Tuesday 23 May 2017

ஊழல் ஒழிப்பு செய்தி : 020/24.05.2017

ஊழல் ஒழிப்பு செய்தி :020 /24.05.2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெயந்தி அவர்களின் மேலான கவனத்திற்கு,

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

குற்றவாளி யார்?

சட்டத்திற்கு புறம்பாக செயல் படும் தனியாருக்கு சொந்தமான  கணேஷ் டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ்

குற்றம் நடைபெற காரணம் யார்?

திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அதிகாரிகள்!

குற்றம் என்ன?

★போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் , பயணிகளுக்கும் மிகுந்த பொது இடையூறு!!

★திருப்பூர் மாவட்டம், வடக்கு வட்டம் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்திற்குட்பட்ட. அவிநாசி சாலை பெரியார் காலனியில்  குற்றவாளியின் பல்பொருள் அங்காடி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

★இந்த கட்டிடம் பல்பொருள் அங்காடி நடத்துவதற்கான சட்டப்படியான உரிமம் பெறப்பட வில்லை!

★மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டிடம் கட்ட அனுமதி அளித்திருப்பதாக தெரிய வருகிறது.

★பல்பொருள் அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்  வாகனங்கள் நிறுத்துவதற்கான.  இடவசதி இல்லாத காரணத்தினால் பிரதான சாலையிலேயே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

★அங்காடியின் முன்புறம் பெரியார் காலனி பேருந்து நிறுத்தம் இருப்பதினால்  பல பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக  நிறுத்தப்படுகிறது .

★பேருந்துகளில் இருந்து இறங்கும் பயணிகளுக்கும்  பேருந்தில் ஏறும் பயணிகளுக்கும்  மிகுந்த இடையூறும் ஆபத்தும்  ஏற்படுகிறது.

★டி.டி.பி. மில் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்   பிரதான சாலையில் வந்து  கடந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது.

★அங்காடிக்கு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் பல மணி நேரம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்த படுவதினால்  போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

★இதனால் பல விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது.

★வாடகை கார், வேன், ஆட்டோ ஸ்டேன்ட் என சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள்  நிறுத்தப்படுகிறது.

★சிறப்பு விற்பனை என தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யும் நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்  வாடிக்கையாளர்கள்  கூட்டம் அலை மோதுகிறது .அவர்களின் வாகனங்களினால் மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.

★கட்டிட உரிமையாளருக்கு வாடகை ஒன்றே குறிக்கோள்!

★அங்காடி உரிமையாளருக்கு பணம் சம்பாதிப்பதில் குறிக்கோள்!

★மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் மட்டுமே குறிக்கோள்.

★வாடிக்கையாளருக்கு  எதைபற்றியும் கவலை இல்லை!

★நெடுஞ்சாலை துறையினரும் கண்டு கொள்வதில்லை!

★அனுப்பர்பாளையம் காவல்துறையினரும், திருப்பூர் மாநகர  போக்குவரத்து  காவல் துறையினரும் கண்டு கொள்வதில்லை.

★வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை.

★உள்ளுர் திட்ட குழும அதிகாரிகளும்  தொடர்பு இல்லாதவர்கள் போல் உள்ளனர்.

★தொழிற்சாலை ஆய்வாளர்களும் கண்டு கொள்வதில்லை!

★திருப்பூர் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் அக்கறை இல்லை.

★கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தினமலர் நாளிதழ் இது குறித்து செய்தி
வெளியிட்டது.

அரசு துறையில் பணியாற்றும் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் பொறுப்பு இல்லையா?

★இவர்கள் அனைவரும் கடமை தவறினாலும்  நாம் கடமை தவற மாட்டோம் .

கோரிக்கை : 01
*****************
பேருந்து பயணிகளுக்கும்,  சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் வாகனங்களில் செல்வோருக்கும்,   மிகுந்த இடையூறினையும், சொல்லொணா துயரத்தையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வரும்
கணேஷ் டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய கோருகிறோம்.

கோரிக்கை :02
*****************
கட்டிட உரிமையாளர்  மீது வழக்கு பதிவு செய்து கட்டிட உரிமத்தினை ரத்து செய்ய கோருகிறோம்.

கோரிக்கை :03 
*****************
சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளித்த மாநகராட்சி கடமை தவறிய இதற்கு பொறுப்பு வகிக்கும் லஞ்ச. அதிகாரிகளை பதவி நீக்கம்  செய்ய கோருகிறோம்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து பல ஆண்டுகளாக தொடரும்  போக்குவரத்து  இடையூறினை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் சார்பாக வேண்டுகிறோம்.

