Friday 26 January 2018

இந்திய குடியரசு தினம்!

📢   *இந்திய குடியரசுதின*
*நல்வாழ்த்துக்கள்* !!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
26. 01.2018 இன்று
69 ஆவது இந்திய குடியரசு தின விழாவினை கொண்டாடி மகிழ்ந்திடுவோம்-

இந்திய சுதந்திரத்திற்காக கண்ணீரும், செந்நீரும் சிந்தி தங்கள் இன்னுயிரினை மாய்த்த போராளிகளையும், தேசத் தலைவர்களையும்  நினைவு கூர்ந்து போற்றி வணங்கிடுவோம்.

நாம் பிறப்பில் தமிழனாக இருந்தாலும்  இந்தியராகவே வாழ்வோம்.

*நம் தேசம் ஒன்று பட்ட இந்திய தேசமே* !

இங்கே பிரிவினை வாதம் வேண்டாம்.

ஜாதி, மத, இன, மொழி பேதங்கள் வேண்டாம்.

குடியரசு தினத்தினை புறக்கணிப்பவர்கள்  நம் தேச விடுதலைக்காக பாடு பட்ட. தேச  தலைவர்களை புறக்கணிப்பதாக ஆகி விடும்.

நம் தேசிய கொடி நமது தாயின் சேலையை போன்றது.

அந்த தேசியக்கொடியை அவமதிப்பது  நம் தாயினை அவமதிப்பதாக. கருதப்படும்.
இது சட்ட விரோத, தேச விரோத செயல் !

நாம் தேர்ந்தெடுத்த கேடு கெட்ட கடமை தவறிய ஆட்சியாளர்களின்  மக்கள் விரோத போக்கினை  கண்டிப்பதாக சொல்லி  நம் தேசத்தின் குடியரசு தினத்தினை புறக்கணிப்பது   எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குடியரசு என்றால் என்ன?

*குடியரசு தினத்தினை நாம் ஏன் கொண்டாட வேண்டும்*?

*இந்தியக் குடியரசு தினம்*

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார்.

அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.

முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப் பட்டது.

*குடியரசு என்பதன் பொருள்* ::

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும்.

அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.

*மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்*

*அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்*

*குடியரசு தினக் கொண்டாட்டம்* :

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.

மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.

சுமார் 125 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், இனம் மொழி எனப் பல வேறுபாடுகள், பாகுபாடுகள்  இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

✍ தேச விழிப்புணர்வு பணியில்,,,,,,
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு  "
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652

நாஞ்சில் கோ. கிருஷ்ணன்
நிறுவனர்
உலா பேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலா பேசி :98655 43303

Saturday 20 January 2018

நஷ்டத்தில் இயங்கும் தமிழக போக்குவரத்து கழகம்.

தினமும் ₹ 9 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழகம்
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு 2.44 % வழங்கிய காரணத்தினால் தினமும் ₹ 3 கோடி செலவு அதிகரித்து தினமும் ₹ 12 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து அமைச்சர் தகவல்.

ஏற்கனவே ₹  20488 கோடி நஷ்டமாம்.

12×365= 4380 ஆக சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ₹ 4380 கோடி நஷ்டத்தில் தான் அரசு போக்குவரத்து கழகம் இயங்க போகிறதாம்.

அடமானம் வைக்கப்பட்டுள்ள பணிமனைகள், பேருந்துகள் எப்படி மீட்க முடியும்.

22549 பேருந்துகளில் 562 பேருந்துகள் விபத்து இழப்பீடு வழங்கப்படாத காரணத்தினால் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாம்.

இதனை மீட்டெடுப்பது யார்?

Tuesday 16 January 2018

15வேலம்பாளையம் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக,

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் கவனத்திற்கு.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம் 15 வேலம்பாளையம் வருவாய் கிராமத்தின் பெயர் மாற்றம் செய்வது  சம்பந்தமாக,

15 வேலம்பாளையம்

5 வேலம்பாளையம்

4 வேலம்பாளையம்

15 வேலம்பாளையம்
5 வேலம்பாளையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

5 வேலம்பாளையம் மீண்டும்
4 வேலம்பாளையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

கிராம நிர்வாக அலுவலகத்தில் மட்டும் 4 வேலம் பாளையம் என பெயர் பலகை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, போக்குவரத்து துறை, வங்கிகள் என எந்த ஒரு அலுவலகத்திலும் பல ஆண்டுகள் ஆகியும் 15 வேலம்பாளையம் என்ற பெயர் பலகைகள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

இந்த துறைகளை சார்ந்த அலுவலர்களுக்கு உண்மையிலேயே இந்த தகவல் தெரிய வில்லையா?

அல்லது
தெரிந்தே அவர்களின் கடமையை செய்ய தவறி விட்டனரா?  என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

அரசு இணையதள சேவைகளிலும் 15 வேலம்பாளையம் என்ற தகவல் இருப்பதினால் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களிலும் 15 வேலம் பாளையம் என்று தான் பதிவாகி வருகிறது.

