Thursday 30 November 2017

கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு,

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

பெறுநர் :
திரு. வாசுக்குமார் அவர்கள்
உதவி ஆணையர்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652

அய்யா, 
கடிதம் எண் : LAACO/ CL /005 /TPR/2017 ;நாள் :30.11.2017

பொருள் :பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோருவது சம்பந்தமாக குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் முறையீடு,

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டி 1998 ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை வைத்து வருகிறேன் .

மாநகராட்சி 1, 5, 14, 15. வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.

4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது  வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கழிவு நீர் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்

மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.

இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள
முதல் வார்டுக்கு  மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.

கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.

இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக  28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன்.

ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை

437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.

மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும்  வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால்  சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.

மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!

நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்சாலையினர்  சிறிய அளவிலான குழாய்களை பதித்து மண்ணால் மூடியும்  தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.

மழை காலங்களில்  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.

சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தியதுடன் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி இருப்பது மிகுந்த வேதனையையும் சொல்லொணா துயரத்தையும்  அளிக்கிறது.

சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே!  என வெற்று விளம்பர படுத்தும் கடமை தவறிய  மாநகராட்சி அதிகாரிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

₹86.25 இலட்சம் செலவு செய்தும் பிரதான கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.

கோரிக்கை : 01
மழை காலங்களில் தாங்களும், பொறீயாளர்களும்  இந்த சாலையில் நடந்தோ அல்லது இருச்சக்கர வாகனத்திலோ வந்து ஆய்வு செய்ய வேண்டுகிறோம் .

கோரிக்கை :02
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்

கோரிக்கை :03
தற்பொழுது சாலையின் நடுவில் டிவைடர் வைத்த காரணத்தினால் போக்குவரத்து  இடையூறும் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.  437 மீட்டர்  கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் சுத்தம் செய்ய வேண்டுகிறோம் .

கோரிக்கை :04
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.

கோரிக்கை ;05
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவு நீர்கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .

கோரிக்கை வைப்பது நமது கடமை!

பல முறை புகார் செய்தும் கடமை தவறிய அரசூழியர்கள் கண்டு கொள்வதில்லை!

லஞ்சம் பெறுவதினையும் ஊழல் செய்வதினையும் தான் கடமை என நினைக்கின்றனர் போலும் .

கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!

ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் செய்து தான் மக்கள் தங்கள் உரிமைகளை பெற வேண்டுமா? 

தங்களிடம் நேரிலும் இது குறித்து முறையிட்டுள்ளேன்.

தாங்கள் தங்கள் கடமைகளை செய்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.

நாள் :30.11.2017
இடம் : திருப்பூர் 

மனுதாரர்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

கொமாரபாளையம் & பவானி நகராட்சி ஆணையர் இல்ல பூப்பு நன்னீராட்டு விழா!

📢 *திருப்பூர்  அங்கேரிபாளையம் பகுதியில்  பரபரப்பு*!!
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
*அரசியல் கட்சி விழாவா*?

*🏛அரசூழியர் இல்ல விழாவா*?

*திருப்பூர் மாவட்டம்  வடக்கு வட்டம் அங்கேரி பாளையம் பகுதியில்  மாநகராட்சி வாகனங்களும், ஊழியர்களும் இன்று பரபரப்பாகவும், சுறு சுறுப்பாகவும்  பணி ஆற்றி கொண்டிருந்தனர்!*

*நல்லாற்றுக்குள் நேரடியாக செல்லும் கழிவு நீர் கால்வாய்களில் பல நாட்களாக தேங்கி நின்று சுகாதார கேடு ஏற்படுத்தி கொண்டிருந்த கழிவு நீரினை மாநகராட்சி  கழிவு நீர் வெளியேற்றும் வாகனங்கள் மூலம் சேகரித்து கொண்டிருந்தனர்*!!

*இதனை பார்த்த நமக்கு இன்ப அதிர்ச்சி*!!

ஆச்சரியம்!

*ஏனென்றால் இதே பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சி செப்டிக் டேங் கழிவு நீர் வாகனங்களில்  கழிவு நீரினை சேகரித்து கொண்டு வந்து  கடமை தவறிய  சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் நல்லாற்றில் நேரடியாக விட்டு மாசு படுத்தி வந்தனர்*!!

*இது நமது நல்லாறு பாதுகாப்புக்குழு முயற்சியால் தற்பொழுது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது*

*பரவாயில்லையே*?

