Friday 29 December 2017

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

📢 திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
👍👍👍👍👍👍👍👍👍👍👍
திருப்பூர் மாவட்டம்.
அவினாசி தாலுக்கா பெருமாநல்லூர் பிரசித்திப் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான  6 ஏக்கர் நிலத்தில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக  ஆக்கிரமிப்பு செய்து 33 கடைகள் மற்றும் 29 குடியிருப்பு வீடுகள், தனியார் பள்ளி உட்பட பலர் ஆக்கிரமிப்புகள் செய்து கொள்ளை லாபம் அடைந்து வந்தனர்.

இதனால் அறநிலையத்துறைக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

பல புகாரினை  தொடர்ந்து கடந்த 19 . 12. 2017. தேதி அன்று அறநிலையத்துறை  ஆணையர் உத்தரவின் பேரில் இன்று 28-12-2017 திருப்பூர் உதவி ஆணையர் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றம் செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ✅

இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள், மற்றும் அரசியல் கட்சியினர் அமோக வரவேற்பு அளித்துள்ளனர் .👏
✍நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
28.12.2017

Sunday 24 December 2017

அரசு கேபிள் டி.வி இலவச செட்டாப்பாக்ஸ் பெறுவது எப்படி?

தமிழக அரசின் இலவச கேபிள் டிவி செட்டாபாக்ஸ்   இணைப்பு  பெறுவது எப்படி?

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது புகார் செய்வது எப்படி?

TACTV. என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது  அரசு செட்டாப் பாக்ஸ் ஆகும்.

ஒரு செட்டாப் பாக்ஸ் விலை ₹1800 ரூபாய் என மும்பை தனியார் நிறுவனத்தில் தமிழக அரசு கொள் முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த செட்டா பாக்ஸை கேபிள் டி.வி சந்தாதாரர்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது.

கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களிடம்  இணைப்பு வழங்குவதற்கு பிட்டிங் (Insulation fees ) கட்டணமாக ₹200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என அரசு அறிவித்துள்ளது .

கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் ஒரு செட்டாபாக்ஸ்க்கு அரசுக்கு ₹180 ரூபாய் வைப்புத்தொகை கட்டணம் செலுத்தி செட்டாபாக்ஸினை பெற்று வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும் .

 கட்டணம் :

மாத  சந்தா கட்டணம் இருவகையாக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

1. 200 சேனல்களுக்கு ₹125 ரூபாயும், 
2. 300 சேனல்களுக்கு ₹175 ரூபாயும் GST 18% சேர்த்து மாத சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.

இதில் ₹125 ரூபாயில் ₹ 62.50. காசு அரசுக்கும்,₹ 62.50 கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும்
₹175 ரூபாயில் ₹75 ரூபாய் அரசுக்கும், ₹100 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் சேரும்.

அரசு செட்டாபாக்ஸ் இணைப்பு பெற முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டணம் செலுத்திய ரசீது, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் ஆப்பரேட்டரிடம் கொடுத்தால் போதும் .

புகார் ;

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்ட துணை மேலாளர்களுக்கு (தாசில்தார்கள்)  அரசு வழங்கி உள்ள மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