எனவே தாங்கள் இந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து
4 வேலம்பாளையம் என பெயர் பலகைகளில்  திருத்தம் செய்ய அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப கோருகிறோம்.

ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருப்பின் கடமை தவறிய அதற்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

நாஞ்சில்கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723
நாள் : 16.01.2018

Friday 12 January 2018

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

#நண்பர் கண்ணன் அவர்களுக்கு ,
இளைஞர்கள் அழுக்கான அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிடலாமா ?
என்பது தங்களின் கேள்வி ?

பதில் :

★சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாதவன் சட்டத்தில் ஒட்டை இருப்பதாகவும் , சட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது என்று சொல்பவர்கள் மூடர்கள் .

★அதே போல் அரசியல் ஒரு  சாக்கடை என அரசியல் என்றால் என்ன என்று தெரியாதவனின் முட்டாள் தனமான வாதம் .

★ஒரு சிறந்த அரசை வழி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவன் தான் அரசியல்வாதி .

★மக்கள் பிரதியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் மக்களின் நன்மைக்காக தன்னலமற்று விருப்பு வெறுப்பு இல்லாமல் சேவை செய்ய வேண்டும் .

★அரசுடன் இணைந்து மக்கள் சேவை செய்வது தான் அரசியல் .

ஆனால் ,

★இன்று அரசியல் வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் , மக்களையும் , அரசையும் சுரண்டி  லஞ்சத்தையும் , ஊழலையும் ஊக்குவித்து குளத்தினை மூடி மறைத்திருக்கும் பாசியினை போல் இந்திய இறையாண்மையை மூடி மறைத்துள்ளனர் .

★அரசியல் கட்சி தொடங்கி பல கோடிகளை கொள்ளை அடித்து பொது சொத்துக்களை ஆக்கிரமித்து சுக போக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் .

★வாக்கு என்னும் உரிமையை கேட்டு பெறாமல் விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர் .

★இன்றைய சூழ் நிலையில் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்தால் நமது இந்திய தேசத்தை லஞ்சம் , ஊழல் , பசி , பட்டினி , வறுமை , இல்லாத வல்லரசு நாடாக மாற்ற முடியும் செய்வார்களா ?

★செய்ய மாட்டார்கள் எவனுக்கும் நாட்டின் மீதும் , நாட்டு மக்களின் மீதும் எந்த விதமான அக்கறையும் இல்லை ,

★எல்லாம் வெளி வேஷம் .

★பல்லாயிரகணக்கான அரசியல் கட்சிகள் ,

★பல கட்சிகளை சார்ந்த தலைவர்கள் .

★இவர்களின் பின்னால் இவர்களை தலைவனாக ஏற்றுக் கொண்டு தொண்டர்களாய் திரியும் மக்கள் கூட்டம் .

★அரசியல் தூய்மையானது .
புனிதமானது .
ஆனால் ,
அரசியலை வைத்து கேவலமான பிழைப்பு நடத்துகிறவன் தான் கேவலமானவன் .

★ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களை முட்டாளாக்குகின்றனர் .

★இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு போதிய விழிப்பறிவுணர்வு இல்லாதது தான் .

★அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்தவனும் கூட்டு களவாணிகளே .

★நேர்மையான தியாக மனப்பான்மையுள்ள அரசியல் வாதிகள் எத்தனை பேர் உள்ளனர் அவர்களை அடையாளம் காட்ட முடியுமா ?

★கேடுகெட்ட அரசியல்வாதிகளை தூக்கி எறியுங்கள் .

★இளைஞர்களே அரசியலுக்கு வாருங்கள் .

★மக்கள் பிரதிநிதிகளாக போட்டி இட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள் .

★ஆனால் ,
கவனம் தேவை ,
கேடுகெட்ட அரசியல்வாதிகள் உங்களையும் ஏமாற்றி அவர்கள் பக்கம் இழுத்து விடுவார்கள் .

★ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே அளப்பறிய சாதனைகள் செய்ய இயலும் .

★இனி மாற்றம் என்பது தூய்மையான அரசியலே !

★இளைஞர்களே ,
ஒன்று திரளுங்கள்
இந்த நாடு உங்களை நம்பி தான் இருக்கிறது .

★மாறுங்கள் ! மாற்றுங்கள்

★இந்த சமுதாயத்திற்காக உங்களை அர்ப்பணியுங்கள் ,

★வெற்றி தோல்விகளை பற்றி கவலைப் படாதீர்கள் .

★நமது லட்சியத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்டு முன்னேறி செல்லுங்கள் .

★நாம் எதிர்பார்த்த மாற்றம் நிச்சயம் ஒரு நாள் வரும் .

★அப்போது சாக்கடையாக மாற்றப் பட்ட அரசியல் புனிதமாகும் .

★கேடுகெட்ட அரசியல்  வாதிகள் காணாமல் போவது உறுதி .?

★இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல் . .........!!

நட்புடன் ,
நாஞ்சில் கோ..கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் .-641652
உலாபேசி : 98655 90723
04.09.2016