*தவறு செய்த மாநகராட்சி சுகாதாரத்துறையினர்  மனம் திருந்தி தமது கடமைகளை ஒழுங்காக செய்கிறார்களோ என  நினைத்தோம்*!!

*சாலை ஓரங்களில் இருந்த  குப்பை கழிவுகள் அனைத்தும்  அகற்றி கொண்டிருந்தனர்*!!

*சாலையின் இரு புறங்களிலும் பீளீச்சிங் பவுடர் , சுண்ணாம்பு பவுடர் போட்டு பளிச்சென்று காணப்பட்டது*!!

*அந்த பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் பிளக்ஸ் பேனர்கள்  கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது*!!

*ஏதோ பூப்பு நன்னீராட்டு விழாவாம்*!!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் முத்து கிருஷ்ணன் திருமண மண்டபம் முழுவதும் இரு புறமும் கலர் கலராய் கொடிகள் தோரணங்கள்  என அமர்க்கள படுத்தி இருந்தனர்*!! 🏴🏳🌲?🌻🌼🌸🌺🍁🌲🌺🌸🌹🌷

*ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள்  விழாவிற்கு வருவதாக பிளக்ஸ் பேனரில் காணப்பட்டது*!!

ஓகோ!  அப்படியானால்,

*இது ஆளும் கட்சியை சார்ந்தவரின் மகளுக்கு நடக்கும் பூப்பு நன்னீராட்டு விழாவாக இருக்கும்.  அதனால் தான் நமது மாநகராட்சி  நிர்வாகம்  சுத்தம் சுகாதாரமாக வைத்துள்ளனர் போலும் என நினைத்தோம்*

*ஆனால்  அடுத்த பிளக்ஸ் பேனரை பார்க்கும் போது நமக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி*!!

ஆம்.

ஆர். மகேஸ்வரி 
*கொமாரபாளையம் & பவானி நகராட்சி ஆணையர்* அவர்களது மகள் *மதுமிதா என்பவருக்கு தான் *பூப்பு நன்னீராட்டு விழாவாம்*!

*ஆளும் கட்சியின் அசைக்க முடியாத உண்மை விசுவாசி என்பதினை இதன் மூலம்  காண முடிந்தது*!! 👍👍👍

*அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் ஒரு நகராட்சி பெண் ஆணையர் விழா எடுப்பது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த  ஆச்சரியமாக தான் இருக்கக்கூடும்*!! 👍

*எப்படியோ இந்த மாதிரி ஆளும் கட்சியின் விசுவாசிகளாகிய அரசூழியர்கள் அடிக்கடி  திருமண மண்டபங்களில் விழா நடத்தினால் நமது மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் சுகாதாரமாக  வைத்திருப்பார்கள் என இப்பகுதி  மக்கள்  விரும்புகின்றனர்*!!

*பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை பணி இதன் காரணமாக தான் சில நாட்களுக்கு முன் அவசர அவசரமாக நெடுஞ்சாலை துறையினரால் தார்ச்சாலை  போடப்பட்டிருக்குமோ*

🏛 *அரசூழியர் என்பதால் காவல் துறையில் சட்டப்படி அனுமதி பெற்று தான் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பார்கள் என நம்புகிறோம்*!! ✅
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர்
☎உலாபேசி :98655 90723
29.11.2017

Friday 24 November 2017

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்!

📢  *திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பிரசன்னா ராமசாமி  அவர்களின் சிறப்பு கவனத்திற்கு* !!

*குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4)இன் கீழ் முறையீடு*!!

*🏛 அரசுக்கும் ,  மாநகராட்சி  நிர்வாகத்திற்கும் பல லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்*!!

★பின்னலாடை உற்பத்தியில் பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுவதில்  குட்டி ஜப்பானாக திகழும் திருப்பூர்!

★பின்னலாடை தொழிற்சாலைகளை நம்பி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள்!

★இந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வாடகை வீடுகள்!

★பின்னலாடை தொழில் தொடர்பான பல்வேறு தொழிற்சாலைகள். நிறுவனங்கள், அலுவலகங்களில் செயல் படும் கட்டிடங்கள்!

*தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,  வீடுகள், கடைகள்,  வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் திரையரங்குகள்,மருத்துவமனைகள்  என எந்த ஒரு கட்டிடங்களும்  அரசு விதிமுறைகள் படி கட்டப்படுவதில்லை*!

★எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அனைத்தும் சட்ட விரோதமாகவே கட்டப்பட்டுள்ளன.!

