Saturday 22 October 2016

ஊழல் ஒழிப்பு செய்தி ; 0001

" பொது நல வழக்கு வெற்றி!  வெற்றி!  "

ஊழல் ஒழிப்பு செய்தி - 001
அவசர செய்தி! முக்கிய அறிவிப்பு!!

பொய் வழக்கு ! 
கைது செய்ய திட்டம்!!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் நந்த குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்!!

சமூக ஆர்வலர்  சட்ட. விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில தலைவர் அரியலூர் ரா. சங்கர் அவர்கள் மீது இந்திய தண்டணைச்சட்டப். பிரிவு : 147, 148, 294 b,447,  506 (2)   மற்றும்  P D P P ACT : 4 ன் கீழ்  பொய் வழக்கு பதிவு செய்ததிற்கான காரணம் என்ன?

வாரியை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக அடுக்கு மாடி கட்டிடம் கட்டி வருவது குறித்து புகார் அளித்த காரணத்தினால் திட்ட மிட்டு சங்கர் அவர்களையும் பொய் வழக்கில் இணைத்துள்ளார்கள் .

பொய் வழக்கு பதிவு செய்த கடமை தவறிய  காவல் உதவி ஆய்வாளர் நந்த குமாருக்கு  அமைப்பின் சார்பில் மிகுந்த கண்டணத்தை பதிவு செய்கிறோம்.

சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நாளன்று இரவு ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சங்கர் அவர்கள் மீது திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

பொய் வழக்கினை முறியடிப்போம்.!!

உடனடியாக பொய் வழக்கிலிருந்து விடுவிக்க கோருகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723
அரியலூர் ரா. சங்கர்
உலாபேசி :98655 43303

கடமை தவறிய அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் எண் :94981 59973
நண்பர்களே!  இவரது எண்ணிற்கு தங்களது கண்டணத்தை அனுப்புங்கள்.
அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி.
குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

வாரிகளை (வாய்க்கால்)  காண வில்லை!!

"உண்மை சம்பவம் "

மனுதாரர் :
R. சங்கர்
மாநில தலைவர்
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
அரியலூர்.

எதிர் மனுதாரர் :

தமிழ் நாடு அரசு வீட்டு வசதி வாரியம்
அரியலூர் மாவட்டம்.

பொருள் : வாரி (வாய்க்கால்)  நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாகவும், வீடுகளாகவும் கட்டி மோசடியாக  விற்பனை செய்து வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாரிகளை மீட்கக் கோரி  சென்னை உயர் நீதி மன்றத்தில்  2014 ஆம் ஆண்டு பொதுநல மனு :

W.P NO : 13092 /2014

"உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு "

28 .07 .2016 அன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல், மற்றும் நீதிபதி மகாதேவன்  அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த மேற்காண் மனுவில் குறிப்பிட்டுள்ள வாரி ஆக்கிரமிப்புகளை மூன்று மாதத்திற்குள் அரியலூர் வட்டாட்சியர் அகற்ற வேண்டும் !!

அரியலூர் மாவட்டத்தில் குரும்பன் சாவடி கிராமத்தில். க..ச. எண் :223, 224, 225, 227, 233, 234, 34/1. ல் உள்ள வாரிகளை காண வில்லை.

அதிர்ச்சி அடைந்த சங்கர் அவர்கள்  எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

இறுதியாக தமிழ் நாடு அரசு வீட்டு வசதி வாரியம் பேஸ் :1,  2, 3 என வீட்டு மனைகளாகவும் வீடுகளாகவும் கட்டி விற்பனை செய்யப்பட்டு வரும் இடம் தான் அவர் தேடிய வாரிகள் என உறுதி செய்தார்கள்.

கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர்,  பொது பணி துறையினர், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், மாவட்ட பதிவாளர்  போன்ற இதற்கு பொறுப்பு வகிக்கும் கடமை தவறிய கேடு கெட்ட அரசூழியர்கள் அனைவரும் கூட்டு களவானிகளே!!

இந்த கூட்டு களவானிகளிடம் பல புகார் அளித்தும் இந்த அயோக்கியர்கள் நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை.

அரசு நிலம் என்று வீடு வாங்கி ஏமாந்த அப்பாவி பொது மக்கள்.

பல லட்சங்களை சம்பாதித்த அதிகாரிகள்.

சமீபத்தில் உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்  நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை என அறிக்கை அளிக்கும் படி உத்தரவு இட்டது.

நீர் நிலைகளை சுற்றிலும் 15 மீட்டர் தூரத்திற்குள் எந்த விதமான கட்டு மானமும் இருக்கக் கூடாது.

இந்த உத்தரவு என்ன ஆனது?

அரியலூர் மாவட்ட ஆட்சியர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

கடமை தவறிய அதிகாரிகள் நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மாட்டார்கள் .

எனவே உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீர் நிலைகளை காக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை கடமை தவறிய அரியலூர்  வட்டாட்சியர்  நிறைவேற்றுவாரா?

கடமை தவறிய அதிகாரிகளை தண்டிப்பது யார்? 

பொறுத்திருப்போம்  இன்னும் 90 நாட்கள்!

தமிழகம் முழுவதும் இது போல் வீட்டு வசதி
வாரியம் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கொள்ளை லாபம் அடைந்திருப்பார்களோ?

சந்தேகம் எழுந்துள்ளது.

விட மாட்டோம் !

விவசாயத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் நீர் நிலைகளை காத்திடுவோம்.

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "  மாநில தலைவர் சங்கர் அவர்களை  வாழ்த்தி வணங்குகிறோம்.

ஊழல் ஒழிப்பு செய்தியாளர் :
LAACO நாஞ்சில் K. கிருஷ்ணன்
திருப்பூர்.
10.08.2016

உண்மை சம்பவங்கள்
தொடரும் .. . . .!!

No comments:

Post a Comment