Monday 28 November 2016

ஒரு செய்தியால் ஊழலை ஒழிக்க முடியுமா ?

லஞ்சம் தவிர்!                   நெஞ்சம் நிமிர்!!

            "FACT INDIA "

" ஊழல் ஒழிப்பு செய்தி "  மாத இதழ்

  ஒரு செய்தியால் ஊழலை ஒழிக்க முடியுமா?

ஊழலை ஒழிக்க அனைத்து அரசுத்துறைகளிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இது  தவிர மத்திய, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் எங்கேயாவது கண்காணித்து ஊழல் நடை பெறுவதை முன்னரே  தடுத்துள்ளார்களா?

ஊழல் நடை பெற்ற பின்னரே இந்த ஊழலால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்ற புள்ளி விபரத்தை  தெரிவிக்கின்றனர் .

பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவன் எல்லாம் நாட்டில் சுதந்திரமாகவும், பாது காப்பாகவும் உள்ளான்.

அவன் மீது போடப் பட்ட வழக்கு முடுடிவுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆவதால் அவன் தண்டணை பெறுவதற்குள் சுக போகமுடன் வாழ்ந்து மடிந்து போகிறான்.
அந்த வழக்கும் அவனுடன் குழி தோண்டி புதைக்கப் பட்டு விடுகிறது.

லஞ்சம் வாங்குகிறவனை பற்றி புகார் தெரிவித்தால் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க  வேண்டுமாம்.

ஆதாரம்  இருந்தால் தான் அவனை கைது செய்ய முடியுமாம்.
 
லஞ்சம் வாங்குகிற எவனாவது  ஆதாரத்துடன் லஞ்சம் வாங்குவானா?

என்ன முட்டாள் தனம்?

இந்திய இறையாண்மையை தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையின் மூலம்  நாட்டில் நடை பெற்று வரும் "லஞ்சத்தையும் " "ஊழலையும் "  வெளிச்சம் போட்டு காட்டும் நோக்கத்துடன்  இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் சார்பில் "ஊழல் ஒழிப்பு செய்தி " மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.

குற்றம் நடந்தது என்ன.?

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

குற்றம் நடக்க இருப்பது என்ன ?

உண்மை சம்பவங்கள்!!

லஞ்சம், ஊழல் மட்டுமின்றி சமுதாய சீர் கேடுகளையும், சமுதாய அவலங்களையும்,  சட்ட விரோத,  தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துபவர்களையும், கடமை தவறிய அரசு ஊழியர்களையும்,  பொது இடையூறு,  மற்றும் பொது மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தி கொண்டிருப்பவர்களையும் 

உள்ளது உள்ள படி தகுந்த ஆதாரங்களுடன்   வெளிச்சத்திற்கு கொண்டு வர

ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழின்   செய்தியாளர்   என்ற முறையில் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்ற கடமை பட்டுள்ளேன்.

எனது   தகவல்கள் அனைத்தும் "ஊழல் ஒழிப்பு செய்தி "    என்ற தலைப்பில்  விரைவில்   முக நூல், வாட்ஸ் அப், இணைய தளம், மூலமாக வெளி வர இருக்கிறது.

இதில் பலரின் முகத்திரை கிழியும்!

ஊழல் வாதிகள் அடையாளம் காட்டப்படுவார்கள்!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!

ஊழலுக்கு விடை கொடுப்போம் !!

இனி மாற்றம் என்பது சொல் அல்ல!  செயல்!

அன்புடன் ,
LAACO. நாஞ்சில் K. கிருஷ்ணன் .
மொபைல் எண் :     98655 90723

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "

"இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு "

Sunday 27 November 2016

இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்- 2009 அரசாணை

குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்  - 2009  அரசாணை (நிலை) எண்  : 9

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் மற்றும் வாய்ப்பு  மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகள் அனைவரும் கல்வி பயிலும் நோக்கத்துடன் தான் இந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது .

இந்தச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் குழந்தைகளிடம் எந்தவிதமான எழுத்து தேர்வு அல்லது வாய் மொழி தேர்வு , தகுதி தேர்வு  எதையும் பள்ளிகள் நடத்தக் கூடாது .