✅ முக்கிய காரணம்
கடமை தவறிய *லஞ்சம் வாங்கும் மாநகராட்சி பொறியாளர்கள் ,வரி வசூலர்கள், வருவாய் அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், இடைத்தரகர்கள் மற்றும் இவர்களை ஆட்டி படைக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் வாதிகள்*!!

*சரி இவர்களால் அரசுக்கு எவ்விதம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது*?

★ஆறு காம்பவுண்ட் வீடு,  எட்டு காம்பவுண்ட் வீடு .,பத்து காம்பவுண்ட் வீடு  பதினாறு காம்பவுண்ட் வீடு , நூறு காம்பவுண்ட ,வீடு  இரு நூறு காம்பவுண்ட் வீடு  என அடை மொழியுடன்  ஓடு,  சிமெண்ட் சீட்,  தார்சு என பல் வேறு கட்டுமானங்களை கொண்டு கட்டப்பட்ட  வாடகை வீடுகள் அல்ல அல்ல.!  வாடகை அறைகள்! ஏராளம்! ஏராளம்!

★பல அடுக்கு  மாடிகளை கொண்ட தொழிற்சாலை
கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள்!

★இதில் பெரும்பாலான. கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளது.

*மாநகராட்சியால் அனுமதி பெறப்பட்டு கட்டப்படும் கட்டிடங்களும் முறை கேடாகவே கட்டப்பட்டு வருகிறது*

★அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிட உரிமையாளர்கள்  விதி முறையா அப்படி என்றால் என்ன என கேட்கின்றனர் .

*வரி விதிப்புகள் செய்வதில் தான் ஏகப்பட்ட குளறுபடிகள்! வருவாய் இழப்புகள்*!!
😡😡😡😡😡😡😡😡😡😡😡

*கட்டிட அனுமதி பெற வேண்டுமானால் வரைபடம் தயாரித்து வழங்கும் மாநகராட்சியால்  அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு பல லட்சங்களை மனுதாரர்களிடம் இருந்து  லஞ்சமாக பெற்று கட்டிட  அனுமதி பெற்று தருகின்றனர்*! 

*குறிப்பிட்ட ஒரு தொகையினை லஞ்சமாக கொடுத்தால் கட்டிட பரப்பளவினை (சதுர அடி)  குறைத்து மதிப்பீடு செய்து அரையாண்டு  வரியினை குறைத்து வழங்குவார்கள்*!

*ஒரு வீடு அல்லது இரண்டு வீடுகளுக்கு மட்டும் வரி செலுத்தி விட்டு , பல வீடுகள் வரி விதிப்பு செய்யப்படாமல் முறை கேடாக கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்*!

*பல லட்சக்கணக்கான பணத்தினை வாடகையாக பெறும் பலர் குறைந்த தொகையினை வரியாக செலுத்துகின்றனர்*!

*இதனால் மாநகராட்சிக்கு  மிகுந்த வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது*

★திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் அறுபது வார்டுகள்!

★பதினைந்து வார்டுக்கு ஒரு மண்டல அலுவலகம்!

★ஒவ்வொரு மண்டல  அலுவலகத்திற்கும் ஓரு உதவி ஆணையர் வீதம் நான்கு உதவி ஆணையர்கள்! 

★ஒரு மாநகராட்சி ஆணையர்!

★இவர்களுக்கு கீழ் பணியாற்றும் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் என பலதரப்பட்ட பல்வேறு  ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

*ஏன் இந்த முறை கேடுகள் இவர்களுக்கு தெரிவதில்லை*?

★தெரிந்திருந்தும் நடவடிக்கை  ஏன் எடுக்க வில்லை?

*இவர்களில் நேர்மையான அதிகாரிகள் யாரும் இல்லையா*?

★இவர்கள் யாருக்கு பயப்படுகின்றனர்?

*அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட இவர்கள் தான் முக்கிய காரணம்*?

எனவே,
*அரசுக்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் வருவாய் இழப்பினை சீர் படுத்தி வருவாயினை  பெருக்கிட மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய தங்களுக்கு முக்கிய பொறுப்பும் கடமையும் உள்ளது* .