மாவட்ட ஆட்சியராகிய தாங்களும் கடமை தவறும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் முன்னறிவிப்பின்றி சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில், ,.

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
திருப்பூர்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
உதவி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
செய்தியாளர்
உலாபேசி : 98655 90723

.உண்மை சம்பவங்கள்  தொடரும் ..,!!

Monday 22 May 2017

"முப்பெரும் விழா அழைப்பிதழ் "


முப்பெரும் விழா அழைப்பிதழ் "

★தனியார் பள்ளி கல்லூரிகளின் கல்விக்கட்டண கொள்ளைக்கு எதிராக போராடி கல்விக்கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட தமிழக NGO, மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்ட ஓர் கூட்டமைப்பு உதயம்.

★ "ஏவுகணை " மாத இதழ் வெளியீடு.

★சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், சமுக அமைப்பை சார்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் சங்கமிக்கும் மாபெரும்  கலந்தாய்வு கூட்டம்

நிகழ்ச்சி நிரல் :
*****************
நாள் : 28.05. 2017

இடம்  : பாரத் கல்லூரி,
             புதிய பேருந்து நிலையம்             
             அருகில்
             தஞ்சாவூர்.

நேரம் : காலை 9.30 மணி 

"ஏவுகணை " தமிழ் மாத இதழ் வெளியீடு :
*****************************************
தலைமை : Adv. V.N. சுப்பிரமணியன் அவர்கள்,  உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.

வரவேற்புரை  :Adv .M. நெடுஞ்செழியன் அவர்கள், ஆசிரியர், & பொது செயலாளர் (MASS)

வெளியிடுபவர் : ஆந்திரா &தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதியரசர் வெ. ராம சுப்பிரமணியன் அவர்கள் .

பெறுபவர் : திருமதி. மணிமேகலை அவர்கள்,  திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகம்
Adv. V. ஜீவகுமார் அவர்கள்
R.சரவண குமார் அவர்கள் (Mass)

நன்றியுரை : Adv. P. சுகுமாறன் அவர்கள்  MASS

"கருத்தரங்கம் "
*****************
காலை : 11.00 மணி :

இன்றைய கல்வி , மகளிர் குழந்தைகள் நலம், இன்றைய விவசாயம், இன்றைய அரசியல் என  சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கு பெறும்  மாபெரும் "கருத்தரங்கம் "
  
தலைமை : N.நாக சுப்பிரமணியம்           
அவர்கள் மனித உரிமைகள் மற்றும்  நுகர்வோர் பாது காப்பு சங்கம்.                                       

அறிமுக உரை : S. கிள்ளி வளவன் அவர்கள், கல்விக்கான பெற்றோர்களின் அகில இந்திய அமைப்பு

முன்னிலை :Adv.பன்னீர் செல்வம் அவர்கள், தலைவர் MASS
மாதேஸ்வரன் அவர்கள், பொது செயலாளர் ,  AIPFE TN
J.கணேச மூர்த்தி அவர்கள் சன் டி. வி

வரவேற்புரை : D.S. ஆனந்த குமார் அவர்கள்,
Prof. பிரபா கல்விமணி அவர்கள்
திருமதி. மணிமேகலை அவர்கள்
Adv. ஜீவகுமார் அவர்கள்
V.மாணிக்கம்,  Rtd .காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

நன்றியுரை : குமாரி .இராதா 

சமூக ஆர்வலர்களின் கலந்தாய்வு கூட்டம்.
*******************************************
நேரம் : மாலை 4.00 மணி

தலைமை : அரியலூர் ரா. சங்கர் அவர்கள், நாஞ்சில் கோ.கிருஷ்ணன் அவர்கள், "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " திருப்பூர்.

