Monday 30 April 2018

அனுப்பர்பாளைய காவல் நிலையம்!

முக்கிய செய்தி!!

அவசர தேவைக்கு உதவிக்கு அழைத்தால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறும் ஆபத்துக்கு உதவாத திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையம் .!
தொலை பேசி எண் :0421 2238580

30.04.2018 அன்று இரவு சுமார் 10.00 மணி அளவில் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட அங்கேரிபாளையம் சாலை அரசு சேமிப்பு கிடங்கு அருகில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டதாக சமூக ஆர்வலர் பழனிக்குமாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

விபத்து ஏற்படுத்திய  வாகன எண் : GA 05 B 1017

மின்கம்பம் உடைந்து சாய்ந்து
மின்கம்பி அறுந்து சாலையின் குறுக்கே தாழ்வான நிலையில் தொங்கி பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.

இரவு நேரமாகையால் இருட்டான பகுதியில்  சாலையின் குறுக்கே மின்சார.இணைப்புடன் தொங்கி கொண்டிருந்த மின் கம்பிகள் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும்  தெரிய வில்லை.

வாகன ஓட்டிகளுக்கும்  பொது மக்களுக்கும் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலையினை  சமூக ஆர்வலர்  பழனிக்குமார் உடனடியாக தடுத்து நிறுத்தி உள்ளார்.

மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தவும் பொது மக்கள் உயிருக்கு பாது காப்பு வழங்கவும் அனுப்பர் பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்த போது தொலை பேசியை எடுத்து பேசிய காவலூழியர் பதில் அளித்த விதம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.

குற்றம் நடைபெறும் முன்னர் தடுத்து நிறுத்தும் கடமை காவலூழியர்களுக்கு
இருந்தும் புகார் தெரிவித்தும் அசால்ட்டாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லை என்றும் எந்த இடம் என சரியான தகவல் தெரிவித்த போதும் திரும்ப திரும்ப எந்த இடம் என கேட்ட கடமை தவறிய காவலூழியர்களை பணி நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.
இணைப்பு : ஆடியோ

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
01.05.2018

Saturday 28 April 2018

Laaco Conference Call Meeting

முக்கிய அறிவிப்பு!

LAACO /சுற்றறிக்கை /CCM/002/TPR/2018 ;நாள் :29.04.2018

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு மாநில நிர்வாகிகள் மண்டல மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் .!

அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிப்பது தான் அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

அமைப்பின் நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள் அனைவரும் முதலில் சட்ட விழிப்புணர்வு பெற்று சமூகத்தில் பாதிக்க பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி மத இன மொழி பாகுபாடில்லாமல் கடமை உணர்வுடன் தன்னலமற்ற சேவை ஆற்ற முன் வர வேண்டும்.

LAACO Anti-Corruption
வாட்ஸ் ஆப் குரூப் நிர்வாகிகளுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அமைப்பு சாராத தேவையற்ற எந்த ஒரு செய்திகளையும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனுப்ப கூடாது.

அமைப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டும் பயன் படுத்த வேண்டுகிறோம்.

முதற்கட்டமாக மாநில மண்டல மாவட்ட வாரியாக CONFERENCE CALL MEETING கான்பிரன்ஸ் கால் மீட்டிங் மொபைல் போன் மூலமாக மாதா மாதம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

பொறுப்பாளர்கள் அனைவரும் மாநில
மண்டல மாவட்ட பொறுப்பாளர்களின் தொடர்பு எண்களை மொபைல் போனில் சேமித்து வைத்து கொள்ள வேண்டுகிறோம் .

கான்பிரன்ஸ் கால் மீட்டிங் அறிவிக்கபட்ட நாட்களில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் தொடர்பினை ஏற்க தயாராக இருக்க வேண்டும்.

தொடர்பு  கொள்ள இயலாத நிலையில் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.