மாவட்டம்                 மொபைல் எண்கள் 

1. அரியலூர்                     :94980 02568

2. சென்னை                    :94980 17185 

3.சென்னை                    : 94890 17285

4.கோவை                      : 94980 02569 

5.கடலூர்                          :94989 02570 

6.தர்மபுரி                        : 94980 02571 

7.திண்டுக்கல்             :94980 02572 

8.ஈரோடு                        : 94980 02573 

9.காஞ்சீபுரம்                : 94980 02574 

10. கன்னியாகுமரி   :94980 02575

11.கரூர்                            : 94980 02576 

12.கிருஷ்ணகிரி        :94980 02577 

13.மதுரை                       : 94980 02578 

14.நாகப்பட்டினம்        :94980 02579 

15.நாமக்கல்                  : 94980 02580 

16.பெரம்பலூர்            : 94980 02581 

17.புதுக்கோட்டை       : 94980 02582 

18.இராமநாதபுரம்      : 94980 02583 

19. சேலம்                        :94980 02584 

20.சிவகங்கை             : 94980 02585 

21.தஞ்சாவூர்               : 94980 02586

22.ஊட்டி                          :94980 02587 

23.தேனி                         : 94980 02588 

24.தூத்துக்குடி            : 94980 02589 

25.திருச்சி                      :94980 02590 

26.திருநெல்வேலி    : 94980 02591 

27.திருப்பூர்                  ;94980 02592 

28.திருவள்ளூர்        : 94980 02593 

29.திருவண்ணாமலை :94980 02594

30.திருவாரூர்           : 94980 02595 

31. வேலூர்                  : 94980 02596 

32.விழுப்புரம்            : 94980 02597 

33.விருதுநகர்          : 94980 02598

அரசு கேபிள் டி வி செட்டாபாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் குறித்து    புகார் தெரிவித்துள்ள தெரிவிக்க நினைக்கும்  பாதிக்கப்பட்ட நண்பர்களே*!

*சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள* *அரசு கேபிள் டி.வி. புகார்*
*வாட்ஸ் ஆப் குரூப்பில்* *உங்களது புகாரினை பதிவு செய்ய வேண்டுகிறோம்*

*அரசு கேபிள் டி.வி மாவட்ட மேலாளர்கள் என்றழைக்கப்படும் சென்னை, ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், இராமநாதபுரம், ஊட்டி, திருவண்ணாமலை, திருப்பூர் (சொந்த மொபைல் எண்) ஒரு சில மாவட்ட  தாசில்தார்களுக்கு அரசு வழங்கி உள்ள வாட்ஸ் ஆப் எண்களை இந்த குரூப்பில்  இணைத்துள்ளோம்*

*உங்களது புகாரினை பதிவு செய்து நிவாரணம் பெற்று பயனடையுங்கள்*

*கேபிள் ஆப்பரேட்டர்கள் வழங்கும் தனியார் செட்டா பாக்ஸினை தவிர்த்து அரசு வழங்கும் இலவச செட்டாபாக்ஸ்க்கு ₹ 200 மட்டும் கட்டணம் செலுத்தி அரசிற்கு  வருவாய் இழப்பு ஏற்படுவதினை தடுத்திட உதவுங்கள்*

*பெரும்பாலான மாவட்ட மேலாளர்கள் தொடர்பு எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் தொடர்பினை ஏற்க வில்லை என்றும் பல புகார்கள் வரப்பெற்றுள்ளது*

*கடமை தவறிய பல மாவட்ட மேலாளர்கள் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாக ஆதாரத்துடன்  புகார்கள் வந்த வண்ணம் உள்ளது*

*எனவே பாதிக்கப்பட்ட அந்தந்த மாவட்ட பகுதி மக்கள் கீழ் காணும் எண்களில் புகார் தெரிவிக்கலாம்*

கட்டணம் இல்லா தொலைபேசி எண்: 1800 425 9211
044 28432911 
FAX NO : 044 28432913
E -mail :tactv@tactv.in
For internet Enquiries : tactnet@tactv.in

தலைமை அலுவலக முகவரி ;
Tamil Nadu Arasu Cable TV Corporation
Dugar Towers
34 (123)6th Floor
Marshalls Road
Egmore, CHENNAI -600 008

24 மணி நேரமும்    செயல் படும்  அம்மா அழைப்பு மையம் ;1100. புகார் தெரிவிக்கலாம். 

சட்ட விழிப்புணர்வு பணியில் .......

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

நிறுவனர் 

*சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு*
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

*அரசு கேபிள் டி.வி. புகார்  வாட்ஸ் ஆப் எண்*: *98655 90723*

கேபிள் டி.வி .ஆப்பரேட்டர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் புகார் அளியுங்கள்.

கொடுக்க வேண்டாம் லஞ்சம்.!

அரசு செட்டாபாக்ஸ் இணைப்பு பெறுவது நமது உரிமை!