*தங்கள் தலைமையில் நேர்மையான பொறியாளர்கள் அலுவலர்களை கொண்ட ஆய்வுக்குழு அமைத்து வார்டு வாரியாக ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அனைத்து விதமான கட்டிடங்கள்  ஒவ்வொன்றினையும்  தனித்தனியாக ஆய்வு செய்து முறை கேடாக செயல் படும் கட்டிடங்களுக்கு அபராதம் விதித்தும்*

*வரி செலுத்தப்படாத கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்தும்*

*சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அப்புற படுத்தியும்*

*மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாயினை பெருக்கிட வழி வகை செய்ய வேண்டுகிறோம்*🙏
✅✅✅✅✅✅✅✅✅✅✅
*கடமை தவறிய இதற்கு பொறுப்பு வகிக்கும் லஞ்ச அரசூழியர்கள் மீது கருணை காட்டாமல் பணி நீக்கம் செய்ய வேண்டுகிறோம்*🙏

*இந்த சீரிய பணியினை செய்ய தாங்கள் முன் வந்தால் பல கோடி கணக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைப்பது உறுதி*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*திருப்பூர் மாநகராட்சி பகுதிகளை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய கோருகிறோம்*🙏

✍ *பல புகார்கள், தகவல்கள், ஆதாரங்கள், கோரிக்கைகள் எங்களுக்கு வரப்பெற்ற காரணத்தினால் இதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்* .👏
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
*சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு*
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
☎ உலாபேசி : 98655 90723
நாள் : 24.11.2017

Friday 10 November 2017

திருப்பூர் நல்லாறு பாதுகாப்புக்குழு கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம்.

முக்கிய அறிவிப்பு.

அவசர அவசிய.அழைப்பிதழ்!

" நல்லாறு பாதுகாப்புக்குழு " முதல் கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம்.

திருப்பூர் வழியாக செல்லும் நல்லாறு மாசடைந்து கெட்ட ஆறாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதனால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் உள்ள அரசுத்துறை அதிகாரிகளின் அலச்சிய போக்கினாலும், அரசியலமைப்பு சாசன படி மக்களாகிய  நாமும் நமது கடமையை சிறப்புடன் ஆற்றாத காரணத்தினாலும் தான் நல்லாற்றினை மாசடைய செய்து நமக்கு நாமே சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்தி கொண்டுள்ளோம்.

நாம் பயன் படுத்த முடியாமல் போன நல்லாற்றினை எதிர் கால நம் சந்ததியினராவது பயன் படுத்திடவும், விவசாயம் செழித்திடவும் நாம் இப்போதே முழு முயற்சி எடுத்திட வேண்டிய சூழ் நிலையில் உள்ளோம்.

இதற்கு தீர்வு தான் என்ன? 

நல்லாறு உற்பத்தியாகி சென்றடையும் இடம் வரையில் உள்ள நீர் வழித்தடங்களில் காணப்படும் அனைத்து கழிவுகளையும்,  ஆக்கிரமிப்புகளையும் முற்றிலும் அகற்றி தூர்வாரப்பட வேண்டும்.

கழிவு நீர், சாய ஆலை கழிவுநீர் மாமிச கழிவுகள்,  குப்பை கூழங்கள் கொட்டப்படுவதினை முதலில் நாம் தடுத்தாக வேண்டும்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  சார்பாகவும் விரைவில் இதற்கான குழு அமைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதன் முதல் முயற்சியாக நல்லாறு பாதுகாப்பு குழு  கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

எனவே,
நண்பர்களே,
சமூக ஆர்வலர்களே,
சுற்று சூழல் ஆர்வலர்களே ,
இயற்கை ஆர்வலர்களே,
தன்னார்வலர்களே,
ஆன்றோர்களே,
சான்றோர்களே,
பெரியோர்களே,
தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களே,
சமூக அமைப்புகளை சார்ந்தவர்களே,
பொது மக்களே,
நீங்கள் அனைவரும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு உங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கி வழி நடத்திட  வாருங்கள் என இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 12.11.2017

நேரம் : காலை 10. 00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையில்

இடம் : தலைமை அலுவலகம்
            சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல்
            ஒழிப்பு அமைப்பு
            363, காந்தி ரோடு,
            பெரியார் காலனி
            திருப்பூர் -641 652

தொடர்புக்கு :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

ஆ. பழனிக்குமார்
ஒருங்கிணைப்பாளர்
உலாபேசி :97910 50513

குறிப்பு :  நல்லாறு பாதுகாப்புக்குழு
வாட்ஸ் ஆப் குரூப்பில்  இணைந்து       களப்பணி ஆற்ற ஆர்வம் உள்ள நண்பர்கள் "நல்லாறு " என டைப் செய்து உங்கள் பெயர், முகவரி, வாட்ஸ் ஆப் எண்ணுடன் 98655 90723 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.