Saturday 29 October 2016

"காந்தியவாதி சசி பெருமாள் அவர்களுக்கு நினைவஞ்சலி "

திருப்பூர் மாவட்டம்  , திருப்பூர் மாநகராட்சி . அலுவலகம் முன் சமூக அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற காந்திய வாதி சசி பெருமாள் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு
அஞ்சலி செலுத்தினோம் .

Saturday 22 October 2016

ஊழல் ஒழிப்பு செய்தி ; 0001

" பொது நல வழக்கு வெற்றி!  வெற்றி!  "

ஊழல் ஒழிப்பு செய்தி - 001
அவசர செய்தி! முக்கிய அறிவிப்பு!!

பொய் வழக்கு ! 
கைது செய்ய திட்டம்!!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் நந்த குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்!!

சமூக ஆர்வலர்  சட்ட. விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில தலைவர் அரியலூர் ரா. சங்கர் அவர்கள் மீது இந்திய தண்டணைச்சட்டப். பிரிவு : 147, 148, 294 b,447,  506 (2)   மற்றும்  P D P P ACT : 4 ன் கீழ்  பொய் வழக்கு பதிவு செய்ததிற்கான காரணம் என்ன?

வாரியை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக அடுக்கு மாடி கட்டிடம் கட்டி வருவது குறித்து புகார் அளித்த காரணத்தினால் திட்ட மிட்டு சங்கர் அவர்களையும் பொய் வழக்கில் இணைத்துள்ளார்கள் .

பொய் வழக்கு பதிவு செய்த கடமை தவறிய  காவல் உதவி ஆய்வாளர் நந்த குமாருக்கு  அமைப்பின் சார்பில் மிகுந்த கண்டணத்தை பதிவு செய்கிறோம்.

சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நாளன்று இரவு ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சங்கர் அவர்கள் மீது திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

பொய் வழக்கினை முறியடிப்போம்.!!

உடனடியாக பொய் வழக்கிலிருந்து விடுவிக்க கோருகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723
அரியலூர் ரா. சங்கர்
உலாபேசி :98655 43303

கடமை தவறிய அரியலூர் காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் எண் :94981 59973
நண்பர்களே!  இவரது எண்ணிற்கு தங்களது கண்டணத்தை அனுப்புங்கள்.
அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி.
குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

வாரிகளை (வாய்க்கால்)  காண வில்லை!!

"உண்மை சம்பவம் "

மனுதாரர் :
R. சங்கர்
மாநில தலைவர்
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
அரியலூர்.

எதிர் மனுதாரர் :

தமிழ் நாடு அரசு வீட்டு வசதி வாரியம்
அரியலூர் மாவட்டம்.

பொருள் : வாரி (வாய்க்கால்)  நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாகவும், வீடுகளாகவும் கட்டி மோசடியாக  விற்பனை செய்து வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாரிகளை மீட்கக் கோரி  சென்னை உயர் நீதி மன்றத்தில்  2014 ஆம் ஆண்டு பொதுநல மனு :

W.P NO : 13092 /2014

"உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு "

28 .07 .2016 அன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல், மற்றும் நீதிபதி மகாதேவன்  அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த மேற்காண் மனுவில் குறிப்பிட்டுள்ள வாரி ஆக்கிரமிப்புகளை மூன்று மாதத்திற்குள் அரியலூர் வட்டாட்சியர் அகற்ற வேண்டும் !!

அரியலூர் மாவட்டத்தில் குரும்பன் சாவடி கிராமத்தில். க..ச. எண் :223, 224, 225, 227, 233, 234, 34/1. ல் உள்ள வாரிகளை காண வில்லை.

அதிர்ச்சி அடைந்த சங்கர் அவர்கள்  எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

இறுதியாக தமிழ் நாடு அரசு வீட்டு வசதி வாரியம் பேஸ் :1,  2, 3 என வீட்டு மனைகளாகவும் வீடுகளாகவும் கட்டி விற்பனை செய்யப்பட்டு வரும் இடம் தான் அவர் தேடிய வாரிகள் என உறுதி செய்தார்கள்.

கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர்,  பொது பணி துறையினர், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், மாவட்ட பதிவாளர்  போன்ற இதற்கு பொறுப்பு வகிக்கும் கடமை தவறிய கேடு கெட்ட அரசூழியர்கள் அனைவரும் கூட்டு களவானிகளே!!

இந்த கூட்டு களவானிகளிடம் பல புகார் அளித்தும் இந்த அயோக்கியர்கள் நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை.

அரசு நிலம் என்று வீடு வாங்கி ஏமாந்த அப்பாவி பொது மக்கள்.

பல லட்சங்களை சம்பாதித்த அதிகாரிகள்.

சமீபத்தில் உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்  நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை என அறிக்கை அளிக்கும் படி உத்தரவு இட்டது.

நீர் நிலைகளை சுற்றிலும் 15 மீட்டர் தூரத்திற்குள் எந்த விதமான கட்டு மானமும் இருக்கக் கூடாது.

இந்த உத்தரவு என்ன ஆனது?

அரியலூர் மாவட்ட ஆட்சியர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

கடமை தவறிய அதிகாரிகள் நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மாட்டார்கள் .

எனவே உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீர் நிலைகளை காக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை கடமை தவறிய அரியலூர்  வட்டாட்சியர்  நிறைவேற்றுவாரா?

கடமை தவறிய அதிகாரிகளை தண்டிப்பது யார்? 

பொறுத்திருப்போம்  இன்னும் 90 நாட்கள்!

தமிழகம் முழுவதும் இது போல் வீட்டு வசதி
வாரியம் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கொள்ளை லாபம் அடைந்திருப்பார்களோ?

சந்தேகம் எழுந்துள்ளது.

விட மாட்டோம் !

விவசாயத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் நீர் நிலைகளை காத்திடுவோம்.

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "  மாநில தலைவர் சங்கர் அவர்களை  வாழ்த்தி வணங்குகிறோம்.

ஊழல் ஒழிப்பு செய்தியாளர் :
LAACO நாஞ்சில் K. கிருஷ்ணன்
திருப்பூர்.
10.08.2016

உண்மை சம்பவங்கள்
தொடரும் .. . . .!!

அரசு அதிகாரிகள் யார் ?

அரசு அதிகாரிகள் யார் ?

யார் இந்த அரசூழியர்கள் ?

பொது மக்களுக்கு இவர்கள் அதிகாரிகளா ? எஜமானர்களா ?

இல்லை ! இல்லை ! இல்லவே இல்லை .!

அப்போ இவர்கள் யார் ?

இவர்கள் அனைவரும் மக்களுக்கு பணி செய்ய நியமிக்கப்பட்டு அரசு ஊதியம் பெறும்  அரசு ஊழியர்கள் தான் !

இவர்களின் பணி என்ன ?

ஒரு அரசு என்பது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் !

மக்கள் நலன் கருதி பல் வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது .!

இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக பல தரப்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .!

இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே .!!

மக்கள் தான் இவர்களுக்கு எஜமானர்கள் .!

மக்களே! நீங்கள் எஜமானர்களாக இருக்கும் போது உங்களின் வேலைக்காரர்களிடம் கை கட்டி  வாய் பொத்தி நிற்க வேண்டுமா ?

தேவை இல்லை .! தேவை இல்லை .!!

மக்களிடம் இருந்து பெறப்படும் பல்வேறு வகையான  வரி இனங்கள் , கட்டணங்களில் இருந்து தான் அரசு அலுவலக செலவினங்களும் , அரசு ஊழியர்களுக்கு ஊதியங்களும் , சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது .!

பணி ஒய்வு பெற்ற பின்னரும் ஒய்வூதியம் வழங்கப்படுகிறது .!