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதினை தடுப்பது நமது கடமை.! 

அவசர அவசிய கோரிக்கை :

அரசு கேபிள் டி.வி  மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட மேலாளர்களின் கவனத்திற்கு,

அரசு இலவச செட்டாபாக்ஸ் பல மாவட்டங்களில் இருப்பு இல்லை என தகவல் வருகிறது. 

இதனை பயன்படுத்தி தனியார் செட்டாபாக்ஸினை கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தி வருகின்றனர்.

அரசு செட்டாபாக்ஸ்க்கு  ₹ 300 முதல் ₹2000 ரூபாய் வரை கூடுதல்  கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

தனியார் செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்க அரசு அனுமதி அளித்ததின் மூலம் அரசு கேபிள் டி.வி நிறுவனம் நலிவடையும் நிலையில் உள்ளது.

தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நிலைக்கு அரசு தான் காரணம். இதற்கு கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் துணை போகின்றனர். 

கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்களால் பல வாடிக்கையாளர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.

பல பகுதிகளில்  ஆப்பரேட்டர்கள் கேபிள்  இணைப்பினை   துண்டித்து வருகிறார்கள்.

அரசு செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்க முடியாது என கூறி வலு கட்டாயமாக தனியார் செட்டாபாக்ஸ் பொருத்தி வருகிறார்கள். 

அரசு இலவச செட்டா பாக்ஸ்க்கு கூடுதல்  கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்களின் உரிமத்தினை ரத்து செய்யக்கோரியும், தனியார் செட்டாபாக்ஸினை கட்டாயப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு  விற்பனை செய்து தனியாருக்கு வருமானத்தினை ஈட்டி தரும் ஆப்பரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் , அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்.    இலவச செட்டாபாக்ஸ் வழங்கி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதினை தடுத்து நிறுத்த கோருகிறோம்.  

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

30.12.2017 




Tuesday 5 December 2017

திருப்பூரில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூடுதல் கட்டிடம்.!

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

எதிர் மனுதாரர்கள் :
01.பள்ளி முதல்வர் /தாளாளர்
கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
அங்கேரிபாளையம் சாலை
திருப்பூர் -641 603

02.உதவி ஆணையர் அவர்கள்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர் பாளையம்
திருப்பூர்..642 652

03.துணை இயக்குநர் அவர்கள்
நகர ஊரமைப்புத்துறை அலுவலகம்
திருப்பூர்.

04.முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்
முதன்மைக்கல்வி அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர் 

05.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அவர்கள்
மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்
முதன்மைக்கல்வி அலுவலக வளாகம்
ஈரோடு. 1

06.வட்டாட்சியர் அவர்கள்
இரண்டாம் வகுப்பு மாஜிஸ்டிரேட்டு
வட்டாட்சியர் அலுவலகம்
திருப்பூர் வடக்கு. 

07 .நிலைய அலுவலர்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம்
திருப்பூர். 641 603

08. துணை இயக்குநர் அவர்கள்
சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம்
திருப்பூர்.

பெறுநர் :
மாவட்ட செயல்துறை நடுவர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருப்பூர் மாவட்டம்.

கடிதம் எண்: LAACO/ CL/006 /TPR /2017 ;நாள் :07.12.2017

அய்யா,

பொருள் :மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில்  சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள்  கட்டிடத்தினை  குற்ற விசாரணைமுறைச்சட்டம் -1973 சட்டப்பிரிவு -144 இன் கீழ் தடை செய்யக்கோரி அவசர பொதுநலப்புகார் மனு,

பார்வை :
01.மனுதாரர் பழனிக்குமார் 03.03.2017அன்று கொடுத்த புகார் மனுவிற்கு  திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் பதில் கடித ந.க.எண் :இ1/341/2017/டி1 நாள் :07.03.2017

02..மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுதாரர்  பழனிக்குமார் என்பவர் கொடுத்த புகார் மனு நாள் : 22.05.2017 மற்றும் 05.06.2017

