Friday 10 March 2017

ஊழல் ஒழிப்பு செய்தி; 0017 சமூக ஆர்வலர் படு கொலை!!

📢 ஊழல் ஒழிப்பு செய்தி :0017 /09.03.2017

👉 குற்றம் நடந்தது என்ன?

சமூக ஆர்வலர் அடித்து கொலை!!

😥😢😥😥😥😥😥😥😥

நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்!

நிகழ்விடம் :
வட்டாட்சியர்  அலுவலகம் எதிரில்
அவிநாசி வட்டம்
திருப்பூர் மாவட்டம்.

கொலை செய்யப்பட்டவர் யார்?

சமூக ஆர்வலரும் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மேற்கு மண்டல தலைவராக திறம்பட செயலாற்றி வந்த திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தை சேர்ந்த திரு. சாய் லோகநாதன் அவர்கள்.

கொலை செய்தவர்கள் யார்?

அவிநாசி வட்டாட்சியர் அலுலகத்தில் ✍செக்சன் ரைட்டராக பணி புரிந்து வந்த லஞ்ச பேய் கார்த்தியாயினி மற்றும் அவரது குடிகார கணவன் ஸ்ரீதர்.

செக்சன் ரைட்டர் என்பவர் அரசு பணியாளர் இல்லை!
ஆம்.  வட்டாட்சியரால் நியமிக்க படும் இடைதரகர் தான்.

இந்த செக்சன் ரைட்டர்கள் பல அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் மூலம் தான் லஞ்ச பணம் வசூல் செய்யப்படுகிறது.

யார் இந்த  சாய்லோகநாதன்,?

அவரது மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார்கள்.

அவரது ஒரே மகளும் திருமணமாகி சென்று விட்டார்.

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரில் செயல் படும் வழக்கறிஞர்கள் அலுவலகத்தில்  தான் தங்கி இருந்தார்கள் .

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு இலவசமாக 📝விண்ணப்பம் எழுதி கொடுப்பதுடன் லஞ்சம் கொடுக்காமல் அவர்களது தேவைகளை நிறை வேற்றி வந்தார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம்  மூலம் பல ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பல லஞ்ச அதிகாரிகளை சிறைக்கு அனுப்பியுள்ளார்.

61 வயதிலும்  இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் செயல் பாடுகளை மிகவும்  சுறு சுறுப்பாக செய்து வந்தார் .

படு கொலை செய்ய காரணம் என்ன,?

அவிநாசி வட்டாட்சியர்  அலுவலகத்தில் செக்சன் ரைட்டராக பணியாற்றி வந்த கார்த்தியாயினி என்பவர் பெண் மனுதாரர் ஒருவரிடம் பட்டா மாறுதல் செய்ய ₹ 2000 லஞ்சமாக பெற்று கொண்டு பட்டா மாறுதல் செய்து வழங்கவில்லையாம் .

பல முறை அலைகழிக்கப்பட்ட அந்த பெண் மனுதாரர் சாய் லோகநாநன் அவர்களிடம் முறையிட்டுள்ளார் .

எனவே சாய் லோகநாதன் அவர்கள் அந்த பாதிக்கப்பட்ட மனுதாரரை அழைத்து கொண்டு வட்டாட்சியரிடம் குற்ற விசாரணை முறை சட்டம் 2(4) ன் கீழ் புகார் செய்துள்ளார்.

வட்டாட்சியர் அவர்கள் செக்சன் ரைட்டர் கார்த்தியாயினியை அழைத்து  திட்டி உள்ளார்.

எனவே அழுது கொண்டே அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த கார்த்தியாயினி தனது கணவர் ஸ்ரீதர் என்பவரை  மொபைல் போனில் அழைத்து இந்த கிழவன்  தாசில்தாரிடம் போட்டு கொடுத்து விட்டான் உடனே வந்து இவனை போட்டு தள்ளி விடு என கூறி உள்ளார்.

வட்டாட்சியர் அலுவலகம் அருகே வாடகை வேன் ஓட்டி வரும் அவரது கணவன் காலை நேரத்தில்  மது போதையில் வந்துள்ளான்.

வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த சாய் லோக நாதனை நோக்கி ஆவேசமாக வந்த கார்த்தியாயினியும் அவரது கணவரும் சேர்ந்து ஏண்டா கிழட்டு நாயே உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நீ தாசில்தாரிடம் போட்டு கொடுப்பாய் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் பேசி  இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

09.03.2013 அன்று காலை பத்து மணி அளவில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில்  நடந்த சம்பவத்தை பலர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்துள்ளார்கள்.

அய்யோ என்னை அடிக்கிறான் காப்பாத்துங்கள் என கதறிய போதும் ஈவு இரக்கமற்ற ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை.

சரமாரியாக தாக்கப்பட்டு  மயக்க நிலையில் கிடந்த சாய் லோகநாதன் அவர்களை  ஒரு சிலர் மீட்டு அவிநாசி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரது நிலமை கவலை கிடமாக இருந்த காரணத்தினால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

தாக்கப்படும் போது
அவரது செல்போனில் பதிவான ஆடியோ விபரங்களை காவல் துறையினரிடம் கொடுத்த காரணத்தினால் கொலைகாரன் கைது செய்யப்பட்டான்.

இந்த செய்தியினை கேட்ட எங்கள் இதயம் சுக்கு நூறாகி போனது.

லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவரை லஞ்ச பேய் அடித்தே கொலை செய்த சம்பவம் எங்கள் மனதை விட்டு நீங்க வில்லை.

லஞ்சம் ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம்  இதன் காரணமாக வீறு கொண்டு எழுந்துள்ளது.

பல லஞ்ச பேய்களை கண்காணித்து   வருகிறோம்.  கேடு கெட்ட லஞ்சம் என்னும் மலம் தின்னும் பல கயவர்களை பற்றிய தகவல்களை சேகரித்து  லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு  தெரிவித்து வருகிறோம்.

பல லஞ்ச பேய்கள் சிறைகளில்..

பல்லாயிரகணக்கான லஞ்ச பேய்கள் சுதந்திரமாக உல்லாசமாக பதவி உயர்வுகள் பல பெற்று அரசு துறைகளில் பணியாற்றி வருவது வேதனை அளிக்கிறது.

விடமாட்டோம் இந்த கயவர்களை!

பல சாய் லோகநாதன்கள் உருவாகி கொண்டிருக்கின்றனர்.

சாய்லோகநாதன் அவர்களின்
நான்காம் ஆண்டு நினைவு தினத்தினை  இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பிலும்,
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு சார்பிலும்  நினைவு கூறுகிறோம். 🙏

என,
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு

செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
☎உலாபேசி :98655 90723

உண்மை சம்பவங்கள் தொடரும்.  ,.,!!

No comments:

Post a Comment