மீட்டிங் நடை  பெற்று கொண்டிருக்கும் போது அவசர தேவையாக இருப்பின் தகவல் தெரிவித்து விட்டு இணைப்பில் இருந்து வெளியேறலாம்.

மாநில மண்டல மாவட்ட அளவில் அமைப்பின் செயல் பாடுகள்  குறித்து ஆலோசனைகள், சட்டம் சார்ந்த தகவல்கள், புகார் மனுக்கள் RTI மனுக்கள், உங்களின் கோரிக்கைககள் வேண்டுதல்கள் குறித்த அனைத்து சந்தேகங்கள் வழிகாட்டுதல்கள்  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

பொறுப்பாளர்கள் அனைவரும் எந்த விதமான. பாகு பாடும் தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் ஒரே குடும்ப உறுப்பினர்களாக செயல் பட்டு
அமைப்பின் செயல் திட்டங்களை நிறை வேற்ற ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன்  வேண்டிக்கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன் ........
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

Sunday 22 April 2018

கொங்கு பள்ளி RTI சட்டப்பிரிவு 7(1)

மனுதாரர் ;
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

பெறுநர் :
பொது தகவல் அலுவலர் அவர்கள்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005
மாவட்ட செயல் துறை நடுவர்/மாவட்ட ஆட்சியர்  அலுவலகம்
திருப்பூர் மாவட்டம்.

அய்யா,
பொருள் :தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் சில தகவல்கள் வழங்க கோருவது சம்பந்தமாக ,

பார்வை : திருப்பூர் மாவட்ட செயல் துறை நடுவர் அவர்களுக்கு கொடுக்கப்பெற்ற புகார் மனு எண் :LAACO/CL/006/TPR/2017;நாள் :07.12.2017

புகார் மனு  ரசீது எண் ;2017/9005/32/006830/1207:07.12.2017

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் மாநகராட்சி அனுமதி பெறாமலும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளுக்கு எதிராக சட்ட விரோதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகட்டிடத்தினை தடை செய்யக்கோரியும் பள்ளி நிர்வாகத்திற்கு துணை போகும் எதிர்மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்  பார்வையில் குறிப்பிட்டுள்ள புகார் மனு மாவட்ட செயல் துறை நடுவராகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது .

ஆனால் எனது புகார் மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை.

புகார் மனு அளித்த பிறகு சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான அரசு பொது தேர்வுகள் நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த புகார் மனு மாணவ மாணவிகளின் கல்வி ,உயிர் ,சுதந்திரம் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டதாகும்.

எனவே பார்வையில் காணும்  புகார் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்களை  தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்க கோருகிறேன் .

1. பார்வையில் காணும் புகார் மனு மீது இன்றைய தினம் வரையிலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்கள் தங்கள் அலுவலகத்தில் எந்தெந்த பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்தந்த பதிவேடுகளின் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்கவும்.

2. எதிர் மனுதாரர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிர் மனுதாரர்களிடம் இருந்து விளக்க கடிதம் ஏதேனும் பெற்றிருந்தால் அந்த கடித நகல்கள் வழங்கவும்.

3. எனது புகார் மனு நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களை சட்டப்பிரிவு 4(1)d இன் படி தெரிவிக்கவும்.

4.தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிருவாக சீர்த்திருத்தத்துறையின் 21.09.2015 நாளிட்ட அரசாணை எண் ;99 இன் படி மேற்காண் மனுவிற்கு ஏதேனும்
பதில் கடிதம் வழங்க பட்டிருப்பின் அதன் ஒளி நகல் வழங்கவும்.

5. மேற்காண் பள்ளி தற்பொழுது மாநகராட்சி கட்டிட அனுமதி மற்றும் கட்டிட உறுதி தன்மை சான்றிதழ் பெற்றிருப்பின் அதன் ஒளி நகல் வழங்கவும்.

6. மேற்காண் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தில் அரசு பொது தேர்வுகள் நடத்த ஆய்வு செய்து அனுமதி அளித்துள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் அனுமதி நகல் வழங்கவும்.