03. முதன்மைக்கல்வி அலுவலரின் கடித. .ந க எண் :3439/அ/4/2017 நாள் ;24.05.2017

04.முதன்மைக்கல்வி அலுவலரின் கடித ..எண் ; 3439/அ4/2017 நாள் ;09.06.2017

கும்பகோணம் பள்ளி தீவிபத்து ஏற்பட்டு 94 மழலை குழந்தைகள் தீயில் கருகி மடிந்ததை அடுத்து அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சம்பத் கமிஷன்
2661 தனியார் பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்து அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கட்டிட உரிமம் பெறாமல் 1670 பள்ளிகளும்,  கட்டிட உறுதித்தன்மை இல்லாமல் 1557 பள்ளிகளும், சரியான மின் இணைப்பு செய்யப்படாமல்   1281 பள்ளிகளும்,  தீத்தடுப்பு உபகரணங்கள்  இல்லாமல்  2386 பள்ளிகளும் முறைகேடாக இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு வட்டம் திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலக கட்டுப்பாட்டில்  உள்ள
எதிர்மனுதாரர் :01 என்பவர் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தினை இடித்து புதிய பள்ளிக்கட்டிடத்தினை கட்டி வருகிறார்கள்.

எதிர்மனுதாரர் : 02 என்பவர் பார்வை  01 ல் குறிப்பிட்டுள்ள கடிதத்தின் படி எதிர்மனுதாரர் :01 என்பவர் கட்டிட உரிமம் பெறாமல் முறைகேடாக கட்டிடம் கட்டி வருவது உறுதியாய் தெரிகிறது.

இது தரைதளத்துடன்  இரண்டு மேல் தளங்களுடன் கூடிய 36 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் என தெரிய வருகிறது.

எதிர்மனுதாரர் : 01 கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மாநகராட்சி கட்டிட உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக அவசர அவசரமாக பள்ளி நடைப்பெற்றுக்கொண்டு இருக்கும் போது  கட்டப்படும் கட்டிடம் உறுதித்தன்மை இருக்க வாய்ப்பில்லை.

மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை இல்லாமல்,  சட்ட விரோதமாகவும்  அரசாணைகளுக்கு எதிராகவும், அதிகார பலம், பணபலம், கடமை தவறிய அரசூழியர்களின் தயவினால் தற்பொழுது பள்ளிக்கட்டிடப்பணிகள் நிறைவடைந்து   06.12.2017 அன்று எதிர் மனுதாரர் :01 என்பவர் திறப்பு விழா நடத்தி முடித்து விட்டார்கள். 

பார்வை : 02 ல் காணும் மனுதாரர் பழனிக்குமார் என்பவர் தங்களுக்கு அளித்த புகார் மனுக்கள் பார்வை :03. 04 ல் காணும் எதிர்மனுதாரர் ;03 முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதம்
எதிர்மனுதாரர் :05 என்பவரான மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

எதிர்மனுதாரர் ;02 மாநகராட்சி உதவி ஆணையர் அவர்கள் எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாய் மொழியாக தெரிவித்துள்ளார். ஆனால்  கட்டிடம் கட்ட முறைப்படி அனுமதி பெறப்படாவிட்டாலும் கட்டிய கட்டிடத்திற்கு சிறிய அபராதத்துடன் உரிமம் வழங்கி வரி விதிப்பு செய்து  விடுவார்கள்.

எதிர்மனுதாரர் :03 நகர ஊரமைப்பு துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றிருப்பார்களா?  அவர்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கி இருப்பார்களா என தெரிய வில்லை.

எதிர்மனுதாரர் :04 முதன்மைக்கல்வி அலுவலருக்கு முழு அதிகாரம் இருந்தும் எதிர்மனுதாரர் :05 என்பவருக்கு ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் படி கடிதம் அனுப்பியதுடன் அவர் பணி முடிந்து விட்டதாக கருதுகிறார். ஆனால் எதிர்மனுதாரர் :05 என்பவர் எந்த ஆய்வறிக்கையும் வழங்க வில்லை.