முன்னிலை :Ln. Y.V.S. ரெட்டி, ஓசூர்
திரு. சீளிவாசன்,அவர்கள், ஆசிரியர், நெல்லை
மருத்துவர் .இரவிச்சந்திரன் அவர்கள் பாலக்கோடு,

வரவேற்புரை : திரு. தெய்வக்குமார் அவர்கள் ,  திருச்சி

நன்றியுரை : திருமதி. பிரேமா அவர்கள், திருச்சி

★கல்வி தனியார் மயமாவதை தடுத்திட,

★கல்வி வணிக மயமாவதை தடுத்திட,

★தனியார் பள்ளி, கல்லூரிகளின்
கட்டணக்கொள்ளையை ஒழித்திட,

★அனைவருக்கும் இலவச கல்வியை உறுதி படுத்திட, 

★சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் பள்ளி நிர்வாகிகள் மீதும் அதற்கு துணை போகும் கடமை தவறிய மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணம் பெற்றிடவும்,

★தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதினை முறைபடுத்துதல் சட்டம் -2009 ன் படி  கல்விக்கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்த கட்டணங்களை விட மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த கட்டணங்களை திருப்பி வழங்கிடவும், அந்தந்த  பள்ளிகளின் உரிமத்தினை ரத்து செய்திடவும்,

★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009. ன்  கீழ் கல்வி பயிலும் மாணவர்களிடம் பள்ளிகள் முறைகேடாக வசூலித்துள்ள கட்டணங்களை திருப்பி வழங்க கோரியும்,

★கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் -1992 ன் படி கட்டாயமாக பெறப்பட்ட  நன்கொடைகளை திருப்பி வழங்க கோரியும்,

★நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்களின் துயரினை போக்கவும்,

தனியார் பள்ளி, கல்லூரிகளின் கல்விக்கட்டண கொள்ளைக்கு எதிரான தமிழக NGO,மற்றும்  சமூக ஆர்வலர்களை கொண்ட புதிய
கூட்டமைப்பு துவக்கம்.

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் தொடர்புக்கு :
*****************************************
Adv . M. நெடுஞ்செழி்யன் அவர்கள்
பொது செயலாளர்
MULTIPLE ACTION FOR SOCIAL SOLIDARITY
உலா பேசி : 93444 77066

S. கிள்ளிவளவன் அவர்கள்
துணை பொதுசெயலாளர்
ALL INDIA PARENTS FORUM FOR EDUCATION
உலா பேசி : 94441 67795

அரியலூர் ரா. சங்கர் அவர்கள்
மாநில தலைவர் 
உலாபேசி : 98655 43303
நாஞ்சில் கோ.கிருஷ்ணன் அவர்கள்
நிறுவனர்
LEGAL. AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION
உலாபேசி :98655 90723

மற்றும் அனைத்து விழாக்குழுவினர்கள்.

பெற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் நண்பர்கள் என  அனைவரும் இதனையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு கல்விக்கான எங்களது சீரிய முயற்சிக்கு  ஆதரவு நல்கிடுமாறும்  அனைத்து  விழாக்குழுவினர் சார்பாக வருக வருக என அன்புடன்  வரவேற்கிறோம்.
நன்றி.

Sunday 21 May 2017

ஊழல் ஒழிப்பு செய்தி:0020 தனியார் மெட்ரிக்மேல்நிலை பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் நடத்த அரசு அனுமதி இல்லை!!

📢 #ஊழல் ஒழிப்பு செய்தி :0020 /21.05.2017
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
குற்றம் நடைபெற்று கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

குற்றவாளிகள் யார்?

மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்! 🏛

முக்கிய அறிவிப்பு!!✅

★நண்பர்களே!  பெற்றோர்களே!!
உங்கள் மழலை குழந்தைகளை  Pre.KG என்னும் ஆரம்ப நிலை வகுப்பில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறீர்களா? 
அப்படியானால் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

★நர்சரி, மற்றும் பிரைமரி பள்ளிகளில் மட்டும் உங்கள் குழந்தைகளை  சேர்த்து படிக்க வையுங்கள்.

★தயவு செய்து தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் சேர்க்காதீர்கள்!

★ஏனென்றால்  மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் நடத்த அரசு அனுமதி கிடையாது.

★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் சட்டத்துக்கு புறம்பாக நடை பெற்று வருகிறது.

★கல்வியை வியாபாரமாக்கி கோடி கோடியாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கும்  தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகிகள்.

★இந்த கல்வி கொள்ளையர்களை கண்காணித்து நடவடிக்கை  எடுக்க வேண்டிய மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்  கடமையை செய்ய தவறுகின்றனர்.

★காரணம் கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்ச பணம்.

★லஞ்சம் என்னும் மலம் தின்னும் மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்  உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர் .

★மாணவ, மாணவிகள் குழந்தைகளின் நலனில் இவனுகளுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.