எந்த விதமான கட்டணங்களையும் இந்த குழந்தைகளிடம் இருந்து பள்ளிகள் வசூலிக்க கூடாது .

L..K. G . வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகள் எட்டாவது வகுப்பு வரையிலும் கல்வி பயிலலாம் .

ஒவ்வொரு ஆங்கில வழி தனியார் பள்ளிகளும் ஆண்டு தோறும் 25 சதவீதம் மாணவர்களை  இலவச கல்வி பயில இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் .

இந்த 25 சதவீதம் மாணவர்களின் கல்வி கட்டணங்களை அரசே பள்ளிகளுக்கு செலுத்தும் .

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்கும் குழந்தைகளும் இலவச கல்வி பயில முடியும் .

L. K .G . வகுப்பில் மட்டுமே குழந்தைகளை சேர்க்க முடியும் .

தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடித்த குழந்தைகள் எந்த பள்ளி களில் வேண்டுமானாலும்  ஆறாம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலலாம் .

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது .

ஆங்கில வழிக் கல்வி ஏழைகளின் கனவு .

இது உங்கள் அருகாமையில் உள்ளது.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கனவை நிறைவேற்றுங்கள் .

இந்த சட்டம் குறித்தோ அல்லது இலவச கல்வி உங்கள் குழ்ந்தைகளுக்கு மறுக்கப் பட்டாலோ  , பள்ளிகள் கட்டணம் வசூலித்தாலோ  புகார் மற்றும்  ஆலோசனை  அல்லது வழிகாட்டுதல் பெற தொடர்பு கொள்ளுங்கள் .

நாஞ்சில் K கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 , காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர்  - 641 652

செல் ; 98655 90723


Sunday 13 November 2016

நாம் யார் ? நமது அதிகாரங்கள் என்ன ?

யார் இந்த அரசு அதிகாரிகள் ?

யார் இந்த வக்கீல்கள்   ?

யார் இந்த நீதிபதிகள் , நீதிமன்றங்கள்?

காவல் துறையினர் யார் ?

காவல் துறையினரின் கடமை என்ன ?

லஞ்சம் என்னும் பிச்சை வாங்கும் பிச்சைக்காரர்கள் மற்றும் மோசடிப் பேர்வழிகள் யார் ? யார் ?

நீங்கள் யார் ? உங்களது அதிகாரங்கள் என்ன ?

லஞ்ச ஒழிப்பு துறையினர் யார் ?

Saturday 12 November 2016

ஆன் லைனில் கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்துவது எப்படி ?

Dear Bharatgas customer, for convenient refill booking and cashless payment, register on my.ebharatgas.com and book your refill with online payment option.

நீங்கள் பாரத் கேஸ் வாடிக்கையாளரா ?

இனி மேல்  டோர் டெலிவரி செய்யும் டெலிவரி மேனுக்கு லஞ்சம் கொடுக்க தேவை இல்லை .

சிலிண்டர் டெலிவரியின் போது பணம் செலுத்த வேண்டியதில்லை .

ஆம் ,

உங்கள் மொபைல் போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைனில்  பணம் செலுத்தும் வசதி .

my.ebharatgas.com

வெப் சைட் ஒப்பன் செய்தால் Click here to OTP   கேட்கும் அதை கிளிக் செய்தால்   கேஸ் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP பதிவு எண் குறுஞ் செய்தி வரும் .

அந்த எண்ணை வெப் சைட்டில் பதிவு செய்தால் ,

SIGN IN ,

LOGIN ID :

PASS WORD :

கொடுத்தால்  உங்கள் வங்கி கணக்கில் இருந்து கேஸ் சிலிண்டருக்கான கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கும் .

சிலிண்டர் தேவைப்படும் போது ஆன் லைனில் புக்கிங் செய்து ஆன் லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம் .

நண்பர்களே ,

பில் தொகையை விட கூடுதலாக 50 ரூபாய் வரையிலும் டெலிவரி மேனுக்கு கொடுத்து இருப்பீர்கள் .

