Sunday 27 November 2016

இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்- 2009 அரசாணை

குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்  - 2009  அரசாணை (நிலை) எண்  : 9

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் மற்றும் வாய்ப்பு  மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகள் அனைவரும் கல்வி பயிலும் நோக்கத்துடன் தான் இந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது .

இந்தச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் குழந்தைகளிடம் எந்தவிதமான எழுத்து தேர்வு அல்லது வாய் மொழி தேர்வு , தகுதி தேர்வு  எதையும் பள்ளிகள் நடத்தக் கூடாது .

எந்த விதமான கட்டணங்களையும் இந்த குழந்தைகளிடம் இருந்து பள்ளிகள் வசூலிக்க கூடாது .

L..K. G . வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகள் எட்டாவது வகுப்பு வரையிலும் கல்வி பயிலலாம் .

ஒவ்வொரு ஆங்கில வழி தனியார் பள்ளிகளும் ஆண்டு தோறும் 25 சதவீதம் மாணவர்களை  இலவச கல்வி பயில இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் .

இந்த 25 சதவீதம் மாணவர்களின் கல்வி கட்டணங்களை அரசே பள்ளிகளுக்கு செலுத்தும் .

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்கும் குழந்தைகளும் இலவச கல்வி பயில முடியும் .

L. K .G . வகுப்பில் மட்டுமே குழந்தைகளை சேர்க்க முடியும் .

தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடித்த குழந்தைகள் எந்த பள்ளி களில் வேண்டுமானாலும்  ஆறாம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலலாம் .

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது .

ஆங்கில வழிக் கல்வி ஏழைகளின் கனவு .

இது உங்கள் அருகாமையில் உள்ளது.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கனவை நிறைவேற்றுங்கள் .

இந்த சட்டம் குறித்தோ அல்லது இலவச கல்வி உங்கள் குழ்ந்தைகளுக்கு மறுக்கப் பட்டாலோ  , பள்ளிகள் கட்டணம் வசூலித்தாலோ  புகார் மற்றும்  ஆலோசனை  அல்லது வழிகாட்டுதல் பெற தொடர்பு கொள்ளுங்கள் .

நாஞ்சில் K கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 , காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர்  - 641 652

செல் ; 98655 90723


No comments:

Post a Comment