எதிர்மனுதாரர் :05. மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர் அவர்கள் இது நாள் வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு ஆதரவாக செயல் படுவது உறுதியாக தெரிகிறது.

எதிர்மனுதாரர் :06 இரண்டாம் நிலை மாஜிஸ்டிரேட் ஆகிய வட்டாட்சியர் அவர்கள் ஸ்டேட்மென்ட் டு தி அக்கம்பெனி  உரிமத்தினை செட்டிபாளைம் கிராம நிர்வாக அலுவலர் மூலம் எதிர்மனுதாரர் :01 என்பவருடைய பள்ளிக்கு பல மாதங்களுக்கு முன்னர் நேரில் சென்று கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

எதிர்மனுதாரர் :07. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை நிலைய அலுவலர் அரசாணைகளிலும்  நிலைய செக் லிஸ்டில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் முறையாக கடை பிடிக்கப்பட்டுள்ளதாகவும்  கட்டிடம் கட்டுவதிற்கும்  பள்ளி நடத்துவதிற்கும் யாதொரு தடையும் இல்லை என ஆய்வு செய்ததாக  தடையின்மை சான்றினையும் வழங்கி விடுவார்கள்.
(ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அனைத்து பள்ளி  கட்டிடங்களுக்கும் போலிச்சான்று வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது)

எதிர்மனுதாரர் :08. சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரும்  சுத்தம் சுகாதாரம், கழிவறை , காற்றோட்டம், வெளிச்சம்,குடிநீர்  உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதாக சுகாதாரச்சான்று வழங்கி விடுவார்கள்.

தற்பொழுது உரிமம் பெறாமல் எதிர்மனுதாரர் :01 என்பவர் கட்டி வரும் கட்டிடத்தினை தீயணைப்பு வாகனம் சுற்றி வந்து தீயை அணைக்கும் வகையில் அரசாணைகளில் குறிப்பிட்டுள்ள படி  காலி இடம் விடப்படாமல் கட்டி உள்ளார்கள்.

சுமார் 1500 மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் பள்ளிக்கட்டிடத்தினை சுற்றி வர முடியாத நிலையில்  கல்வி பயிலும் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்டு  பள்ளி நடைபெறறு வரும்  கட்டிடங்களில் மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளில் சொல்லப்பட்டுள்ள எந்த ஒரு விதிமுறைகளும் மேற் காண் எதிர்மனுதாரர் :01 என்பவருடைய பள்ளியில் முழுமையாக கடை பிடிக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டினை பகிரங்கமாக பதிவு  செய்கிறேன்.

சமூக சேவையில் கல்வி பணி!  நன்கொடை இல்லை என வெற்று விளம்பரம் செய்து வரும் எதிர் மனுதாரர் :01 கொங்கு வெள்ளாளர் அறக்கட்டளை நிர்வாகியும் பள்ளி துணைத்தலைவருமான கீதாஞ்சலி கோவிந்தப்பன் என்பவர்  முதலில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை திருந்தச்சொவ்லுங்கள்.  அனைத்து சான்றுகளையும் லஞ்சம் கொடுத்து வாங்கி தான் பள்ளியை நடத்தி வருவதாகவும்,  அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டணத்தினை ஏதாவது ஒரு தனியார் பள்ளி வாங்கி இருப்பதினை நிரூபித்தால் தனது ஒரு காதினை அறுத்து கொள்கிறேன் என  கல்விக்கட்டணம் கூடுதலாக வசூலிப்பது குறித்து கேள்வி கேட்ட பெற்றோர் ஒருவரிடம் மிரட்டும்   தொனியில் பேசி இருக்கிறார்.
(வீடியோ ஆதாரம் உள்ளது)

இவ்வாறு முறை கேடாக செயல் படும் எதிர்மனுதாரர் :01 என்பவரது பள்ளிக்கு கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் அனைவரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதில் எதிர்மனுதாரர் :05 மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர் அவர்கள் தான் முக்கிய குற்றவாளி என்பதினையும், இவர் அரசு பணிக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவர்  என்ற குற்றச்சாட்டினையும் பகிரங்கமாக பதிவு செய்கிறேன்.