★பள்ளிக்கல்வி துறையின் மாணவர்கள் பாதுகாப்பு நலன்  அரசாணைகளை தனியார் பள்ளிகள் முழுமையாக கடை பிடிப்பதாக போலியான ஆவணம் தயாரித்து  பள்ளிக்கல்வி துறையையும் அரசையும் ஏமாற்றி வருகிறார்கள்.

★மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு  தெரிந்திருந்தும்  கண் இருந்தும் குருடர்களாய்  காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய்  எதுவும் தெரியாத நேர்மையானவர்களாய்  வலம் வருகின்றனர்.

★புகார்அளித்தாலும்✍ நடவடிக்கை  எடுப்பதில்லை! 
காரணம் லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம் மட்டுமே!

★ஒரு பள்ளி செயல்பட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் லஞ்சம் கொடுத்து  போலி சான்றிதழ்களாக பெற்று பள்ளி நிர்வாகிகள்  மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர்களிடம் வழங்குகின்றனர்.

★இந்த கேடு கெட்ட ஆய்வாளர்கள் பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்ததாக போலியான ஆய்வறிக்கை தயார் செய்து மெட்ரிக்பள்ளி இயக்குநரிடம் கொடுத்து பள்ளியின் உரிமத்தினை புதுப்பித்து கொடுக்கின்றனர்.

★மெட்ரிக்பள்ளி நிர்வாகிகளுக்கு என்று ஒரு சங்கம்  உண்டு.
இவர்கள் ஏன் இதனை கண்டு கொள்வதில்லை?

★கும்பகோணத்தில் 94 மழலை குழந்தைகள் தீயில் கருகி மடிய காரணம் யார் ?

★போதும்!   இனி மேல் இது போன்றதொரு துயர சம்பவம் வேண்டாம் 😂😂

★அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராகவும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் செயல் படும் மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்களே!

★தமிழகத்தில் ஏதாவது ஒரு தனியார் பள்ளியாவது அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் நடை பெறுகிறது என உங்களால் சொல்ல முடியுமா?

★மானம் கெட்டவர்களே! 
உடனடியாக சட்டத்திற்கு எதிராக. Pre.KG வகுப்புகள் நடத்தும் மெட்ரிக்மேல்நிலை பள்ளிகளின் உரிமத்தினை ரத்து செய்யுங்கள்.

★அந்த பள்ளிகளில் பயிலும் மழலை குழந்தைகளை காப்பாற்றுங்கள்!

★இல்லையெனில் நாடு முழுவதும் உள்ள  உங்கள் அலுவலகத்தினை முற்றுகை இடும் சூழ்நிலை விரைவில் உருவாகும்

★விடமாட்டோம் கல்வியின் பெயரால் கொள்ளை அடிக்கும் கயவர்களையும் அதற்கு துணை போகும் கல்வி அதிகாரிகளையும்.

கல்வி விழிப்பறிவுணர்வு பணியில் .,.🤝

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
363, காந்தி ரோடு, பெரியார் காலனி,
திருப்பூர் -641 652.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
உதவி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
செய்தியாளர்
☎உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
செய்தி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
செய்தியாளர்
☎உலா பேசி :98655 43303

குறிப்பு : நண்பர்களே! பெற்றோர்களே!
Pre.KG வகுப்பு நடத்தும் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளின் விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.👆 நன்றி.🙏

Tuesday 2 May 2017

செயல் படாத தமிழக தகவல் ஆணையம்! கடமை தவறிய மாநில தகவல் ஆணையர்கள்!! பாதிக்கப்படும் பொது மக்கள்!!!


#செயல் படாத தமிழக தகவல் ஆணையம்!
#கடமை தவறிய மாநில தகவல் ஆணையர்கள்!!
#பாதிக்கப்படும் பொது மக்கள்!!!

★தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005
******************************************
15.06.2005 ஆம் ஆண்டு மேதகு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு 12.10.2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் (காஷ்மீர் நீங்கலாக)  இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

★இச்சட்டத்தின் நோக்கம் :
*******************************************
★அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் பாட்டிலும்  வெளிப்படையான  ஒளிவு மறைவற்ற நிலையை கொண்டு வருதல் .

★அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணி புரிபவர்களுடைய பொறுப்புடமையை மேம்படுத்துதல்.

★அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களை பெற விரும்பும் குடி மக்களுக்கு அதை அளிக்க வகை செய்வதோடு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்.