மேற்காண் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் பத்துக்கான. நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

மேலே நான் கோரிய தகவல்களில் ஏதேனும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் அதற்கான சட்டப்பிரிவு 6(3) இன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து தகவல்களையும் குறிப்பிட்ட தினங்களுக்குள் வழங்க கோருகிறேன்.

நாள் :23.04.2018.                    மனுதாரர்
திருப்பூர்

Sunday 15 April 2018

LAACO மாநில நிர்வாகிகள் :

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் 08.04.2018 அன்று பதவி ஏற்றுள்ள புதிய  மாநில நிர்வாகிகள் :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
திருப்பூர்
உலாபேசி : 98655 90723

1.ரா.சங்கர்
மாநில தலைவர்
அரியலூர்
உலாபேசி : 98655 43303

2.ரா.கோபால்சாமி
மாநில துணை தலைவர்
பல்லடம்
உலாபேசி: 82200 44958

3.மா.விவேகானந்தன்
மாநில பொதுச் செயலாளர்
திருச்சி
உலாபேசி :94886 11427

4..ரா.அசோக் குமார்
மாநில இணைச் செயலாளர்
சேலம்
உலாபேசி :95669 09892

5. P. R.சூர்யா
மாநில துணை செயலாளர்
கோவை
உலாபேசி : 90420 72020

6..கோ.தாணு மூர்த்தி
மாநில பொருளாளர்
திருப்பூர்
உலாபேசி : 98438 14132

7. ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர் (நிர்வாகம்)
திருப்பூர்
உலாபேசி: 97910 50513

8. ச.பால தண்டபாணி
மாநில அமைப்பு செயலாளர் (உறுப்பினர்)
பழனி
உலாபேசி: 94878 74277

தலைமை அலுவலகம் :
பதிவு எண் : 10 /2015 ; 44/2015

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

Wednesday 11 April 2018

காவல் துறை உளவாளிகள் யார்?

இந்திய குடிமக்கள் அனைவரும் காவல் துறை உளவாளிகளா?
(POLICE. INFORMER.) ?

ஆம் / YES

"  சட்டம் தெரிந்து கொள்வோம் :"

குற்ற விசாரணைமுறைச்சட்டம்  -1973
CRIMINAL. PROCEDURE. CODE - 1973

கு.வி.மு.ச - பிரிவு : 39
CrPc. Section. : 39

சில குற்றங்கள் குறித்து பொது மக்கள் தகவல் கொடுக்க வேண்டும்
PUBLIC TO GIVE INFORMATION OF CERTAIN OFFENSES .

ஒரு குற்றம் ஏற்கனவே நடந்தது !

குற்றம் நடந்து கொண்டிருப்பது!

குற்றம் நடக்க இருப்பது!

பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிய வந்தால் அருகில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கோ, நீதிமன்ற நடுவருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்

என்னென்ன தகவல்களை தெரிவிக்கலாம்?

அரசுக்கு  எதிரான. குற்றங்கள்!

பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள்.!

உணவு  பொருட்கள், மருந்துகளில் கலப்படம் செய்பவர்கள்.!

அரசு ஊழியர்கள் செய்யும் நம்பிக்கை மோசடிகள்!

லஞ்சம்  வாங்கும் அரசு ஊழியர்கள்.

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் .!

விபச்சாரம் செய்பவர்கள்.!

கள்ளச்சாராயம்  விற்பவர்கள்.!

அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூல் செய்பவர்கள்.!

M R P விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள்.!

கொலை, கொள்ளை,  பெண்களுக்கு  எதிரான பாலியல் குற்றம் புரிபவர்கள்!

தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள்.!

பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள்.!

சூதாட்டம் , ஆயுதங்களுடன் கூடி நிற்பவர்கள்.!

