Tuesday 5 December 2017

திருப்பூரில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூடுதல் கட்டிடம்.!

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

எதிர் மனுதாரர்கள் :
01.பள்ளி முதல்வர் /தாளாளர்
கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
அங்கேரிபாளையம் சாலை
திருப்பூர் -641 603

02.உதவி ஆணையர் அவர்கள்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர் பாளையம்
திருப்பூர்..642 652

03.துணை இயக்குநர் அவர்கள்
நகர ஊரமைப்புத்துறை அலுவலகம்
திருப்பூர்.

04.முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்
முதன்மைக்கல்வி அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர் 

05.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அவர்கள்
மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்
முதன்மைக்கல்வி அலுவலக வளாகம்
ஈரோடு. 1

06.வட்டாட்சியர் அவர்கள்
இரண்டாம் வகுப்பு மாஜிஸ்டிரேட்டு
வட்டாட்சியர் அலுவலகம்
திருப்பூர் வடக்கு. 

07 .நிலைய அலுவலர்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம்
திருப்பூர். 641 603

08. துணை இயக்குநர் அவர்கள்
சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம்
திருப்பூர்.

பெறுநர் :
மாவட்ட செயல்துறை நடுவர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருப்பூர் மாவட்டம்.

கடிதம் எண்: LAACO/ CL/006 /TPR /2017 ;நாள் :07.12.2017

அய்யா,

பொருள் :மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில்  சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள்  கட்டிடத்தினை  குற்ற விசாரணைமுறைச்சட்டம் -1973 சட்டப்பிரிவு -144 இன் கீழ் தடை செய்யக்கோரி அவசர பொதுநலப்புகார் மனு,

பார்வை :
01.மனுதாரர் பழனிக்குமார் 03.03.2017அன்று கொடுத்த புகார் மனுவிற்கு  திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் பதில் கடித ந.க.எண் :இ1/341/2017/டி1 நாள் :07.03.2017

02..மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுதாரர்  பழனிக்குமார் என்பவர் கொடுத்த புகார் மனு நாள் : 22.05.2017 மற்றும் 05.06.2017

03. முதன்மைக்கல்வி அலுவலரின் கடித. .ந க எண் :3439/அ/4/2017 நாள் ;24.05.2017

04.முதன்மைக்கல்வி அலுவலரின் கடித ..எண் ; 3439/அ4/2017 நாள் ;09.06.2017

கும்பகோணம் பள்ளி தீவிபத்து ஏற்பட்டு 94 மழலை குழந்தைகள் தீயில் கருகி மடிந்ததை அடுத்து அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சம்பத் கமிஷன்
2661 தனியார் பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்து அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கட்டிட உரிமம் பெறாமல் 1670 பள்ளிகளும்,  கட்டிட உறுதித்தன்மை இல்லாமல் 1557 பள்ளிகளும், சரியான மின் இணைப்பு செய்யப்படாமல்   1281 பள்ளிகளும்,  தீத்தடுப்பு உபகரணங்கள்  இல்லாமல்  2386 பள்ளிகளும் முறைகேடாக இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு வட்டம் திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலக கட்டுப்பாட்டில்  உள்ள
எதிர்மனுதாரர் :01 என்பவர் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தினை இடித்து புதிய பள்ளிக்கட்டிடத்தினை கட்டி வருகிறார்கள்.

எதிர்மனுதாரர் : 02 என்பவர் பார்வை  01 ல் குறிப்பிட்டுள்ள கடிதத்தின் படி எதிர்மனுதாரர் :01 என்பவர் கட்டிட உரிமம் பெறாமல் முறைகேடாக கட்டிடம் கட்டி வருவது உறுதியாய் தெரிகிறது.

இது தரைதளத்துடன்  இரண்டு மேல் தளங்களுடன் கூடிய 36 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் என தெரிய வருகிறது.