எனவே மாவட்ட. செயல்துறை நடுவராகிய தாங்கள் மேற்காண் எதிர்மனுதாரர்களை உரிய முறையில் விசாரணை செய்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயில குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு. -144 இன் கீழ்  தடை விதிப்பதுடன், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினை இடித்து அப்புறப்படுத்தக்கோரியும், கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த அவசர பொது நலப்புகார் மனுவினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

மேற்கண்ட புகாரில் எதிர்மனுதாரர்கள் மீது நான் கூறி  உள்ள சங்கதிகளை் எனது அறிவுக்கு எட்டிய வகையில் உண்மை என  நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சியச்சட்டப்பிரிவு -101 மற்றும் -105 இன் கீழ் எனக்கு இருக்கிறது எபதினை நான் அறிவேன்.

மேற்காண் புகாரில் நான் கூறி உள்ள சங்கதிகளை என்னால் நிரூபிக்க இயலாமல் போனால் இந்தியத்தண்டனைச்சட்டப் பிரிவு -211 இன் கீழ் நீதிமன்றம் வழங்கும் தண்டனையை மனதார ஏற்றுக்கொள்வேன் என இந்திய சாட்சியச்சட்டப்பிரிவு -70 இன் கீழ் பிரம்மாணமாக இன்றைய தேதியில் நான்  கையொப்பம் செய்துள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் : 07

நாள் : 07.12.2017
இடம் : திருப்பூர் 

மனுதாரர்

Saturday 2 December 2017

அரசு கேபிள் டி.வி. புகாருக்கு!!

அரசு கேபிள் டி.வி தாசில்தார்களிள் தொடர்பு எண்கள் ;

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி
மாவட்ட மேலாளர்கள்( தனி தாசில்தார்)
அலைபேசி  எண்களை தொடர்பு கொண்டு உங்கள் பகுதியில் கேபிள் ஆப்பரேட்டர்கள்  அரசு வழங்கும் இலவச செட்டா பாக்ஸ்க்கு இணைப்பு கட்டணம ்₹ 200 விட கூடுதல் கட்டணம் கேட்டால் புகார் அளியுங்கள்.

1. ARIYALUR
+91-9498002568

2. CHENNAI
+91-9498017185

3. CHENNAI
+91-9498017285

4. COIMBATORE
+91-9498002569

5. CUDDALORE
+91-9498002570

6. DHARMAPURI
+91-9498002571

7. DINDIGUL
+91-9498002572

8. ERODE
+91-9498002573

9. KANCHIPURAM
+91-9498002574

10. KANNIYAKUMARI
+91-9498002575

11. KARUR
+91-9498002576

12. KRISHNAGIRI
+91-9498002577

13. MADURAI LIONEL
+91-9498002578

14. NAGAPATTINAM
+91-9498002579

15. NAMAKKAL
  . +91-9498002580

16. PERAMBALUR
+91-9498002581

17. PUDUKKOTTAI
+91-9498002582

18. RAMANATHAPURAM M. +91-9498002583

19. SALEM
+91-9498002584

20. SIVAGANGAI
+91-9498002585

21. THANJAVUR
+91-9498002586

22. THE NILGIRIS
+91-9498002587

23. THENI
+91-9498002588

24. THOOTHUKKUDI
+91-9498002589

25. TIRUCHIRAPPALLI
+91-9498002590

26. TIRUNELVELI
+91-9498002591

27. TIRUPPUR
+91-9498002592

28. TIRUVALLUR
+91-9498002593

29. TIRUVANNAMALAI
+91-9498002594

30. TIRUVARUR
+91-9498002595

31. VELLORE
+91-94980 02596

32. VILLUPURAM
+91-94980 02597

33. VIRUDHUNAGAR
+91-94980 02598

சட்ட விழிப்புணர்வு பணியில் ...