பொதுமக்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் தீங்கு செய்தவர்கள்
அல்லது செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது செய்ய நினைப்பவர்கள்
யாராக இருப்பினும்  குற்ற விசாரணை முறைச்சட்டம் 39 ன்படி காவல் துறை (அ) நீதிமன்றத்தில் புகார் செய்யும் உரிமை வழங்கப் பட்டுள்ளது.

புகார் எப்படி யாருக்கு செய்வது?

காவல்துறை தொடர்பு எண் இல்லையா கவலை வேண்டாம்.!
அழையுங்கள் :100 க்கு
உங்கள் கடமையை செய்யுங்கள்!

என்ன நண்பர்களே!
கு.வி.மு.ச :39

பயன் படுத்துங்கள் உங்களின் உரிமையை!

இப்போது நாம் அனைவரும் காவல்துறை உளவாளிகள் தானே?

அன்புடன்.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
உலா பேசி : 98655 90723

Friday 6 April 2018

உறுதிமொழி படிவம்

             உறுதிமொழி  படிவம்

....................................ஆகிய நான் "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " அறக்கட்டளையின் ..............
......................... ............இன்று பதவி ஏற்றுள்ள நிலையில் "லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் " என்றும் அறக்கட்டளையின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் நிறை வேற்றிடவும்  என் பதவிக்குற்ற கடமைகளை செவ்வனே ஆற்றி வருவேன் என்றும்  எந்த ஒரு அரசியல் கட்சிகளிலும் நான் யாதொரு  பொறுப்புக்களை வகிக்க வில்லை என்றும் எந்த ஒரு குற்ற வழக்குகளிலும் நான் தண்டனை பெற வில்லை என்றும்
இந்த உறுதி மொழிகளை ஏற்று இந்திய சாட்சியச் சட்டப்பிரிவு -70 இன் கீழ் இந்த உறுதி மொழி படிவத்தில் இன்றைய தேதியில் நானே  கையொப்பம் செய்துள்ளேன் என உள்ளார்ந்து உறுதி மொழிகிறேன்.

நாள் :
இடம் :                                         ஒப்பம்,

Thursday 5 April 2018

காவிரி நீர் ஒரு சிறப்பு பார்வை!

காவிரி நீர் ஒரு சிறப்பு பார்வை ;

காவிரி நீர்!  காவிரி நீர்!
கானல் நீராகி போன காவிரி நீர்!

போராட்டம்! போராட்டம்!
இது தமிழர்களுக்கு எதிரான போராட்டம்!

சாலை மறியல்!
தமிழக பேருந்துகள் மீது தாக்குதல்!
ஓட்டுநர்கள் காயத்துடன் உயிரை காப்பாற்றி கொள்ள  ஓட்டம்!
பயணிகள் அலறியபடி ஓட்டம்!
இரயில் மறியல்! 
இரயில் பயணிகள் அவதி!
போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு!
சுங்க சாவடி அடித்து உடைப்பு!
வலு கட்டாயமாக கடை அடைப்பு போராட்டம்!
கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல்!
காவல் துறையினர் மீது தாக்குதல்!
காவல் துறை பாதுகாப்பினை மீறி கிரிக்கெட் மைதானத்திற்குள் அத்து மீறி நுழைந்து போராட்டம்!
தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்து மீறி நுழைந்து போராட்டம்!

எதற்காக இந்த அளவிற்கு கடுமையான போராட்டம்!

நீதிமன்ற உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தாம்.

போராட்ட காரர்கள் விவசாயிகள் நலன் கருதி தான்  போராடுகிறார்களாம்.!

சபாஷ்! சபாஷ்!

யாரை ஏமாற்ற இந்த கபட நாடகம்?

தமிழக அரசியல் வாதிகளால் தாக்கப்படும் அப்பாவி தமிழக மக்கள்!

அந்தோ பரிதாபம்!
காவிரி தாயே கருணை செய்வாய்!
காவிரி நீர்!
நீதிமன்ற உத்தரவு!
காவிரி மேலாண்மை வாரியம்!
தொடர் கதையாகும் போராட்டங்கள்!