எதிர்மனுதாரர் : 01 கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மாநகராட்சி கட்டிட உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக அவசர அவசரமாக பள்ளி நடைப்பெற்றுக்கொண்டு இருக்கும் போது  கட்டப்படும் கட்டிடம் உறுதித்தன்மை இருக்க வாய்ப்பில்லை.

மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை இல்லாமல்,  சட்ட விரோதமாகவும்  அரசாணைகளுக்கு எதிராகவும், அதிகார பலம், பணபலம், கடமை தவறிய அரசூழியர்களின் தயவினால் தற்பொழுது பள்ளிக்கட்டிடப்பணிகள் நிறைவடைந்து   06.12.2017 அன்று எதிர் மனுதாரர் :01 என்பவர் திறப்பு விழா நடத்தி முடித்து விட்டார்கள். 

பார்வை : 02 ல் காணும் மனுதாரர் பழனிக்குமார் என்பவர் தங்களுக்கு அளித்த புகார் மனுக்கள் பார்வை :03. 04 ல் காணும் எதிர்மனுதாரர் ;03 முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதம்
எதிர்மனுதாரர் :05 என்பவரான மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

எதிர்மனுதாரர் ;02 மாநகராட்சி உதவி ஆணையர் அவர்கள் எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாய் மொழியாக தெரிவித்துள்ளார். ஆனால்  கட்டிடம் கட்ட முறைப்படி அனுமதி பெறப்படாவிட்டாலும் கட்டிய கட்டிடத்திற்கு சிறிய அபராதத்துடன் உரிமம் வழங்கி வரி விதிப்பு செய்து  விடுவார்கள்.

எதிர்மனுதாரர் :03 நகர ஊரமைப்பு துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றிருப்பார்களா?  அவர்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கி இருப்பார்களா என தெரிய வில்லை.

எதிர்மனுதாரர் :04 முதன்மைக்கல்வி அலுவலருக்கு முழு அதிகாரம் இருந்தும் எதிர்மனுதாரர் :05 என்பவருக்கு ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் படி கடிதம் அனுப்பியதுடன் அவர் பணி முடிந்து விட்டதாக கருதுகிறார். ஆனால் எதிர்மனுதாரர் :05 என்பவர் எந்த ஆய்வறிக்கையும் வழங்க வில்லை.

எதிர்மனுதாரர் :05. மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர் அவர்கள் இது நாள் வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு ஆதரவாக செயல் படுவது உறுதியாக தெரிகிறது.

எதிர்மனுதாரர் :06 இரண்டாம் நிலை மாஜிஸ்டிரேட் ஆகிய வட்டாட்சியர் அவர்கள் ஸ்டேட்மென்ட் டு தி அக்கம்பெனி  உரிமத்தினை செட்டிபாளைம் கிராம நிர்வாக அலுவலர் மூலம் எதிர்மனுதாரர் :01 என்பவருடைய பள்ளிக்கு பல மாதங்களுக்கு முன்னர் நேரில் சென்று கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

எதிர்மனுதாரர் :07. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை நிலைய அலுவலர் அரசாணைகளிலும்  நிலைய செக் லிஸ்டில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் முறையாக கடை பிடிக்கப்பட்டுள்ளதாகவும்  கட்டிடம் கட்டுவதிற்கும்  பள்ளி நடத்துவதிற்கும் யாதொரு தடையும் இல்லை என ஆய்வு செய்ததாக  தடையின்மை சான்றினையும் வழங்கி விடுவார்கள்.
(ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அனைத்து பள்ளி  கட்டிடங்களுக்கும் போலிச்சான்று வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது)

எதிர்மனுதாரர் :08. சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரும்  சுத்தம் சுகாதாரம், கழிவறை , காற்றோட்டம், வெளிச்சம்,குடிநீர்  உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதாக சுகாதாரச்சான்று வழங்கி விடுவார்கள்.