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!
மாறுங்கள்!  மாற்றுங்கள்!

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,  காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர், -641 652
உலாபேசி ; 98655 90723

தொடர்பு கொள்ளும் நேரம் ;தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை.

Thursday 30 November 2017

கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு,

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

பெறுநர் :
திரு. வாசுக்குமார் அவர்கள்
உதவி ஆணையர்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652

அய்யா, 
கடிதம் எண் : LAACO/ CL /005 /TPR/2017 ;நாள் :30.11.2017

பொருள் :பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோருவது சம்பந்தமாக குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் முறையீடு,

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டி 1998 ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை வைத்து வருகிறேன் .

மாநகராட்சி 1, 5, 14, 15. வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.

4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது  வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கழிவு நீர் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்

மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.

இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள
முதல் வார்டுக்கு  மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.

கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.

இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக  28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன்.

ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை

437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.

மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும்  வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால்  சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.

மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!

நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்சாலையினர்  சிறிய அளவிலான குழாய்களை பதித்து மண்ணால் மூடியும்  தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.

மழை காலங்களில்  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.

சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தியதுடன் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி இருப்பது மிகுந்த வேதனையையும் சொல்லொணா துயரத்தையும்  அளிக்கிறது.

சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே!  என வெற்று விளம்பர படுத்தும் கடமை தவறிய  மாநகராட்சி அதிகாரிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

₹86.25 இலட்சம் செலவு செய்தும் பிரதான கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.

கோரிக்கை : 01
மழை காலங்களில் தாங்களும், பொறீயாளர்களும்  இந்த சாலையில் நடந்தோ அல்லது இருச்சக்கர வாகனத்திலோ வந்து ஆய்வு செய்ய வேண்டுகிறோம் .

கோரிக்கை :02
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்

கோரிக்கை :03
தற்பொழுது சாலையின் நடுவில் டிவைடர் வைத்த காரணத்தினால் போக்குவரத்து  இடையூறும் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.  437 மீட்டர்  கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் சுத்தம் செய்ய வேண்டுகிறோம் .

கோரிக்கை :04
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.

கோரிக்கை ;05
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவு நீர்கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .

கோரிக்கை வைப்பது நமது கடமை!

பல முறை புகார் செய்தும் கடமை தவறிய அரசூழியர்கள் கண்டு கொள்வதில்லை!

லஞ்சம் பெறுவதினையும் ஊழல் செய்வதினையும் தான் கடமை என நினைக்கின்றனர் போலும் .

கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!

ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் செய்து தான் மக்கள் தங்கள் உரிமைகளை பெற வேண்டுமா? 

தங்களிடம் நேரிலும் இது குறித்து முறையிட்டுள்ளேன்.

தாங்கள் தங்கள் கடமைகளை செய்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.

நாள் :30.11.2017
இடம் : திருப்பூர் 

மனுதாரர்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

கொமாரபாளையம் & பவானி நகராட்சி ஆணையர் இல்ல பூப்பு நன்னீராட்டு விழா!

📢 *திருப்பூர்  அங்கேரிபாளையம் பகுதியில்  பரபரப்பு*!!
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
*அரசியல் கட்சி விழாவா*?

*🏛அரசூழியர் இல்ல விழாவா*?

*திருப்பூர் மாவட்டம்  வடக்கு வட்டம் அங்கேரி பாளையம் பகுதியில்  மாநகராட்சி வாகனங்களும், ஊழியர்களும் இன்று பரபரப்பாகவும், சுறு சுறுப்பாகவும்  பணி ஆற்றி கொண்டிருந்தனர்!*

*நல்லாற்றுக்குள் நேரடியாக செல்லும் கழிவு நீர் கால்வாய்களில் பல நாட்களாக தேங்கி நின்று சுகாதார கேடு ஏற்படுத்தி கொண்டிருந்த கழிவு நீரினை மாநகராட்சி  கழிவு நீர் வெளியேற்றும் வாகனங்கள் மூலம் சேகரித்து கொண்டிருந்தனர்*!!