தமிழக மக்களுக்கு எதிரான போராட்டங்கள் தேவையா?

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காத காரணத்தினால் தமிழகத்தின் சுமார் 11 டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் நலிவடைந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது.

காவிரி நீர் தமிழகத்திற்கு பெற்றிட சுமார் 150 ஆண்டு கால போராட்டம்!

தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரினை பெற வேண்டியது தமிழக அரசின் உரிமை !

அதனை வழங்க வேண்டியது கர்நாடகா அரசின் கடமை! 

கர்நாடகா வாழ் மக்களின் குடிநீர் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள போது நாங்கள் எப்படி தமிழகத்திற்கு காவிரி  நீரினை விவசாயத்திற்கு  வழங்க முடியும் என்பது கர்நாடகா அரசின் வாதம்!

இது அவர்களின் உரிமையாகக்கூட இருக்கலாம்!

பல போராட்டங்களின் விளைவாக
தமிழக அரசு சார்பில் கர்நாடகா அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழக மக்களுக்கு குறிப்பிட்ட அளவு டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது  நீதி மன்றம் உத்தரவு!

ஆனால் கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் தண்ணீர் வழங்க திட்டமிட்டு மறுத்து வருகிறார்கள்!

சரி இதற்கான தீர்வு தான் என்ன?

மத்திய அரசு மற்றும் இரு மாநில அரசுகள் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று அமைத்து அதன் மூலம் இரு மாநில அரசுகளுக்கும் சுமூக தீர்வு ஏற்பட வேண்டும்!

அதனை மத்திய அரசு ஆறு வார காலங்களில் நடை முறை படுத்த வேண்டும்! என்பது நீதிமன்ற உத்தரவு.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனக்கூறியது  மத்திய அரசு!

நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை எனக்கூறி தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

நான்கு மாநில தலைமை செயலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் மே 03 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முடிவு செய்வதாகவும் மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

காவிரி நீர் விவகாரத்தினால் பல போராட்டங்கள், உயிர் இழப்புகள், அரசுக்கும் பொது மக்களுக்கும் இழப்பீடுகள் பொது தொல்லைகள் என பல்வேறு பிரச்சனைகளை தமிழக மக்கள் பல ஆண்டுகளாக ஏற்கனவே அனுபவித்து வந்துள்ளனர்.

கர்நாடகா வாழ் தமிழர்கள் இன்று வரையிலும் காவிரி நீர் விவகாரத்தினால் ஒரு வித மரண பயத்தில் தான் வாழ்ந்து வருவதாக அங்கிருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது தமிழகத்திற்கு தண்ணீர் விட மாட்டோம் என கர்நாடகாவினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது இரு மாநிலத்திற்கும் உள்ள முக்கியமான பொது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதனை சட்ட ரீதியாக தான் கையாண்டு இரு மாநில மக்களுக்கும் நல்லதொரு முடிவினை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் முயல வேண்டும்.

மத்திய அரசினை பொறுத்த வரை இரு மாநில மக்களும் பாதிக்கப்பட கூடாது.
அவர்கள் எடுக்கும் முடிவினால் தங்களது வாக்கு வங்கி சரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் உள்ளனர்.

சரி இதனால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தமிழக விவசாய பெருங்குடி மக்கள் தான்.

தமிழக ஆட்சியாளர்களுக்கும் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் இதில்  முக்கிய பொறுப்பு உண்டு.

சட்ட வல்லுந‌ர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அனைத்து அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் ஒன்றினைந்து காவிரி நீரினை எவ்வாறு பெறுவது என்பதிற்கான வழி முறைகளை ஆராய்ந்தும் ,காவிரி மேலாண்மை வாரியத்தினை நீதி மன்றத்தின் மூலம் அமைத்து உரிய நிவாரணம் பெற்று தருவதும் தான்  இதற்கான தார்மீக வழியாக இருக்கும்.

