Sunday 8 January 2017

ஊழல் ஒழிப்பு செய்தி:0011நாட்டில் நடை பெறும் குற்றங்களுக்கு முக்கிய காரணம் யார்? ஊழல் ஒழிப்பு செய்தி :011

ஊழல் ஒழிப்பு செய்தி :0011 / 07.01.2017

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

குற்றவாளிகள் யார்?

நாட்டில் நடை பெறும்
கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி, லஞ்சம், ஊழல், ஆக்கிரமிப்பு, பாலியல் வன் கொடுமைகள், விவாக ரத்துகள்  சட்டம் ஒழுங்கு சீர் கேடுகள் என அனைத்திற்கும் காரணம் யார்?

இவர்கள் நினைத்தால் நாட்டில் இது போன்ற நிகழ்வுகளை முற்றிலும்  தடுக்க முடியும்!

யார் இவர்கள்?

இவர்கள் ஒரு பெரும் கூட்டமாக உள்ளனர்!

ஆம்.
இவர்களை
சட்ட வல்லுநர்கள்,
சட்ட மேதைகள்
வக்கீல்கள்
வழக்கறிஞர்கள்
வழக்குரைஞர்கள்
அட்வ கேட்டுகள்
லாயர்கள்
கிரிமினல் லாயர்கள்
சட்டத்தை கரைத்து குடித்தவர்கள்
சட்ட புலமை பெற்றவர்கள்
சட்டத்தை வில்லாக வளைப்பவர்கள்
வாத திறமையினால் பொய்யை உண்மையாக்குவார்கள்.
என மக்கள் இவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும்  வைத்துள்ளனர்.

சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று பட்டங்கள் பல  பெற்று நீதியை நிலை நாட்டி   சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் சிறந்த சட்ட வல்லுநர்களாக. உள்ளனர்.

வழக்கறிஞர் அவையில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழில் செய்யும் இவர்கள் சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மன்றம் மூலம்  தகுந்த பாதுகாப்பும் , இழப்பீடுகளையும் பெற்று தர வேண்டும்.

இதனை ஒரு சேவை தொழிலாக தான் செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் கட்டண சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குறைந்த கட்டணத்தையே ஊதியமாக பெற வேண்டும்.

ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?

இதில் பலர் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களாக மாறி விட்டனர்.

சட்டம் பயின்று சட்ட விரோதமாக செயல் படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

பல நிரபராதிகள் ஆயுள் கைதிகளாய் சிறைச்சாலைகளில் அல்லல் படுகின்றனர் .

இவர்களை நாடி வருபவர்களை தங்கள் கட்சிக்காரர்கள் என்கின்றனர்.

அந்த கட்சிக்காரர்கள் குற்றவாளிகள், கொலை காரர்கள் என தெரிந்தும்  கூலிக்கு ஆசைப்பட்டு பொய்யர்களாக மாறி குறுக்கு வழிகளையும், பொய் சாட்சிகளையும் உருவாக்கி தனது வாத திறமையினால் குற்ற வாளிகளை நிரபராதியாக்கி சட்டத்தின் பிடியில் இருந்து  தப்பிக்க வைக்கின்றனர்.

ஒரு சிலர் கட்ட பஞ்சாயத்து, மோசடி  செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து மாட மாளிகைகளுடன் உல்லாசமாக வாழ்கின்றனர்.

இவர்களை நாடி வருபவர்கள் நேர்மையானவரா? அல்லது குற்றவாளிகளா என்பது  அவர்களுக்கு அன்றைய தினமே தெரிந்து விடும்.

இவர்கள் நினைத்தால் அந்த குற்றவாளிகளை கைது செய்து சிறைக்கு அனுப்ப முடியும்.!

அவ்வாறு செய்தால் குற்றம் செய்பவர்கள் திருந்தி விடுவார்கள். பயப்படுவார்கள்.

நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்து நாடு சுபிட்சம் பெறும்.

ஆனால்  இவர்களின் வாழ்வாதாரம் கருதி சேவை தொழிலை பொய் தொழிலாக்கி இவர்களும் பொய்யர்களாக மாறி உள்ளனர்.