அரசு அதிகாரிகள் என்பவர்கள் அந்தந்த துறைகளில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு தான் அதிகாரிகளே தவிர பொதுமக்களின் அதிகாரிகள் அல்ல !

ஆனால் , நடந்து
கொண்டிருப்பது என்ன ?

அரசு பணியாளர்கள் தங்களை எஜமானர்கள் போல் நினனத்து கொள்கின்றனர் .!

இவர்களை நம்பி வரும்
பொது மக்களை அலை கழித்து மிகவும் கேவலமாக நடத்துகின்றனர் .!

இவர்களுக்கு ஏதோ வானளாவ அதிகாரம் வழங்கப்பட்டு  உள்ளதாக மிரட்டுகிறார்கள் .!

உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக பொய்யான புகார் அளிக்கின்றனர் .!

அரசு வழங்கும் ஊதியங்களையும் , சலுகைகளையும் பெற்றுக் கொண்டு
சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் ஏழை எளிய மக்கள்  நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை .!

மேலும் ,

பொதுமக்களிடம் கையேந்தி லஞ்சம் என்னும் பிச்சை எடுக்கின்றனர் .!

இப்போது இவர்கள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்களை விட மிகவும் மகா கேவலமானவர்கள் .!!

இந்த லஞ்சம் வாங்கி உல்லrrச வாழ்க்கை வாழும் கயவர்களை கண்காணித்து தண்டனை பெற்றுக் தந்து  சிறையில் அடைக்க இவர்களுக்காக ,

மத்திய ,மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகங்கள்(  லஞ்ச ஒழிப்புத் துறை) செயல் பட்டு வருகிறது .

பொது மக்களை அதிகாரம் செய்ய எந்த அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை .!

மக்கள் சாசனப் படி குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் மக்கள் கோரும் சான்றிதழ்களையும் , சலுகைகளையும் வழங்க வேண்டும் .!

உயர் நீதிமன்ற உத்தரவு  படி ,
பொது மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களின் மீது 21.09.2015 நாளிட்ட அரசாணை எண் : 99 ன்  கீழ் முப்பது தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .!

மக்கள் பணி செய்யாத ஊழியர்கள் அனைவரும் கடமை தவறிய கேடு கெட்ட  அலுவலர்களே !

இவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம்  1860 சட்டப் பிரிவு  -166 ன் கீழ் ஒர் ஆண்டு சிறைத் தண்டனை உண்டு .!

உங்கள் வேலைக்காரர்களிடம் நீங்கள் உங்கள் கோரிக்கைக்காக செல்லும் போது அல்லது கடிதம் எழுதும் போது உயர் திரு , மாண்புமிகு ,  தயவு செய்து , தாழ்மையுடன் , தயவுடன் , தயவாய் ,கீழ் பணிந்து , தங்கள் உண்மையுள்ள , கருணையுடன் , கருணை கூர்ந்து , பிரார்த்திக்கிறேன்  , போன்ற யாசக வாசகங்களை உபயோக படுத்த வேண்டாம் .!

அரசு ஊழியர்கள் அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும் போது இவ்வாறான யாசக வாசகங்களை பயன்  படுத்துவது அவர்களின்  வழக்கம் .!

பொது மக்கள் எவரும் இவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியமில்லை .!

பொது மக்கள் தான் இவர்களுக்கு எஜமானர்கள் .!!

எனவே ,

அரசுத் துறை அலுவலகங்களுக்கு உங்கள் தேவைக்காக செல்லும் போது நீங்கள் தான் எஜமானர்கள் என்ற உணர்வுடன் செல்லுங்கள் .!

உங்கள் வேலைக்காரர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து தான் பணி புரிய வேண்டும் .!

அப்போது தான் அவர்கள் என்ன வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என உங்களுக்கு தெரிய வரும் .!