நமது எதிர்ப்பினை காட்டுவதற்கு பல வழிமுறைகளை கையாண்டு  அறவழி போராட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் போராடி இருக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தினை பொறுத்த வரை ஜாதி ,மத ,இன, மொழி ,கட்சிகள் என மக்களை பிரித்து  அரசியல் செய்யும் அரசியல் கட்சியினர் தான் உள்ளனர்.

இவர்கள் தேர்தல் தோறும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கட்சி மானம் கொள்கைகளை இழந்து சுயநலத்திற்காக முரண்பட்ட  கூட்டணிகளை  அமைத்து தமிழக மக்களை முட்டாளாக்கி அடிமை படுத்தி வைத்துள்ளனர்.

இவர்கள் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லி மக்களுக்கு எதிராக தான் நடந்து கொள்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து தமிழக விவசாயிகளுக்காக  போராடுகிறோம் என்று சொல்லி தமிழக மக்களுக்கு எதிராக போராடி தமிழக மக்களை தாக்குவதுடன் மிகுந்த  பொருளாதார இழப்பீட்டினையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.

கடை அடைப்பு போராட்டம் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டு தமிழக மக்களின் கடைகளை வலு கட்டாயமாக அடைக்க சொல்லியும் அடைக்காத கடைகளை   உடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை சிதைக்கின்றனர்.

அரசு பேருந்துகளான பொது சொத்துக்களை அடித்து உடைத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி அதில் பயணம் செய்யும் அப்பாவி மக்களை தாக்குகின்றனர்.

அரசு பேருந்து ஓட்டுநர்களின்  கோரிக்கைகளுக்காக போராடுகிறோம் என சொல்லி அரசு பேருந்துகளை அடித்து உடைத்து துவம்சம் செய்தவர்கள் இன்று அந்த பேருந்து ஒட்டுநர் நடத்துநர்களை தாக்குவது எந்த விதத்தில் நியாயம்.

தமிழக மக்கள் பயணிக்கும் பேருந்துகளை செல்ல விடாமல் பேருந்து மறியல் செய்து  போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பொது இடையூறு ஏற்படுத்து கின்றனர்

இரயிலில் பயணிக்கும் தமிழக மக்களுக்கு எதிராக இரயில் மறியல் செய்கின்றனர்.

பொது சாலைகளில் இயங்கும் சுங்க சாவடிகளை கைப்பற்றி தாக்குதல் நடத்துகின்றனர்.

தமிழக மக்களை இரவு பகல் பாராமல் காவல் காக்கும் காவல் துறையினர் மீது தாக்குதல்  நடத்தி காவலர்களின் மண்டையை உடைக்கின்றனர்.

செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

தினக்கூலி பணி செய்து ஒரு வேளை உணவு உண்ணும் நிலையில் இன்றும் தமிழகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தினையும் கெடுக்கின்றனர்.

ஒரு நாள் கடைகள் அடைப்பினால் காலாவதியான உணவு பொருட்களை
உண்ணும் நிலைக்கு தமிழக மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

கடை நடத்துகிறவர்கள் ,ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ,பேருந்தில் பயணிப்பவர்கள், இரயிலில் பயணிப்பவர்கள் ,சுங்க சாவடியில் பணி புரிபவர்கள்,கிரிக்கெட் ரசிகர்கள்,  செய்தியாளர்கள் ,காவல் துறையினர்  இவர்கள் அனைவரும் தமிழக மக்களே!

சட்டம் ஒழுங்கினை பாதுகாப்பது காவல் துறையினரின் தலையாய கடமை!

அத்து மீறி சட்ட விரோதமாக போராடுபவர்களை தடுத்து நிறுத்தும்
காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவது வெட்க கேடான செயல்!

காவல் துறையினர் பாதுகாப்பு இல்லை எனில் எந்த ஒரு அரசியல் வாதியும்  சுதந்திரமாய் செயல் பட முடியாது.