வழக்கறிஞரான மகாத்மா காந்தி அவர்கள்  வக்கீல் தொழில்  விபச்சார தொழிலை விட மிகவும்  இழிவானது என குறிப்பிட காரணம் என்ன?

பெரியார் அவர்கள்  வழக்கறிஞர்களை ஆண் விபச்சாரிகள் என குறிப்பிட காரணம் என்ன?

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள் பொய்யர்கள் / திருடர்கள் என குறிப்பிட காரணம் என்ன?

நேர்மையானவர்களுக்கு மட்டும் தான் உதவி செய்வேன்! குற்ற வாளிகளுக்கு  துணை போக மாட்டேன் என வழக்கறிஞர்கள் அனைவரும் முடிவு செய்து விட்டால் நாட்டில்  நடை பெறும் அனைத்து  சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் முடிவுக்கு வந்து விடும்.

செய்வார்களா?

இது நடக்குமா?

நடக்கும்.

குற்றவாளிகளுக்கு  ஆதரவாக செயல் படும் வழக்கறிஞர்களுக்கும், பொய் வழக்கு பதிவு செய்யும்  காவலர்களுக்கும், பொய்யான தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும்  சட்டத்தின் முன்   தண்டனை வழங்க  வேண்டும்.

வழக்கறிஞர்களினால் பாதிக்கப்பட்ட. பல அப்பாவி ஏழை மக்கள் நம்மிடம் சட்ட உதவி கேட்டு கண்ணீருடன்  நாடி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காசுக்காக நிரபராதிகளுக்கு தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர்களே !
கருணை கொள்ளுங்கள்.

என,
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்.
செல்  :98655 90723

உண்மை சம்பவங்கள் தொடரும்., . . .!

Thursday 5 January 2017

மருத்துவர்களின் சேவை குறைபாடுகள் குறித்த புகாருக்கு :

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பணி புரியும் மருத்துவர்களிடம்  சிகிச்சை பெற வருகிறவர்களுக்கு  ஏதேனும் சேவை குறைபாடுகள் அல்லது  இழப்பீடுகள் ஏற்பட்டாலோ ,
அல்லது
போலி மருத்துவர் என தெரிய வந்தாலோ புகார் செய்ய வேண்டிய முகவரி :

தலைவர்
தமிழ் நாடு மெடிக்கல் கவுன்சில்,
DMS வளாகம்,
தேனாம் பேட்டை,
சென்னை -600 018

மருத்துவர்கள் மருத்துவ கவுன்சிலில்  பதிவு செய்யப்பட்ட பதிவு எண் கொண்ட சான்றிதழை அவர்கள் பணிபுரியும் இடத்தில் கண்டிப்பாக சிகிச்சை பெற வருகிறவர்களுக்கு தெரியும் வகையில் வைத்திருக்க வேண்டும்.

தரமற்ற காலாவதியான, பக்கவிளைவுகள் ஏற்படுத்துகிற மருந்துகள் குறித்த புகாருக்கு :

மருத்துவமனைகள்,அல்லது  மருந்தகங்களில் கொடுக்கபடும் தரமற்ற, காலாவதியான.  மருந்துகளினாலும் ஒவ்வாமை ஏற்பட்டாலோ  அல்லது ஏதேனும் உடல் நல பாதிப்பு  ஏற்பட்டாலோ அந்த மருந்துடன்  புகார் செய்ய வேண்டிய முகவரி :

தமிழ் நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்,
மருந்து கட்டுபாட்டுத்துறை,
262, 263 அண்ணா சாலை,
சென்னை 600 006

தொலை பேசி :
044 -24321337 ;
044 -24995068

இரயில்வே துறை சார்ந்த புகாருக்கு :

இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏதேனும்   கால தாமதம்,  இடையூறுகள்,  இழப்பீடுகள் போன்ற ஏதேனும்  குறை பாடுகள் ஏற்பட்டால் புகார் செய்ய வேண்டிய முகவரி :

துணை பொது மேலாளர்
பொது மக்கள் குறைகள்
தென்னக ரயில்வே
சென்னை -600 003

தொலை பேசி :
044 25352830 ; 25322512

வலைதளம் :
www.srailway.com
www.irsuggestion.org

இ -மெயில் :adpg@sr.railnet.gov.in