இவர்கள் அனைவரும் அரசு அலுவலக நடைமுறை விதிகளை கண்டிப்பாக கடை   பிடிக்க வேண்டும் .!

தவறும் ஊழியர்கள் மீது சட்ட ரீதியான  ஒழுங்கு நட  வடிக்கை எடுக்க  பரிந்துரைக்கலாம் .!!

லஞ்சம் கேட்டால்
லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்யுங்கள் !

என்ன நண்பர்களே !

யானையின் பலம் யானைக்கு தெரியாது .!

அது போல் நமது பலமும்  ,உரிமையும்  தெரியாமல் தாழ்வு மனப்பான்மையுடன் பலரும் கோழைகளாக சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வருகிறோம் .!

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெரியுங்கள் .!!

தன்னம்பிக்கை கொள்ளுங்கள் .!

நீங்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த சாதனையாளர்கள் தான் .!

நமது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நாம் ஒவ்வொருவருக்கும் கடமையையும் , அதிகாரத்தையும் இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 கோட்பாடு 51(A)ஒ வழங்கியுள்ளது ...........!!!!!!

சட்ட விழிப்புணர்வு பணியில் , பொது நலன் கருதி வெளியிடுவோர் ,

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு ,
363, காந்தி ரோடு , பெரியார் காலனி ,
திருப்பூர் -641 652

நீங்கள் யாரேனும் கடமை தவறிய அரசூழியர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அழையுங்கள் .!!

LAACO நாஞ்சில் K.கிருஷ்ணன்
நிறுவனர்
98655 90723

அரியலூர் R. சங்கர்
மாநில தலைவர்
98655 43303
.

Friday 21 October 2016

ஏன் ? எதற்கு கொடுக்க வேண்டும் லஞ்சம் ?

லஞ்சம் கொடுப்பவர்கள் யார் ?

தன்னம்பிக்கை அற்றவர்கள் .

தங்கள் உரிமையை பற்றி தெரியாதவர்கள் .

எந்த துறைகளில் அணுகுகிறோமோ அந்தந்த துறைகளின் சட்டம் , விதிகள் , வழிகாட்டுதல்கள் பற்றி முழுமையாக அறியாதவர்கள் .

தங்கள் வேண்டுதல் நியாயம் இல்லாதவர்கள் .

போதுமான கால அவகாசம் அளிக்க மறுப்பவர்கள் .

லஞ்சம் தவிர் ! நெஞ்சம் நிமிர் !!

FACT INDIA STICKER

உறுப்பினர் படிவம்

1.  பூர்த்தி செய்த உறுப்பினர்   விண்ணப்ப படிவம்

2. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்  இரண்டு

3 முகவரி ஆதார நகல்

4. ஆண்டு சந்தா என்றால் ரூ.100

5. ஆயுள் சந்தா என்றால்  ரூ 1000

சிறந்த சமூக ஆர்வலர்களுக்கான விருது .

அ முதல் உதவி இயக்க விருதுகள்
வழங்கியவர் பாரத ரத்னா அப்துல் கலாம்  அவர்களின் பேரன்   ஷேக் சலீம் அவர்கள் .

கண் தானம் செய்யுங்கள்

எனது தாயின் கருவிழிகள் தானம் செய்யப்பட்டுள்ளது .
நாள்: 20.04.2013

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
பதிவு எண் ;10/2015

Legal awareness and anti corruption organisation
பதிவு எண்: 44/2015

தலைமை அலுவலகம் :

363, காந்தி ரோடு ,
பெரியார் காலனி ,
திருப்பூர் -641652
திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா
மின்னஞ்சல்; nanjillaacot@gmail.com
http//nanjillaacot.blogspot.com
LAACO TV

நாஞ்சில் கோ கிருஷ்ணன் நிறுவனர்
உலா பேசி ;98 655 90 723

அரியலூர் ரா.சங்கர்
மாநிலத்தலைவர்
உலா பேசி; 98 655;43 303