ஒரே ஓரு நாள் மட்டும் காவல் துறையினர் அனைவரும் அவர்களது பணியினை புறக்கணித்து விட்டால் என்னவாகும்?

ஒரு நாள் போராடினால் கைது செய்து சாப்பாடு போட்டு மாலையில் வெளியில் விட்டு விடுவார்கள் என்ற தைரியத்தில் ஆட்டம் போடுகின்றனர்.

இவர்கள் மீது குற்ற வழக்குககள் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டால் எவனும் மக்களுக்கு எதிரான போராட்டங்கள் செய்ய மாட்டார்கள்.

இப்படி தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழக மக்களுக்கு எதிரான வன்முறை வெறி ஆட்டங்களை கட்டவிழ்த்து விட்டு  தமிழக மக்களுக்கு காவிரி நீர் பெற்று தருவதற்காக தான் போராடுகிறோம் என  ஒட்டு மொத்த தமிழக மக்களையும் தாக்கி வடி கட்டிய முட்டாளாக்கி வருகின்றனர்.

இதனால் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை.

முழுக்க முழுக்க தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தான் பாதிப்பு!

இந்த கூமுட்டை அரசியல் வியாதிகளை தமிழக மக்கள்  தூக்கி  தோளில் சுமப்பதினால் தான் சொந்த நாட்டிலேயே தினமும் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழக ஆட்சி அதிகாரத்திலும் மத்திய ஆட்சி அதிகாரத்திலும் உள்ள ஆளும் அ.தி.மு.க .வினர் தங்களுடைய ஆட்சியை தக்க வைப்பதிலேயே குறியாய் உள்ளனர்.

39 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வெற்றி பெற செய்தால் தமிழக உரிமைகளை கேட்டு பெற முடியும் என சூளுரைத்து மக்களின் வாக்குகளை  பெற்று உறுப்பினர் ஆனவர்கள் இன்று
பாராளுமன்றத்தில் கூச்சல் போடுகிறார்களாம்!கொக்கரிக்கிறார்களாம்.!

ஏன் தமிழக மக்களுக்காக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜிளாமா செய்ய வேண்டியது தானே?

தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத கேடு கெட்ட இந்த சுய நல அரசியல் வியாதிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காசு வாங்கி ஓட்டு போட்டதினால் அவனுங்க அடிக்கும் அடியினையும் கொள்ளையினையும் பொறுத்து தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தமிழக மக்கள்.

கர்நாடகாவில் போராடும் அரசியல் கட்சியினர்  அங்கு வாழும் தமிழக மக்களையும் தமிழக பேருந்துகள் மீதும் தான் தாக்குதல் நடத்துகின்றனர்.
அவர்கள் கன்னடர்கள் மீதோ  அரசு சொத்துகள் மீதோ
தாக்குதல் நடத்துவதில்லை!

தமிழகத்தில் உள்ள நாதாரிகளுக்கு ஏன் இது கூட தெரிய வில்லை!

தமிழக மக்களுக்கு எதிரி தமிழக அரசியல் வியாதிகளே!

இவனுங்க ஆளாளுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டங்களை அறிவிப்பார்கள் .

இதனால் அரசுக்கும்  தமிழக மக்களுக்கும் மிகுந்த இழப்பீடு!

பள்ளி தேர்வுகள் நடை பெற்று கொண்டிருக்கும்  இந்த தருணத்தில் தமிழக மாணவ மாணவிகள் நலனிற்கு எதிரான போராட்டங்கள் தேவையா?

தற்பொழுது தமிழகத்தில் நடை பெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை எதிர்க்கின்றனர்.

ரசிகர்களை தாக்குகின்றனர்.
விளையாட்டு மைதான வாயிலில் பூட்டு போட போவதாகவும், மைதானத்தில் பாம்புகளை விடப்போவதாகவும் பீலா விடுகின்றனர்.