★மாநில தகவல் ஆணையம் :
*******************************************
தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 15 -ன் படியும், அரசு ஆணை ( நிலை)  எண் :988 பொதுத்துறை நாள் :07.10.2005. ன் படியும் "மாநில தகவல் ஆணையம் "  செயல்பட்டு வருகிறது.

★மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் :
*******************************************
இந்த ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் உட்பட பத்துக்கும் மேற்படாத தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மாநில முதல்வர் , முதல்வரால் நியமிக்கப்படும் அமைச்சர், மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவரின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.

★பொது தகவல் அலுவலர்கள் :
*******************************************
இச்சட்டப்பிரிவு 5 (1)  ன் படி அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் ஒரு பொது தகவல் அளிக்கும் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

★என்னென்ன தகவல்கள் பெறலாம்?
*******************************************
இந்திய இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்ககூடும் அல்லது வள ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கருதும் தகவல்களை கேட்க கூடாது.

பொது மக்கள் தங்களுக்கு தேவை என கருதும் தகவல்களை அந்தந்த துறையை சேர்ந்த பொதுதகவல் அலுவலருக்கு சட்டப்பிரிவு 6 (1)  ன்கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 7 (1)  ன் கீழ் பொது தகவல் அலுவலர் 30 தினங்களுக்குள் தகவல்  வழங்க வேண்டும்.

சட்டப்பிரிவு 6 (2)  ன் படி தகவல் கோருவதற்கான காரணங்களை பொது தகவல் அலுவலர் கேட்கக்கூடாது.

தகவல் மறுக்கப்படும் போது சட்டப்பிரிவு 4 (1) d ன் படி அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 7 (3) a ன் படி ஆவண நகல்களுக்கான கட்டண விபரங்களை தனித்தனியாக குறிப்பிட்டு எந்த கணக்கில் எவ்வாறு செலுத்த வேண்டும் என பொது தகவல் அலுவலர் தெரிவிக்க வேண்டும்

★விண்ணப்ப கட்டணம் :
*******************************************
₹ 10 ரூபாய் பணமாகவோ, நீதிமன்ற வில்லையாகவோ, வங்கி வரையோலையாகவோ, கருவூல செலுத்து சீட்டு மூலமாகவோ செலுத்தலாம்.

வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

★முதல் மேல் முறையீடு :
*******************************************
30 தினங்களுக்குள்  பொது தகவல் அலுவலர் தகவல் வழங்க வில்லை என்றாலோ அல்லது குறைபாடான தவறான தகவல் வழங்கினாலோ சட்டப்பிரிவு 19 (1)  ன் கீழ் அந்தந்த துறையின்  மேல் முறையீட்டு அலுவலருக்கு முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

முதல் மேல் முறையீட்டு அலுவலர் 30 தினங்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் .

★இரண்டாவது மேல் முறையீடு :
*******************************************
முதல்  மேல் முறையீட்டு அலுவலரும் 30 தினங்களுக்குள் தகவல் வழங்கா விட்டாலோ அல்லது தவறான தகவல் வழங்கினாலோ  சட்டப்பிரிவு 19 (3)  ன் மாநில தகவல் ஆணையருக்கு இரண்டாவது மேல் முறையீடு செய்ய வேண்டும்.

பொது தகவல் அலுவலருக்கு தகவல் கோரிய நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இரண்டாவது மேல் முறையீட்டினை பெற்ற தகவல் ஆணையம் ஒவ்வொரு முறையீட்டிற்கும் வழக்கு எண் இட வேண்டும்.

இரண்டாம் மேல் முறையீட்டினை பரிசீலனை செய்த மாநில தகவல் ஆணையர் தகவல் வழங்க பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிடவோ
அல்லது மனுதாரருக்கும் பொது தகவல் அலுவலருக்கும் அழைப்பானை அனுப்பி நேரில் விசாரணை செய்து உரிய தகவல் பெற்று தர வேண்டும்.

மேலும், ஆவண நகல்களை சட்டப்பிரிவு 7 (6)  ன் படி இலவசமாக வழங்க பொதுதகவல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.