சிலிண்டர் டெலிவரி செய்யும் போது டோர் டெலிவரி சார்ஜ் , அல்லது ஆட்டோ வாடகை என நீங்கள் ஒரு ரூபாய் கூட லஞ்சம்  கொடுக்க வேண்டாம் .

ஏன் என்றால் டோர் டெலிவரி கட்டணமாக ரூபாய் 18.40 சேர்த்து ஒவ்வொரு பில்லின் போதும் வசூலிக்கிறார்கள் .

டெலிவரி மேன் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் .

கேஸ் நிகர எடை , 14. 200
சிலின்டர் எடை ,  15 .700 அல்லது சிலிண்டருக்கு சிலிண்டர் மாறுபடும் .

சிலிண்டரின் மேல் பகுதியில் Net weight ,Grass weight   குறிப்பட பட்டிருக்கும் .

ஒவ்வொரு டெலிவரியின் போதும் எடை அளவை பரிசோதனை செய்து வாங்கவும் . (தராசு கொன்டு வந்து எடை போட்டு காண்பிக்க வேண்டும் )

உங்கள் கண் முன்னால் சிலிண்டர் சீல் உடைத்து கேஸ் அடுப்பில் இணைத்து எரிய வைத்து கேஸ் கசிவு எதுவும் இல்லை என உறுதி செய்த பிறகே டெலிவரி மேன் செல்ல வேண்டும் .

மிகவும் சேதமான சிலிண்டரை வாங்க வேண்டாம் . கேஸ் கசிவு இருக்கலாம் .

சிலிண்டர் டெலிவரியின் போது உங்கள் வீடு பூட்டபட்டிருந்தால் டோர் சிலிப் ஒட்டி செல்ல வேண்டும் .

ஒவ்வொரு சிலிண்டருக்கும் காப்பீடு செய்ய படுகிறது .

சிலிண்டர் டெலிவரியின் போது எந்த பொருட்களையும் வாங்க தேவை இல்லை .

புதிய கேஸ் இணைப்புக்கு
ஒரு சிலிண்டருக்கு வைப்பு தொகையாக 1450  ம் இரண்டு சிலிண்டருக்கு வைப்பு தொகை 2900 மட்டும் செலுத்தினால் போதும் .

ஆன் லைன் மூலம் பணம் செலுத்தாதவர்களும் பில் தொகையை விட கூடுதல் கட்டணம் செலுத்த தேவை இல்லை .

முழு விபரங்களுக்கும் , புகாருக்கும்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

நாஞ்சில் K. கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 , காந்தி ரோடு ,
பெரியார் காலனி ,
திருப்பூர் -641 652

செல் ;98655 90723

தொடர்பு கொள்ளும் நேரம் தினமும் இரவு 9.30 முதல் 10.30 வரை .



Sunday 6 November 2016

மத்திய அரசு அலுவலகங்களில் நடை பெறும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து புகார் செய்ய வேண்டிய முகவரி :

லஞ்சம் ஊழல் குறித்து  புகார் செய்வது எப்படி ?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசுத்துறை அலுவலகங்கள் , வங்கிகள் , பொதுத்துறை நிறுவனங்களில் நடை பெற்று வரும் லஞ்சம் மற்றும்  ஊழல் குறித்து புகார் செய்ய வேண்டிய முகவரி ;

C B I 

Central Bureau Of Investigation
N0: 4 A- Wing Rajaji Bhavan
Near Besant Nager Bus Stop
Besant Nager
CHENNAI - 600 090

Fight against corruption: Complaints about central government offices / banks / public sector units.  Please contact SP CBI, ACB, Chennai.  Call : 044-28273186 / 28270992 or SMS : 9445674567 or send e mail to hobacchn@cbi.gov.in - BSNL.

Thursday 3 November 2016

பாஸ்போர்ட் பெறுவது எப்படி ?

ஆன் லைனில் பாஸ்போர்ட் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் .?

www.passportindia.gov.in

என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் ?

முழு விபரம் இணைப்பில் ...............