மைதானத்திற்குள் அத்து மீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் சுமார் 40 ஆயிரம் பேரும் எதிர் தாக்குதல் நடத்தினால் என்னவாகும்?

கிரிக்கெட் மைதானம் முன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மைதானத்தினுள் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு போட்டியை கண்டு களிக்கும் தமிழக மக்களுக்கும் பாது காப்பு அளிப்பது யார்? 

இவர்களின் போராட்டத்தினால் ஒட்டு மொத்த மக்களும் தினம் தினம் அவதி பட்டு கொண்டு மிகுந்த துயரத்தில் உள்ளனர்.

எங்கு நோக்கினும் போக்குவரத்து நெரிசல்.

விவசாயிகளின் நலன் என கூறி இவர்கள் தமிழர்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை!

தமிழகத்தில் நடை பெற்று வரும் அனைத்து போராட்டங்களும் தமிழக மக்களுக்கு எதிரான போராட்டம் என்பது தான் நிதர்சனமான உண்மை!

அரசியல் கட்சிகளை வைத்து ஊழல் செய்து கனிம வளங்களை கொள்ளை அடித்து  ,நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து  கோடி கோடியாக கொள்ளை அடித்து மாட மாளிகைகள் பலதரப்பட்ட தொழில்கள் என சுக போகமாக வாழும்
தமிழக அரசியல்  வியாதிகளால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

தமிழக மக்களே!

தமிழ் எங்கள் உயிர்!  தனி தமிழ்நாடு!  தொப்புள் கொடி உறவுகளுக்காக போராடுகிறோம் என பாசாங்கு செய்து போலி வேசம் போட்டு தமிழகத்தினை பிரித்தாள நினைக்கும்  கயவர்களை அடையாளம் காணுங்கள்!

இவர்கள் கையில் தனி தமிழ்நாடு என்று ஒன்று கிடைத்து விட்டால் என்னவாகும்.?

இலங்கை வாழ் தமிழர்களை பாதுகாக்க தவறியவர்கள்!

பல லட்சம் இலங்கை வாழ் தமிழர்களை கொன்று குவித்த ஈவு இரக்கமற்ற சர்வதேச கொலை குற்றவாளி இலங்கை அதிபரை சந்தித்து கைகுலுக்கி கட்டி தழுவி  விருந்துண்டு
அவன் கொடுத்த பரிசு பொருட்களை பல்லிலித்து பெற்று கொண்டு வந்த தமிழக அரசியல் வியாதிகளை
இன்னும் மக்கள் மறக்க வில்லை!

தற்பொழுது கர்நாடகா அரசு பேருந்தையும் உடைத்துள்ளனர்.

இதன் மூலம் கர்நாடகா வாழ் தமிழர்களுக்கும்  ஆபத்து ஏற்படுத்தும் சூழ்நிலைகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள்!

வாக்கு அளித்த மக்களுக்கு எதிராக செயல் பட்டு வரும் இந்த கூட்டு களவாணி அரசியல் வியாதிகளை  புறக்கணித்து நேர்மையான ஆட்சியாளர்களை தேர்வு செய்யுங்கள்!

அப்போது தான் தமிழக மக்கள் அனைத்து விதத்திலும் நிம்மதியாய் வாழ முடியும்.

அறிவார்ந்த தமிழக மக்கள் இனி மேலாவது போலி அரசியல் வியாதிகளிடம் இருந்து விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

பொது மக்களுக்கு இடையூறாக. சட்ட விரோதமாக போராடும் போராட்ட காரர்களை காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு  ஒடுக்க வேண்டும்.

நதிகள் அனைத்தினையும் ஒன்றிணைத்து தேசிய மயமாக்கி அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான நீரினை பகிர்ந்து வழங்கினால்
மட்டுமே இது போன்ற போராட்டங்கள் முடிவுக்கு வரும்!

மன வருத்தத்துடன் ......................!!

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்  மாவட்டம்.
உலாபேசி : 98655 90723
நாள் :12 .04.2018