★அபராதம் மற்றும் தண்டனைகள் :
*******************************************
சட்டப்பிரிவு 7 (1)  ன் கீழ் 30 தினங்களுக்குள் தகவல் வழங்காத கடமை தவறிய பொது தகவல் அலுவலருக்கு நாள் ஒன்றுக்கு ₹ 250 ரூபாய் வீதம் அதிக பட்சம் ₹ 25000 ரூபாய் வரையிலும் சட்டப்பிரிவு 20 (1)  ன் கீழ்  அபராதம் விதித்து அந்த பணத்தினை அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

கடமை தவறிய குற்றத்திற்காக சட்டப்பிரிவு 20 (2)  ன் கீழ் துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

★மனுதாரருக்கு இழப்பீடு :
*******************************************
மனுதாரருக்கு  மன உளைச்சல் மற்றும் கால நேர பொருளாதார விரையம் ஏற்படுத்திய பொது தகவல் அலுவலரிடம் இருந்து சட்டப்பிரிவு 19 (8) b ன் படி இழப்பீட்டு தொகையினை பெற்றுத்தர வேண்டும்.

இது தான் தனி மனித சுதந்திர சட்டமான "தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 "

ஆனால் அரசுத்துறைகளில் உள்ள பொது தகவல் அலுவலர்கள் இந்த சட்டத்தினை மதிப்பதே இல்லை.

சரியான தகவல் வழங்காமல் மனுதாரர்களை அலைகழித்து வருகிறார்கள்.

கடமை தவறிய பொது தகவல் அலுவலர்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலர்கள்.!

இவர்களை கண்காணித்து இரண்டாவது மேல் முறையீடுகளின் மீது உரிய விசாரணை செய்து மனுதாரர்களுக்கு தகவல் பெற்று தர வேண்டிய தகவல் ஆணையர்கள் சர்வாதிகாரிகளைப் போல் செயல் படுகிறார்கள்.

தகவல் ஆணையம் தறி கெட்ட ஆணையமாக மாறி விட்டது.

கடமை தவறிய பொது தகவல் அலுவலர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படாத காரணத்தினால் அரசுக்கு பல கோடி இழப்பீடு ஏற்படுத்தி வருகிறார்கள்.

துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தயங்குகிறார்கள்.

எனவே கடமை தவறிய பொது தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையம் மீது பயம் இல்லாமல் போய்விட்டது.

இதன் காரணமாக இச்சட்டம் நீர்த்து போக செய்யப்பட்டு வருவது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தகவல் ஆணைய மேல் முறையீட்டு விதிகளில் திருத்தம் செய்து மனுதாரர்களுக்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கும் எதிராக செயல் பட்டு வருகிறார்கள்.

ஏழு ஆணைய பணி இடங்களில் தற்பொழுது நான்கு ஆணையர்களே பணியில் உள்ளனர்.

சட்டப்பிரிவு 4(1) அ வின் படி அனைத்து அரசுத்துறைகளும் அந்தந்த துறைகளின் செயல் பாடுகளையும், அரசாணைகளையும் ஆண்டு தோறும் பொது மக்கள் தெரியும் வண்ணம் எந்த முறையில் தெரிவித்தால் பயன் பெற கூடுமோ அல்லது  வலை தளங்கள் மூலம் வெளியிட  வேண்டும்.

ஆனால் இதனை எந்தத்துறையும் நடை முறை படுத்த வில்லை

# தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம் உங்கள் பார்வைக்கு :
*******************************************
21.04.2015 அன்று சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் அவர்கள் சார்பில் மாநில தகவல் ஆணைய பொது தகவல் அலுவலருக்கு சில தகவல்கள் கோரப்பட்டது.

ஆனால் 30 தினங்களுக்குள் பதில் வழங்கவில்லை.

முதல் மேல் முறையீடு செய்த பின் வழங்கிய பதில் வியப்பில் ஆழ்த்தியது.

கேள்வி :
தற்பொழுது பதவியில் உள்ள தகவல் ஆணையர்களின் பெயர், கல்வி தகுதி,பணியில் சேர்ந்தநாள், பணி ஓய்வு பெறும் நாள், பணி நேரம்,  மாதஊதியம், பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கவும்.

பதில் :
www.tnsic.gov.in என்ற ஆணைய வலைதளத்தினை பார்க்கவும்.

கேள்வி :
தகவல் ஆணையத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள், பணியாளர்களின் பெயர், பதவியின் பெயர் கல்வி தகுதி, மாத ஊதியம் பற்றிய முழுமையான தகவல் வழங்கவும்.

பதில் :
www.tnsic.gov.in என்ற ஆணைய வலை தளத்தை பார்க்கவும்.

ஆனால் இந்த தகவல்கள் மேற்காண் வலைதளத்தில் இல்லை.