தற்பொழுது உரிமம் பெறாமல் எதிர்மனுதாரர் :01 என்பவர் கட்டி வரும் கட்டிடத்தினை தீயணைப்பு வாகனம் சுற்றி வந்து தீயை அணைக்கும் வகையில் அரசாணைகளில் குறிப்பிட்டுள்ள படி  காலி இடம் விடப்படாமல் கட்டி உள்ளார்கள்.

சுமார் 1500 மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் பள்ளிக்கட்டிடத்தினை சுற்றி வர முடியாத நிலையில்  கல்வி பயிலும் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்டு  பள்ளி நடைபெறறு வரும்  கட்டிடங்களில் மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளில் சொல்லப்பட்டுள்ள எந்த ஒரு விதிமுறைகளும் மேற் காண் எதிர்மனுதாரர் :01 என்பவருடைய பள்ளியில் முழுமையாக கடை பிடிக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டினை பகிரங்கமாக பதிவு  செய்கிறேன்.

சமூக சேவையில் கல்வி பணி!  நன்கொடை இல்லை என வெற்று விளம்பரம் செய்து வரும் எதிர் மனுதாரர் :01 கொங்கு வெள்ளாளர் அறக்கட்டளை நிர்வாகியும் பள்ளி துணைத்தலைவருமான கீதாஞ்சலி கோவிந்தப்பன் என்பவர்  முதலில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை திருந்தச்சொவ்லுங்கள்.  அனைத்து சான்றுகளையும் லஞ்சம் கொடுத்து வாங்கி தான் பள்ளியை நடத்தி வருவதாகவும்,  அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டணத்தினை ஏதாவது ஒரு தனியார் பள்ளி வாங்கி இருப்பதினை நிரூபித்தால் தனது ஒரு காதினை அறுத்து கொள்கிறேன் என  கல்விக்கட்டணம் கூடுதலாக வசூலிப்பது குறித்து கேள்வி கேட்ட பெற்றோர் ஒருவரிடம் மிரட்டும்   தொனியில் பேசி இருக்கிறார்.
(வீடியோ ஆதாரம் உள்ளது)

இவ்வாறு முறை கேடாக செயல் படும் எதிர்மனுதாரர் :01 என்பவரது பள்ளிக்கு கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் அனைவரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதில் எதிர்மனுதாரர் :05 மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர் அவர்கள் தான் முக்கிய குற்றவாளி என்பதினையும், இவர் அரசு பணிக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவர்  என்ற குற்றச்சாட்டினையும் பகிரங்கமாக பதிவு செய்கிறேன்.

எனவே மாவட்ட. செயல்துறை நடுவராகிய தாங்கள் மேற்காண் எதிர்மனுதாரர்களை உரிய முறையில் விசாரணை செய்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயில குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு. -144 இன் கீழ்  தடை விதிப்பதுடன், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினை இடித்து அப்புறப்படுத்தக்கோரியும், கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த அவசர பொது நலப்புகார் மனுவினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

மேற்கண்ட புகாரில் எதிர்மனுதாரர்கள் மீது நான் கூறி  உள்ள சங்கதிகளை் எனது அறிவுக்கு எட்டிய வகையில் உண்மை என  நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சியச்சட்டப்பிரிவு -101 மற்றும் -105 இன் கீழ் எனக்கு இருக்கிறது எபதினை நான் அறிவேன்.

மேற்காண் புகாரில் நான் கூறி உள்ள சங்கதிகளை என்னால் நிரூபிக்க இயலாமல் போனால் இந்தியத்தண்டனைச்சட்டப் பிரிவு -211 இன் கீழ் நீதிமன்றம் வழங்கும் தண்டனையை மனதார ஏற்றுக்கொள்வேன் என இந்திய சாட்சியச்சட்டப்பிரிவு -70 இன் கீழ் பிரம்மாணமாக இன்றைய தேதியில் நான்  கையொப்பம் செய்துள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் : 07

நாள் : 07.12.2017
இடம் : திருப்பூர் 

மனுதாரர்

No comments:

Post a Comment