Monday 28 November 2016

ஒரு செய்தியால் ஊழலை ஒழிக்க முடியுமா ?

லஞ்சம் தவிர்!                   நெஞ்சம் நிமிர்!!

            "FACT INDIA "

" ஊழல் ஒழிப்பு செய்தி "  மாத இதழ்

  ஒரு செய்தியால் ஊழலை ஒழிக்க முடியுமா?

ஊழலை ஒழிக்க அனைத்து அரசுத்துறைகளிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இது  தவிர மத்திய, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் எங்கேயாவது கண்காணித்து ஊழல் நடை பெறுவதை முன்னரே  தடுத்துள்ளார்களா?

ஊழல் நடை பெற்ற பின்னரே இந்த ஊழலால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்ற புள்ளி விபரத்தை  தெரிவிக்கின்றனர் .

பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவன் எல்லாம் நாட்டில் சுதந்திரமாகவும், பாது காப்பாகவும் உள்ளான்.

அவன் மீது போடப் பட்ட வழக்கு முடுடிவுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆவதால் அவன் தண்டணை பெறுவதற்குள் சுக போகமுடன் வாழ்ந்து மடிந்து போகிறான்.
அந்த வழக்கும் அவனுடன் குழி தோண்டி புதைக்கப் பட்டு விடுகிறது.

லஞ்சம் வாங்குகிறவனை பற்றி புகார் தெரிவித்தால் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க  வேண்டுமாம்.

ஆதாரம்  இருந்தால் தான் அவனை கைது செய்ய முடியுமாம்.
 
லஞ்சம் வாங்குகிற எவனாவது  ஆதாரத்துடன் லஞ்சம் வாங்குவானா?

என்ன முட்டாள் தனம்?

இந்திய இறையாண்மையை தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையின் மூலம்  நாட்டில் நடை பெற்று வரும் "லஞ்சத்தையும் " "ஊழலையும் "  வெளிச்சம் போட்டு காட்டும் நோக்கத்துடன்  இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் சார்பில் "ஊழல் ஒழிப்பு செய்தி " மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.

குற்றம் நடந்தது என்ன.?

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

குற்றம் நடக்க இருப்பது என்ன ?

உண்மை சம்பவங்கள்!!

லஞ்சம், ஊழல் மட்டுமின்றி சமுதாய சீர் கேடுகளையும், சமுதாய அவலங்களையும்,  சட்ட விரோத,  தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துபவர்களையும், கடமை தவறிய அரசு ஊழியர்களையும்,  பொது இடையூறு,  மற்றும் பொது மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தி கொண்டிருப்பவர்களையும் 

உள்ளது உள்ள படி தகுந்த ஆதாரங்களுடன்   வெளிச்சத்திற்கு கொண்டு வர

ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழின்   செய்தியாளர்   என்ற முறையில் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்ற கடமை பட்டுள்ளேன்.

எனது   தகவல்கள் அனைத்தும் "ஊழல் ஒழிப்பு செய்தி "    என்ற தலைப்பில்  விரைவில்   முக நூல், வாட்ஸ் அப், இணைய தளம், மூலமாக வெளி வர இருக்கிறது.

இதில் பலரின் முகத்திரை கிழியும்!

ஊழல் வாதிகள் அடையாளம் காட்டப்படுவார்கள்!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!

ஊழலுக்கு விடை கொடுப்போம் !!

இனி மாற்றம் என்பது சொல் அல்ல!  செயல்!

அன்புடன் ,
LAACO. நாஞ்சில் K. கிருஷ்ணன் .
மொபைல் எண் :     98655 90723

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "

"இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு "

No comments:

Post a Comment