கேள்வி :
தங்கள் அலுவலக கடமை தவறிய பொது தகவல் அலுவலருக்கு நுகர்வோர் நீதிமன்றம் எந்த ஆண்டு எவவளவு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது,

அந்த தொகை எந்த தேதியில் எந்த கணக்கில் இருந்து யாருடைய பணத்தில் இருந்து வழங்கப்பட்டது.

அவ்வாறு அபராத தொகை வழங்கப்பட வில்லை எனில் அதற்கான காரணங்களை சட்டப்பிரிவு 4 (1) d ன்படி தெரிவிக்கவும்.

பதில் :
இல்லை. கேள்வி எழாது.

(நுகர்வோர் நீதிமன்றம் மாநில தகவல் ஆணைய பொது தகவல் அலுவலருக்கு ₹ 5000 ரூபாய் அபராதம் விதித்தது .
ஆனால் இல்லை என தகவல் மறுக்கப்பட்டுள்ளது.)

கேள்வி :
தற்பொழுது தகவல் ஆணையர்கள் பதவி ஏற்ற நாள் முதல் இன்றைய தேதி வரையிலும் கடமை தவறிய எந்தெந்த துறை பொது தகவல் அலுவலர்களுக்கு எவ்வளவு ரூபாய் அபராதம் எந்தெந்த தேதிகளில் விதிக்கப்பட்டுள்ளது அவர்களின் பெயர் மற்றும் வழக்கு எண் பற்றிய தகவல் வழங்கவும்.

பதில் :
தொகுத்து வைக்கப்படவில்லை.

கேள்வி :
தற்போதைய தலைமை தகவல் ஆணையர் பதவி ஏற்றது முதல் இன்றைய தேதி வரையிலும் தகவல் ஆணையத்திற்கு வரப்பெற்ற இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் மொத்தம் எத்தனை?

இதில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை?

தள்ளுபடி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை?

வழக்கு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை,?

நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை?

பதில் :
தொகுத்து வைக்கப்படவில்லை.

தகவல் ஆணையர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எந்தெந்த மனுதாரர்கள் மீது காவல் நிலையத்தில் எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வழங்கவும்.

பதில் :
மூன்றாம் நபர் குறித்த தகவல் வழங்க இயலாது.

கேள்வி :
தகவல் ஆணையர்களுக்கு சுழல் விளக்கு பொறுத்திய வாகனங்களில் பயணிக்க அனுமதி உள்ளதா என்ற தகவல் வழங்கவும்.

பதில் :
மாநில தகவல் ஆணையர்கள் தலைமை செயலாளர் அந்தஸ்து பெற்றுள்ளதால் அவ்வாறு பயணிக்கலாம்.

கேள்வி :
சட்டப்பிரிவு 7 (1)  ன் கீழ் 48 மணி நேரத்தில் ஒரு பொது அதிகார அமைப்பிடம் தகவல் கோரிய மனுதாரருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனில் முதல் மேல்முறையீடு மற்றும் இரண்டாம் மேல் முறையீடு எவ்வளவு மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும் என்ற தகவல் வழங்கவும்

பதில் :
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை படித்து பார்க்கவும்.

கேள்வி :
இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பம் மனுதாரரிடம் இருந்து பெறப்பட்டு எவ்வளவு நாட்களுக்குள் விசாரணை செய்து வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்ற,  அரசாணையின் ஒளி
நகல் வழங்கவும்.

பதில் :
காலவரையறை ஏதுமில்லை.

இரண்டாவது மேல் முறையீடு செய்த பின் இன்று வரையிலும் வழக்கு விசாரணைக்கு  வரவில்லை.

மாநில தகவல் ஆணையமே தகவல்களை தொகுத்து வைக்க வில்லை என கூறியிருப்பது எவ்வளவு வெக்க கேடான செயல்.

இவ்வாறான கேடு கெட்ட சட்டத்திற்கு எதிரான தகவல்களை வழங்குவது மாநில தகவல் ஆணையம்  செயல் பட வில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இந்த கடமை தவறிய தகவல் ஆணையர்களால் மனுதாரர்களுக்கு எந்த பயனும் இல்லை.

இதற்கெல்லாம் மூல காரணம் நமது ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான ஆணையர்களை  பதவியில் வைத்திருப்பது தான்.

இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் நேர்மையான ஆட்சியா
ளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் .-641 652
உலா பேசி :98655 90723