனடியாக கட்டுமான பணிகளை விரைந்து முடித்து அனுப்பர்பாளையம் புதூர் போக்குவரத்து சிக்னலை வழக்கம் போல்  போக்குவரத்து பயன் பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்.