*இதனை பார்த்த நமக்கு இன்ப அதிர்ச்சி*!!

ஆச்சரியம்!

*ஏனென்றால் இதே பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சி செப்டிக் டேங் கழிவு நீர் வாகனங்களில்  கழிவு நீரினை சேகரித்து கொண்டு வந்து  கடமை தவறிய  சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் நல்லாற்றில் நேரடியாக விட்டு மாசு படுத்தி வந்தனர்*!!

*இது நமது நல்லாறு பாதுகாப்புக்குழு முயற்சியால் தற்பொழுது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது*

*பரவாயில்லையே*?

*தவறு செய்த மாநகராட்சி சுகாதாரத்துறையினர்  மனம் திருந்தி தமது கடமைகளை ஒழுங்காக செய்கிறார்களோ என  நினைத்தோம்*!!

*சாலை ஓரங்களில் இருந்த  குப்பை கழிவுகள் அனைத்தும்  அகற்றி கொண்டிருந்தனர்*!!

*சாலையின் இரு புறங்களிலும் பீளீச்சிங் பவுடர் , சுண்ணாம்பு பவுடர் போட்டு பளிச்சென்று காணப்பட்டது*!!

*அந்த பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் பிளக்ஸ் பேனர்கள்  கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது*!!

*ஏதோ பூப்பு நன்னீராட்டு விழாவாம்*!!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் முத்து கிருஷ்ணன் திருமண மண்டபம் முழுவதும் இரு புறமும் கலர் கலராய் கொடிகள் தோரணங்கள்  என அமர்க்கள படுத்தி இருந்தனர்*!! 🏴🏳🌲?🌻🌼🌸🌺🍁🌲🌺🌸🌹🌷

*ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள்  விழாவிற்கு வருவதாக பிளக்ஸ் பேனரில் காணப்பட்டது*!!

ஓகோ!  அப்படியானால்,

*இது ஆளும் கட்சியை சார்ந்தவரின் மகளுக்கு நடக்கும் பூப்பு நன்னீராட்டு விழாவாக இருக்கும்.  அதனால் தான் நமது மாநகராட்சி  நிர்வாகம்  சுத்தம் சுகாதாரமாக வைத்துள்ளனர் போலும் என நினைத்தோம்*

*ஆனால்  அடுத்த பிளக்ஸ் பேனரை பார்க்கும் போது நமக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி*!!

ஆம்.

ஆர். மகேஸ்வரி 
*கொமாரபாளையம் & பவானி நகராட்சி ஆணையர்* அவர்களது மகள் *மதுமிதா என்பவருக்கு தான் *பூப்பு நன்னீராட்டு விழாவாம்*!

*ஆளும் கட்சியின் அசைக்க முடியாத உண்மை விசுவாசி என்பதினை இதன் மூலம்  காண முடிந்தது*!! 👍👍👍

*அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் ஒரு நகராட்சி பெண் ஆணையர் விழா எடுப்பது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த  ஆச்சரியமாக தான் இருக்கக்கூடும்*!! 👍

*எப்படியோ இந்த மாதிரி ஆளும் கட்சியின் விசுவாசிகளாகிய அரசூழியர்கள் அடிக்கடி  திருமண மண்டபங்களில் விழா நடத்தினால் நமது மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் சுகாதாரமாக  வைத்திருப்பார்கள் என இப்பகுதி  மக்கள்  விரும்புகின்றனர்*!!

*பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை பணி இதன் காரணமாக தான் சில நாட்களுக்கு முன் அவசர அவசரமாக நெடுஞ்சாலை துறையினரால் தார்ச்சாலை  போடப்பட்டிருக்குமோ*

🏛 *அரசூழியர் என்பதால் காவல் துறையில் சட்டப்படி அனுமதி பெற்று தான் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பார்கள் என நம்புகிறோம்*!! ✅
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர்
☎உலாபேசி :98655 90723
29.11.2017